Advertisment

Explained: வீட்டிலேயே முக கவசம் செய்யலாம் - எந்த துணி சரியானது?

பயன்படுத்துவதற்கு முன்பு, 5 நிமிடம் கொதிக்கும் நீரில் துணியை நன்கு வாஷ் செய்து, அதை நன்கு உலர வைக்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Home made face mask for corona virus

Home made face mask for corona virus

ஆரோக்கியமான நபர்களுக்கு முக கவசம் தேவையில்லை என்று பல வாரங்கள் அறிவுறுத்திய பின்னர், “வீட்டில் தயாரிக்கப்பட்ட முக கவசம் தனிப்பட்ட சுகாதாரத்தை பேணுவதற்கான ஒரு சிறந்த முறை” என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும் “கொரோனா வைரஸால் பாதிக்கப்படாத அல்லது சுவாசிப்பதில் பிரச்னையுள்ள நபர்கள், வெளியில் செல்லும் போது, மீண்டும் பயன்படுத்தக் கூடிய, முக கவசங்களை பயன்படுத்தலாம்” என்றும் தெரிவித்திருக்கிறது. இந்தியாவின் புதிய நிலைப்பாடு, அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) போன்றது.

Advertisment

கொரோனா தனிமைப்படுத்தல் : ரஜினிகாந்த், அமிதாப், பிரியங்காவின் ‘ஃபேமிலி’ குறும்படம்!

இந்திய அரசாங்கத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலம் வெளியிட்ட அறிவிப்பில், “முகம் மற்றும் வாய்க்கான பாதுகாப்பு கவசம், பருத்தி துணியால் வீட்டில் தயாரிக்கப்பட்டதாக” இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ”முகத்தை மறைக்க பயன்படுத்தப்பட்ட எந்த பருத்தி துணியையும் பயன்படுத்தலாம். துணியின் நிறம் ஒரு பொருட்டல்ல. ஆனால் பயன்படுத்துவதற்கு முன்பு, 5 நிமிடம் கொதிக்கும் நீரில் துணியை நன்கு வாஷ் செய்து, அதை நன்கு உலர வைக்க வேண்டும். இந்த நீரில் உப்பு சேர்க்க பரிந்துரைக்கப்படுகிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதற்கு மாற்றாக, “ஆண்களின் பருத்தி கைக்குட்டையையும்” முகத்தை மறைக்கப் பயன்படுத்தலாம்.

இதற்கிடையில், டி-ஷர்ட்டில் "முகத்தை மூடும் துணியை" உருவாக்க சி.டி.சி அறிவுறுத்துகிறது. மாற்றாக, அதன் மடிப்புகளுக்கு இடையில் ஒரு காபி வடிகட்டியுடன், பெரிய கர்ச்சீப் (அல்லது சதுர பருத்தி துணி சுமார் 20 x 20) பயன்படுத்தப்படலாம் என்றும் கூறுகிறது.

பல பொருட்களை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட சமீபத்திய சோதனைகளின் முடிவுகளை பொறுத்தவரை, "வேக்கும் கிளீனர் பைகள், 600 தலையணை பெட்டிகளின் அடுக்குகள், மற்றும் ஃபிளானல் பைஜாமாக்களைப் போன்ற துணி ஹெப்பா வடிப்பான்களும் துகள்களை நன்றாக வடித்து, நல்ல மதிப்பெண் பெற்றன. “அடுக்கு காபி வடிப்பான்கள் நடுத்தர மதிப்பெண்களைப் பெற்றன”,  “தாவணி மற்றும் பெரிய கர்ச்சீப் மிகக் குறைந்த மதிப்பெண்களைக் கொண்டிருந்தன, ஆனால் சிறிய அளவிளான துகள்களை இவைகள் ஃபில்டர் செய்திருந்தன.

சென்னையில் மட்டும் 110 பேர்: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்

நினைவில் கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள் என்னவென்றால், பருத்தி துணி சுத்தமானதாகவும், நியாயமான தடிமனாகவும் இருக்க வேண்டும். மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ஸ்காட் செகல் விளக்கத்தின்படி,  “துணியை ஒரு பிரகாசமான வெளிச்சம் ஊடுருவும் படி வைத்திருங்கள். இழைகள் வழியாக ஒளி மிகவும் எளிதாக கடந்து, உங்களால் கிட்டத்தட்ட இழைகளைக் காண முடிந்தால், அது நல்ல துணி அல்ல. அடர்த்தியான நெசவு மற்றும் ஒளி அதைக் கடந்து செல்லவில்லை என்றால், அதுதான் நீங்கள் பயன்படுத்த வேண்டிய துணி” என்கிறார். உங்கள் முகமூடியின் துணி வைரஸ் துகள்களைப் பிடிக்க போதுமான அடர்த்தியாக இருக்க வேண்டும், அதே நேரத்தில் போதுமான மூச்சு விடவும் எளிதாக இருக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”.

Coronavirus Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment