Advertisment

கொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா?

சமுக அளவிலான பரவலைக் நிவர்த்தி செய்வதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகின்றன. இந்தியாவின் யுக்திகள் என்ன? அது எழுப்பும் கேள்விகள் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா வைரஸ் : இந்தியாவில் பரிசோதனை மையங்கள் போதுமானவையா?

கொரோனா வைரஸ் நோயுடன் (கொவிட்-19) தொடர்பு கொள்ளாத,கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு பயண வரலாறு இல்லாத இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகளை பரிசோதனை செய்யப்போவதாக,  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த வெள்ளியன்று அறிவித்தது. சமுக அளவிலான பரவலைக் கண்டறியும் சோதனை 'தவிர்க்கமுடியாதது' என்றும் தெரிவித்துள்ளது.

Advertisment

சுகாதார அமைச்சகமும் கடந்த வாரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா தனது முதல், சமூக அளவிலான  கொரோனா வைரஸ் (ஆக்ராவல்) வழக்கினை பதிவு செய்துள்ளதாக தெரிவித்தது.

சமுக அளவிலான பரவலைக் நிவர்த்தி செய்வதற்காக (அ) தடுப்பதற்காக பல்வேறு நாடுகள் பல்வேறு யுக்திகளை பயன்படுத்துகின்றன. இந்தியாவின் யுக்திகள் என்ன? அது எழுப்பும் கேள்விகள் என்ன? என்பதனை இங்கே காணலாம்.

சமுக அளவிலான பரவல் என்றால் என்ன? எளிமையாகச் சொல்லவேண்டுமெனில், சமூகத்தில் ஒரு வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என்று எடுத்துக்கொள்வோம். எவ்வாறாயினும், பயண வரலாறு இல்லாத (உதாரணமாக, சீனா, இரான்) அல்லது பாதிக்கப்பட்ட நபர்களுடன் நேரடி தொடர்பு  இல்லாதவர்களுக்கும், வரும் வைரஸ் பாதிப்பை அளவிடுவது தான் சமுக அளவிலான பரவல் என்பதாகும்.

சமூக தொலைவு (Social Distancing) மற்றும் பொதுக்கூட்டங்களை தவிர்த்தல் போன்ற தற்போதைய முயற்சிகளும் இந்த சமுக அளவிலான பரவலை கட்டுபடுத்தும் நோக்கில் தான் உள்ளது.

ஏனெனில், சமூக அளவிலான பரவல் தொடங்கியதும், தொடர்புகளைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். உதாரணமாக, தென் கொரியாவில் ஒரு பெண் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சோதனையை மறுத்துவிட்டார். பின்னர், இவர் மூலம் 160-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தொற்று பரவியது கண்டறியப்பட்டது.

இந்தியாவில் நிலைமை என்ன ? இந்தியாவில் பதிவான பெரும்பாலான கொரோனா வைரஸ் வழக்குகள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. உதாரணமாக கேரளா, டெல்லி போன்ற மாநிலங்கள்.

அல்லது,வெளிநாடு சென்று வந்த ஒருவரை தொடர்புக் கொண்டதினால், சிலர் கொரோனா வைரசால் பாதித்துள்ளனர்.  எடுத்துக்காட்டாக, ஜெய்ப்பூரில் வந்திறங்கிய இத்தாலிய சுற்றுலாப் பயணி மூலம், இந்திய ஓட்டுனர் உட்பட 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.

மறுபுறம், ஆக்ராவில் இருந்து வரும் தகவல்கள் இதற்கு நேர்மறையாக உள்ளது. அங்கு, வெளிநாடுகளுக்கு பயணம் செய்த வரலாறு இல்லாத, பாதிக்கப்பட்ட நபருடன் நேரடியாக தொடர்பு கொள்ளாத ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த வாரம் வெளியிட்ட  அறிக்கையில், “பயணம் தொடர்பான கொவிட் 19 வழக்குகளை கண்காணிப்பதோடு, சமூக அளவிலான பரவல் நிகழ்வுகளும் தென்படுகிறது (ஆக்ரா வழக்கு). மாவட்டம் ,தொகுதி மற்றும் கிராம வாரியாக விரைவு மீட்புக் குழுக்களை உருவாக்க மாவட்ட ஆட்சியாளர்களையும், மாநில அரசுகளையும் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.  பின்னர், இணைச் செயலாளர் லாவ் அகர்வால், இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த சமூக அளவிலான பரவல் என்பதற்கு உள்ளூர் பரவல் என பொருள் கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

உள்ளூர் அளவிலான பரிமாற்றம், என்பது உலக சுகாதார அமைப்பால் வரையறுக்கப்பட்ட மற்றொரு நிலை. நாட்டிற்குள் பாதிக்கப்பட்ட ஒருவரின் (இவருக்கு, பயணம் மூலமாகவோ (அ) பயணம் சென்று திரும்பியவர்கள் மூலமாவோ வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும்) நேரடி தொடர்பு மூலம் வைரஸ் பரவலை கண்டறிவது இதன் நோக்கமாகும்.  உதரணமாக, ஆக்ராவில், இத்தாலிக்கு பயண வரலாற்றைக் கொண்ட இரண்டு பேர் மூலம் அவர்கள் குடும்பத்தாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று  பரவியது. அதிகாரிகள், பின்னர், அந்த குடும்பத்தை சுற்றி 3 கி.மீ சுற்றளவில் உள்ள அனைத்து மக்களுக்கும், வீடு வீடாக சென்று கொரோனா வைரஸ் சோதனை மேற்கொண்டனர்  (ஏனெனில், இது உள்ளூர் அளவிலான பரவல்).

 

இந்தியாவின் சமீபத்திய நடவடிக்கையின் மூலம், தனியார் சோதனை மையங்கள் முக்கியத்துவம் பெறுகிறதா?

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கான சிகிச்சை, தனிமைப்படுத்தும் செயற்பாடு தொடர்பான இயக்க விதிமுறைகளை உருவாக்க இந்திய அரசு, தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தாலும், கொரோனா வைரஸ் சோதனை செயல்முறையை தனியார் துறைகளுக்கு அனுமதிப்பதற்கான எந்த நடவடிக்கையும் இந்திய அரசு எடுக்கவில்லை.

தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்ட முயற்சிக்கலாம் என்ற கருத்து அரசிடம் உள்ளது. எவ்வாறாயினும்,"தொற்று பரவுவதலை தவிர்க்கும்" ஒரு நடவடிக்கையாக கொரோனா வைரஸ் சோதனை செயற்பாட்டை, அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கின்றது. இது தொழில்நுட்பத்தின் கேள்வி அல்ல; தனியார் துறையை அனுமதிப்பதால், மக்கள் அதிகமாக கூடும் இடங்களிளெல்லாம் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைப்பிடிப்பது மிகவும் கடினமானது.

அனைத்து மட்டங்களிலும் (மருத்துவ ஊழியர்கள், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களின் பாதுக்காப்பு) நெறிமுறைகள் தேவைப்படுகிறது”என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்போது, கொரோனா வைரஸ் தொடர்பான ஐ.சி.எம்.ஆர் செய்யும் சோதனைகள் அனைத்தும் நோயாளிகளுக்கு இலவசம். இதற்கு பணம் செலுத்த வேண்டியிருந்தால், இரண்டு சோதனைகளும் ரூ .5.000 வரை செலவாகும். எனவே, அரசாங்கம் தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்தாலும், அனைவருக்கும் பயன் தராது என்பதை புரிந்து கொள்ளலாம்.

தனியார் துறைக்கு சோதனையைத் அனுமதித்து, அதிகமான மக்களை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவதற்கு  பதிலாக, தற்போதுள்ள நடைமுறையை பின்தொடரலாம் என்று அரசு முடிவு செய்துள்ளது. (சோதனை முடிவு வர கால தாமதமானாலும், தனிமைப்படுத்தும் அறையில் தங்க வைத்து கண்காணிக்கப்படுகிறார்.)

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில்? சீனா (80,000 க்கும் மேற்பட்ட வழக்குகள்), இத்தாலி (21,000 க்கும் மேற்பட்டவை) மற்றும் தென் கொரியா (8,000) போன்ற நாடுகள் சமூக அளவிலான பரவலைக் கண்டுள்ளன.

தென் கொரியாவில் நடைமுறையில் இருக்கும் இலவச சோதனை செயற்பாட்டை  விட, இத்தாலி நாடு கடைபிடுக்கும் யுக்தியை பின்பற்ற இந்தியா தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.

இத்தாலி, ஒட்டுமொத்த நாட்டையே தனிமைபடுத்தி விட்டது.    கடைகள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டு, தனிப்பட்ட இயக்கத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஸ்பெயினும் தனது குடிமக்களைத் தனிமை படுத்துவதற்கான  திட்டங்களை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் பிரான்ஸ் பல இடங்களை இழுத்து மூடியுள்ளது. இந்த நாடுகளில் வழக்குகள் இன்னும் ஏறிக்கொண்டே இருக்கின்றன.

இதற்கிடையில், தென் கொரிய அரசு ஒரு துப்பறிவாளன் போல்  செல்போன் மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான மக்களை சோதித்து  கண்காணிக்கிறது.

வெகுஜன இலவச சோதனை மற்றும் சிகிச்சையால், அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கணிசமாக குறையத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, பிப்ரவரி 29ம் தேதியன்று 909 புதிய வழக்குகள் பதிவான அந்நாட்டில், மார்ச் 15ம் தேதியன்று வெறும் 100க்கும் குறைவான வழக்குகள் மட்டுமே பதிவாகின.

135 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய நாட்டில், இலவச சோதனைக்கு ஏராளமான வளங்கள் தேவைப்படும். 1 லட்சம் சோதனை செய்வதற்கான வேதியல் பகுப்பாய்வு இந்தியாவில் உள்ளது. இதுவரை 6,000 மக்களுக்கு மேல் சோதனை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 2 லட்சம் சோதனை கருவிகளை வாங்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. ஆனால் வெகுஜன சோதனை செய்வதற்கான கட்டாயம் எழுந்தால்,இவை அனைத்தும் கடலில் ஒரு துளி அளவுதான்.

அமெரிக்கா கூகுள் துணை நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து  ஒரு வலைத்தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா மக்களுக்கு கொரோனா வைரஸ் சோதனை தேவையா? என்பதை தீர்மானிக்க இந்த  வலைத்தளம் உதவும் என்று கூறப்படுகிறது.

COVID-19 ஐ சமாளிப்பதற்கான இந்தியாவின் மூலோபாயத்தில் வேறு என்ன இருக்கிறது?

இந்தியா, தனிமைப்படுத்துதல்  மற்றும் கிளஸ்டர் கட்டுப்பாட்டை நம்பியுள்ளது. சுகாதார அமைச்சரால் உருவாக்கப்பட்ட தொற்றுநோய் கட்டுப்பாட்டுத் அறிக்கையில் “தொற்று நோய் கண்டறியப்பட்ட ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள், கிளஸ்டர் கட்டுப்பாட்டு திட்டத்தை நடைமுறை படுத்துவதன் மூலம், புதிய பகுதிகளுக்கு பரவுவதலைத் தடுக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது .

தனிமைப்படுத்தல் செயற்பாட்டின் மூலம்  நோய் பரிமாற்ற சங்கிலி  உடைக்கப்படுகிறது. ஏற்கனவே, ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்த்தின் கீழ் 43,000 க்கும் மேற்பட்ட நபர்கள், தற்போது சமூக கண்காணிப்பில் உள்ளனர் எனபது குறிப்பிடத்தக்கது.

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment