Advertisment

ஹைட்ராக்ஸி குளோரோகுயின்: கொரோனா பாதிப்புக்கு பயன்படுத்தலாமா?

தொற்று உள்ளவர்களை ஈசிஜி பரிசோதனையின் போது ஏற்படும் வெப்ப மாறுதல்களும் கணக்கில் கொள்ளப்பட்டது. இந்த மாறுபாடே, இதயத்துடிப்பில் மாற்றத்தை நிகழ்த்தி மரணத்துக்கும் வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus covid-19, coronavirus malaria drug, hydroxychloroquine , hcq coronavirus, coronavirus hcq drug, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus covid-19, coronavirus malaria drug, hydroxychloroquine , hcq coronavirus, coronavirus hcq drug, coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில் உள்ள கொரோனா தொற்று உள்ளவர்களில் 50 ஆயிரம் பேருக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்க மும்பை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டிருந்தார். முன்னதாக 1 லட்சம் பேருக்கு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. பின் மத்திய அரசின் அறிவுறுத்தலின்பேரில், கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு மட்டும் இந்த மருந்தை வழங்க அனுமதிக்கப்பட்டிருந்ததால், இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டது.

Advertisment

ஹாட்ஸ்பாட்களில் உள்ளவர்களை தவிர்த்து, மும்பையில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கும் வழங்க மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. முன்னதாக, ராஜஸ்தானில் உள்ள ஹாட்ஸ்பாட்களில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசாருக்கு ராஜஸ்தான் அரசு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்ராக்சிகுளோராகுயின் என்றால் என்ன?

மலேரியா நோய்க்கும், நோய் எதிர்ப்பு சக்தியின் குறைவால் ஏற்படும் முடக்குவாதம் மற்றும் தோல் அழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்கும் வகையில் வாய்வழியாக தரப்படும் மருந்தே ஹைட்ராக்சிகுளோரகுயின் ஆகும். 1940ம் ஆண்டு முதல் வைரஸ் எதிர்ப்பு தன்மையால், இந்த மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்பேரில் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் மூலம் கிடைத்த முடிவுகளின்படி கொரோனா பாதித்த நபர்களுக்கு சிகிச்சைக்காக இந்த ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த மருந்து, வைரஸின் செல் சுவரில் உள்ள அமிலத்தன்மையை குறைத்து அதன் பல்கிப்பெரும் தன்மையை அடியோடு தடுத்து விடுகிறது.

2005ம் ஆண்டில் சார்ஸ் நோய் சிகிச்சைக்கு இந்த மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால், எலியில் நடத்தப்பட்ட சோதனையில், எதிர்பார்த்த முடிவுகளை இந்த மருந்தால் தர இயலவில்லை.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மற்றும் குளோரோகுயின் மருந்துகள், கொரோனா சிகிச்சையில் எதிர்பார்த்த பலனை வழங்கவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் குறிப்பிட்ட நபர்கள் அதாவது, கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கும் அல்லது ஆய்வகத்தில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவரின் வீட்டில் இருப்பவர்களுக்கு வழங்க அறிவுறுத்தியுள்ளது.

publive-image

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தை அதிகபட்சமாக எத்தனை பேருக்கு வழங்கலாம், இதனால் ஏதாவது பக்கவிளைவுகள் ஏற்படுமா என்பது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் கேள்விகளை எழுப்பியது.

மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், மருத்துவ பணியாளர்களை தவிர்த்து மற்றவர்களுக்கும் வழங்குவது குறித்து அவர்களே தன்னிச்சையாக முடிவு எடுக்க அனுமதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் சுகாதாரத்துறை, ஹாட்ஸ்பாட் பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள போலீசாருக்கு இந்த மருந்தை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவின் முடிவு என்ன?

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ள நிலையில், தாராவி முதல் வொர்லி கோலிவடா சேரிப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு இந்த மருந்து வழங்க உத்தேசிக்கப்பட்டது. பின் இந்த மருந்து ஆயிரம் பேருக்கு மட்டும் வழங்க தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் டாக்டர்கள், நிடி ஆயோக் நிபுணர்கள், மகாராஷ்டிரா பல்கலைகழகத்தின்ங சுகாதார அறிவியல் துறை அதிகாரிகள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இணைந்து உள்ள குழு,ஏப்ரல் 13ம் தேதி, எவ்விதமான மருத்துவ கொள்கை மேற்கொள்வது என்பது தொடர்பாக வீடியோ கான்பரன்சிங்கில் விவாதித்தது. இதில் ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துடன் வைட்டமின் சி மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று சிலரும், ஹைட்ரோகுளோரோகுயின் மருந்துடன் ஜிங்க் மாத்திரைகளை வழங்க வேண்டும் என்று சிலரும் வலியுறுத்தினர். இந்த 2 தேர்வுகளில் எதில் நல்ல முடிவுகள் வரும் என்பதை கண்டறிய திட்டமிடப்பட்டது.

15 வயதிற்குட்பட்டவர்கள், இதய நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோருக்கு இந்த மருந்து வழங்கப்படவில்லை. அதேபோல், சேரிப்பகுதிகளில் வசிப்போருக்கும் தகுந்த பரிந்துரையின்றி இந்த மருந்து வழங்கப்படவில்லை. இந்த மருந்து உட்கொண்ட 55 வயதிற்கு மேற்பட்டோரின் உடல்நிலை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டது.

மும்பை காவல்துறையில் பணியாற்றும் சிலருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையடுத்து, அவர்களுக்கு ஹைட்ரோகுளோரோகுயின் + வைட்டமின் சி மாத்திரை இணைந்து வழங்கப்பட்டது.

மும்பையில் 2018-19 ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஒரு சதுர கிலோமீட்டரில், 26,453 பேர் வசிக்கின்றனர் சேரிப்பகுதிகளில் இதன் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். தாராவி பகுதியில், 10க்கு 10 அறையில் குறைந்தது 5 முதல் 8 பேர் வரை இருப்பர். சில இடங்களில் 50 பேர் வரை இருக்க வாய்ப்புண்டு. இத்தகைய இடங்களில் தனிமனித இடைவெளி என்பதற்கு சாத்தியமே இல்லை. கொரோனா ஹாட்ஸ்பாட் பகுதிகளில், இந்த ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து ஒரு தடுப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என்று மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பு நடவடிக்கை திட்டங்களை வகுத்தவர்களுள் ஒருவரான டாக்டர் சுபாஷ் சலுங்கே தெரிவித்துள்ளார். தாராவி பகுதியில் அதிகளவில் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், அவர்களில் அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து வழங்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக குறைக்கப்பட்டது குறித்து மும்பை மாநகராட்சி ஆணையர் பர்வீன் பர்தேசி கூறியதாவது, இது சோதனை நடவடிக்கையே ஆகும் என்று கூறியுள்ளார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களுக்கே இந்த மருந்து தரப்பட உள்ளது. இதில் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து ஆராயப்பட்ட பின்னரே மற்றவர்களுக்கு இது வழங்கப்படுமா இல்லயா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று துணை கமிஷனர் சுரேஷ் ககானி தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து கொரோனா பாதிப்பை குணப்படுத்துமா அல்லது பாதிப்பின் வீரியத்தை மட்டும் குறைக்குமா என்பது குறித்த ஆதாரம் இல்லை. இருந்தபோதிலும் அதன் பின்விளைவுகள் குறித்து நாம் ஆராயவேண்டியுள்ளது. இந்த மருந்து எதற்கும் தீர்வாக அமையாது என்று எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். இந்த மருந்து உட்கொள்பவர்களுக்கு இதயத்துடிப்பு சீராக இருக்காது என்று குலேரியா குறிப்பிட்டுள்ளார்.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்திற்கு பிரான்ஸ் அரசு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இந்த மருந்து வழங்கப்பட்ட கொரோனா பாதிப்பு கொண்டவர்களுக்கு இதய நோய் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்களின் மேற்பார்வையில் அதுவும் மருத்துவமனையிலேயே இந்த மருந்து வழங்கப்பட வேண்டும். உடனடியாக பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த நடவடிக்கை என பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.

ஹைட்ரோகுளோரோகுயின் மருந்து உட்கொண்ட சிலருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாகவும் மயோ கிளினிக் இதய நோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

தொற்று உள்ளவர்களை ஈசிஜி பரிசோதனையின் போது ஏற்படும் வெப்ப மாறுதல்களும் கணக்கில் கொள்ளப்பட்டது. இந்த மாறுபாடே, இதயத்துடிப்பில் மாற்றத்தை நிகழ்த்தி மரணத்துக்கும் வழிவகுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் லாங்கோன் பல்கலைகழக ஆய்வின் படி, கொரோனா தொற்று உள்ள 84 பேருக்கு ஹைட்ரோகுளோரோகுயின் உடன் அசித்ரோமைசின் ஆன்ட்டிபயாடிக் இணைந்து வழங்கப்பட்டது. இந்த காம்பினேசனை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பரிந்துரைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வில், 30 சதவீத நோயாளிகளுக்கு ஈசிஜி பரிசோதனையின்போது வெப்ப மாறுபாடு சாதாரண நிலையை விட அதிகரித்தது. 11 சதவீத பேருக்கு, அரித்மியா குறைபாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment