கொரோனா பாதிப்பு - முதன்முறையாக ஒரேநாளில் 1 லட்சத்துக்கு மேற்பட்ட சோதனைகள்

Corona tests : தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திராவில், 2400க்கும் குறைவான அளவிலேயே பாதிப்புகள் உள்ளநிலையில், அங்கு 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட அளவில் சோதனைகள் நடைபெற்றுள்ளது...

Amitabh Sinha

இந்தியாவில் கடந்த 17ம் தேதி முதல், தினமும் புதிதாக 5 ஆயிரம் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தில் இது 3500 முதல் 3800 என்ற விகிதத்தில் இருந்தது. நேற்று ( மே 19ம் தேதி) மட்டும் புதிதாக 5200 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ

கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு அதிகளவிலான சோதனைகள் மேற்கொள்ளப்படுவதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கையும் சீரான அளவில் அதிகரித்து வருகிறது.

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்ததற்கு, ஊரடங்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள தளர்வுகளையும் காரணங்களாக சொல்ல வேண்டும். மக்கள் தற்போது பொதுவெளிகளில் அதிகமாக நடமாடிவருவதால், அவர்களாலும் புதிதாக பலருக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக பீகார் மற்றும் ஒடிசா மாநிலங்களை சொல்லலாம். பீகார், ஒடிசா மாநிலங்களை சேர்ந்தோர், பல்வேறு மாநிலங்களில் இருந்து மீண்டும் தங்களது மாநிலங்களுக்கு திரும்பியுள்ள நிலையில், அங்கு புதிதாக கொரோனா பாதிப்பு கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களில், மற்ற மாநிலங்களிலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

இந்தியாவில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா சோதனைகளின் அளவு கணிசமான அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், கொரோனா தொற்று உள்ளவர்களில் பலர் அறிகுறிகள் இல்லாதநிலையிலேயே உள்ளனர். இவர்களால் தான் மற்றவர்களுக்கும் அதிகளவில் கொரோனா தொற்று ஏற்படுகிறது. இவர்களை சோதனையின் மூலமே கண்டறிய முடியும் என்பதால், சோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொரோனா சோதனைகளின் அளவு சீராக அதிகரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 17ம் தேதி, முதல்முறையாக ஒரேநாளில் ஒரு லட்சம் மாதிரிகள் சோதனைகள் செய்யப்ப்பட்டன. 18ம் தேதி 1.08 லட்சம் மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நாட்டில் இதுவரை 2.5 மில்லியன் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத் , டெல்லி மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதை போன்று, அங்கு சோதனைகளும் அதிகமான அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. தெலுங்கானாவில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள நிலையிலும், அங்கு போதுமான அளவிற்கு கொரோனா சோதனைகள் நடத்தப்படவில்லை.

 

தெலுங்கானா மாநிலத்தில் மே 14ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1600 என்ற அளவில் உள்ளது. ஆனால் அங்கு 22,842 என்ற அளவிலேயே சோதனை நடைபெற்றுள்ளது. இது கொரோனா பாதிப்பு 100விட குறைவாக உள்ள சட்டீஸ்கர் , அசாம் மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனைகளை விட குறைவு ஆகும்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1300 பேர் பாதிப்பு ( 96 ஆயிரம் சோதனைகள்), ஒடிசாவில் 1000 பேருக்கு பாதிப்பு ( 1 லட்சத்துக்கு மேல் சோதனைகள்), ஹரியானாவில் 964 பாதிப்புகள் தான், ஆனால், சோதனைகளோ 80 ஆயிரத்துக்கு மேல் நடத்தப்பட்டுள்ளன.

தெலுங்கானாவின் அண்டை மாநிலமான ஆந்திராவில், 2400க்கும் குறைவான அளவிலேயே பாதிப்புகள் உள்ளநிலையில், அங்கு 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட அளவில் சோதனைகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close