Advertisment

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு - அமல்படுத்தப்படுமா தொற்றுநோய்கள் சட்டம்?.

1897 Epidemic diseases act : காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்கள் பரவலை தடுக்க தொற்றுநோய்கள் தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது போன்று, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்த சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid-19, epidemic diseases act 1897, coronavirus cses in india

coronavirus, covid-19, epidemic diseases act 1897, coronavirus cses in india

காலரா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் நோய்கள் பரவலை தடுக்க தொற்றுநோய்கள் தடுப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது போன்று, கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்த சட்டம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Advertisment

மார்ச் 11ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர்களின் கூட்டத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க 1897 தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் 2வது பிரிவை மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில், தற்போதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு 60 பேர் உள்ளாகியுள்ளனர். சர்வதேச அளவில் 1,19,100 பேருக்கு இதன் பாதிப்பு உள்ளது. இந்த நோய்க்கு 4,300 பேர் பலியாகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

தொற்றுநோய் தடுப்பு சட்டம், இதுவரை பன்றிக்காய்ச்சல், காலரா, டெங்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பரவலின் போது, அதன் பாதிப்பை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டிருந்தது.

1897 தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் வரலாறு

1890ம் ஆண்டில் பாம்பே பிரசிடென்சி பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோய்க்கு பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர். அப்போதைய காலனி அரசு, தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பிளேக் நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தியதோடு, அவர்களது வீடுகள், உடைமைகளை அழித்தது.

இந்த சட்டத்தின் மூலம், துஷ்பிரயோகம் நிகழ அதிகம் வாய்ப்பு இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் அப்போது கருத்து தெரிவித்திருந்தனர்.

1897ம் ஆண்டில், தொற்றுநோய்கள் தடுப்பு சட்டம் வகுக்கப்பட்டது. பிளேக் நோய் ஏற்பட்டிருந்தபோது அதுதொடர்பாக கேசரி மற்றும் மராத்தா பத்திரிகைகளில் சர்ச்சை கருத்துகளை தெரிவித்ததற்காக, சுதந்திர போராட்ட தியாகி பால கங்காதர திலக்கிற்கு இந்த சட்டத்தின் அடிப்பிடையில், 18 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

1897 தொற்று நோய்கள் சட்டத்தின் விதிகள்

1897 தொற்று நோய்கள் சட்டம், நான்கு பகுதிகளை கொண்டது. உயிர்க்கு ஆபத்தாக இருக்கும் தொற்று நோய்களிலிருந்து தகுந்த பாதுகாப்பை அளிப்பதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

தொற்று நோயின் பாதிப்பை பொறுத்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களே மேற்கொண்டு தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்துதல்

மாநிலத்தின் ஒரு பகுதியில் தொற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனே துவக்குதல், நோய் பரவலுக்கு காரணமாக காரணிகளை அறிந்து முன்கூட்டியே தடுத்தல், தொற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்ததுதல், இதற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுக்கூட்டம் நடத்துதல், துண்டுப்பிரசுரம் விநியோகித்தல், பாதிப்பு ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களின் உடைமைகளை அழிக்க நேரும் பட்சத்தில் அதற்கு நிவாரணம் வழங்குதல் உள்ளிட்டவைகளை தாங்களாகவே மேற்கொள்ள வேண்டும்.

தொற்று நோய் பாதிப்பு கண்டறிந்த நபரை, மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி, அவர்களுக்கு தனியாக குடில்கள் அமைத்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்தல், அவர்களுக்கு மற்ற ஏதாவது தொற்று உள்ளதா என்பதை கண்டறிதல்.

இந்த சட்டத்தை பின்பற்றாதவர்களுக்கு தக்க அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை ஒதுக்குபவர்களுக்கு இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் 188 பிரிவின் படி தண்டனை அளிக்கவும் வழிமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுக்கு சட்டப்பூர்வமான பாதுகாப்பு வழங்கவும் வழிவகை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுவரை எத்தனை முறை அமல்

2015ம் ஆண்டில் சண்டிகர் பகுதியில், மலேரியா மற்றும் டெங்கு பாதிப்பு அதிகளவில் இருந்த நிலையில், இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாதவர்களுக்கு ரூ.500 வரை அபராதமும் விதிக்கப்பட்டது.

2018ம் ஆண்டில், குஜராத் மாநிலம் வாகோடியா தாலுகாவில் உள்ள கேட்கர்ம்ஷியா கிராமத்தில், காலரா தொற்று அதிகமாக இருந்த நேரத்தில், வதோதரா மாவட்ட கலெக்டர், 1897 தொற்றுநோய் சட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவித்திருந்தார்.

2009ம் ஆண்டில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், பன்றிக்காய்ச்சல் பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில், open screening centreகள் அமைக்கப்பட்டன. அதேபோன்று, பன்றிக்காய்ச்சல், அபாயகரமான உயிர்க்கொல்லி நோய் என்றும் பிரகடனம் செய்யப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment