Advertisment

முதியவர்களை மட்டும் குறிவைத்து கோவிட் 19 வைரஸ் தாக்குவது ஏன்?...

உயர் ரத்த அழுத்தம், நீ்ரிழிவு, சிறுநீரக கோளாறுகள் கொண்ட 85 வயதிற்கு மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடில், கோவிட் -19 அவர்களின் உயிரை நிச்சயம் காவு வாங்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, coronavirus latest updates, covid 19, why does coronavirus kill more elderly people, elderly people more at risk from coronavirus, express explained, indian express, children coronavirus

coronavirus, coronavirus latest updates, covid 19, why does coronavirus kill more elderly people, elderly people more at risk from coronavirus, express explained, indian express, children coronavirus

உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் -19 வைரஸ், பெரும்பாலும் வயதில் மூத்தவர்களையே அதிகம் தாக்குகிறது. இதய நோய் உள்ளிட்டவைகளால் முதியவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதும், இதற்கு ஒரு காரணமாக அமைவதாக லூசியானா பல்கலைகழக பேராசிரியர் ஜேம்ஸ் தியாஜ் தெரிவித்துள்ளார். 85 வயதிற்கு மேற்பட்டவர்களையே இந்த வைரஸ் அதிகம் பாதிப்பதாக அமெரிக்க தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

கோவிட் 19 பாதிப்பிற்கு முதியவர்கள் ஏன் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்?.

அமெரிக்காவின் லூசியானா பல்கலைகழகத்தின் பொது சுகாதாரத்துறை பேராசிரியர் ஜேம்ஸ் தியாஜ், டிராவல் மெடிசின் என்ற ஜெர்னலில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவிட் -19 வைரஸ் பெரும்பாலும், இதய நோய்கள், ஹைபர் டென்சன், நீரிழிவு, சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்களையே அதிகளவில் தாக்குகின்றன.

அபரிமிதமான உயர் ரத்த அழுத்தம், கரோனரி தமனி நோய்கள், இதய குறைபாடு, ஆஞ்சியோடென்சினை மாற்றும் நொதி தடுப்பான்கள், அதிக வயது கொண்ட நீரிழிவு நோயாளிகள் உள்ளிட்டோருக்கு உரிய சிகிச்சை எப்போதும் தேவைப்படும். கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் இந்த சூழ்நிலையில், அவர்களுக்கு அதி தீவிர கண்காணிப்பு அவசியமாகிறது.

இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதை விலங்குகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம் தெரியவந்தது.

இதே மாதிரி மனிதர்களுக்கும் பொருந்துமா.

angiotensin-converting enzyme inhibitors (ACEIs) and angiotensin receptor blockers (ARBs) இணைந்து ACE2 receptorsகளை உருவாக்குகின்றன. இந்த ரிசப்டார்கள், SARS CoV and SARS-CoV-2 வைரசின் வெளிப்புற புரத பகுதியில் ஒட்டிக்கொள்கின்றன.

கோவிட் -19 நோயாளிகளின் கீழ்ப்புற சுவாச பாதையில், SARS-CoV-2 வைரசின் S புரத பகுதி, ACE2 ரிசப்டாருடன் இணைகின்றன. வைரஸ் ACE2 ரிசப்டாருடன் இணைகின்றன. இதனால், வைரஸ் எளிதாக நோயாளியின் நுரையீரலுக்குள் எளிதில் நுழைய முடிகின்றது. இதனால், நோயாளிக்கு நிமோனியா மற்றும் சுவாசக்கோளாறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு ஏற்படுகின்றன.

சீனாவில் 2019 டிசம்பர் 11 முதல் 2020 ஜனவரி 29 வரையிலான காலகட்டத்தில் 1,099 கோவிட் -19 நோயாளிகளுக்கு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த நோயாளிகளுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கரோனரி தமனி நோய்கள், சுவாச கோளாறுகள் உள்ளிட்டவை இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் ஐசியுவில் கண்காணிக்கப்பட்டு செயற்கை முறையில் சுவாசம் அளிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

உயர் ரத்த அழுத்தம், நீ்ரிழிவு, சிறுநீரக கோளாறுகள் கொண்ட 85 வயதிற்கு மேற்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிடில், கோவிட் -19 அவர்களின் உயிரை நிச்சயம் காவு வாங்கும் என்று தியாஜ் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குழந்தைகளுக்கு இந்த அறிகுறிகளுக்கு ஏற்றவாறு நோய் எதிர்ப்பு சக்தி உருவாவதினால், அவர்களின் கீழ்ப்புற சுவாசு குழாய்களில் உள்ள ACE2 receptorsகளில், இந்த கோவிட்-19 வைரசின் புரதம் இணைய வாய்ப்பு இல்லாமல் போகிறது. இதன்காரணமாக, கொரோனா வைரசின் புரதம், நோயாளியின் நுரையீரலை அடைய முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.

இதன்காரணமாகவே, குழந்தைகள், இளைய வயதினரை காட்டிலும், வயது அதிகமானோர்க்கு கோவிட் -19 தொற்று அதிகமாக ஏற்படுவதாகவும், இது அவர்களின் உயிரை பறிக்கும் அளவிற்கு இருப்பதாக ஜேம்ஸ் தியாஜ் தனது ஆய்விதழில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment