Advertisment

கொரோனா பாதிப்பு: பெங்களூரின் நிலை ஏன் கவலை அளிக்கிறது?

பெங்களூரில் சிகிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை 43,000 ஐத் தாண்டியுள்ளன. புனே தவிர வேறு எந்த நகரிலும் (75,000), இத்தகைய எண்ணிக்கை காணப்படவில்லை.

author-image
WebDesk
New Update
கொரோனா பாதிப்பு: பெங்களூரின் நிலை ஏன் கவலை அளிக்கிறது?

ஜூன் இறுதி வரை இந்தியாவின் மிகக் குறைந்த பாதிப்புக்கு உள்ளான நகரம் என்று கருதப்பட்ட  பெங்களூர், தற்போது நாட்டின் மூன்றாவது பாதிப்பைக் கொண்ட நகரமாக உருவெடுத்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை, பெங்களூரில் உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு மும்பையை விட அதிகரித்தது. கொரோனா பாதிப்பில் புனே, புதுடெல்லி போன்ற பெருநகரங்களுக்கு பின்னால் பெங்களூர்  உள்ளது.

Advertisment

தற்போது வரை, பெங்களூரில் 1.7 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஒரு காலத்தில், அனைவரையும் பயமுறுத்திய மும்பை பெருநகரின் தற்போதைய பாதிப்பு எண்ணிக்கை 1.69 லட்சமாக உள்ளன.

ஜூலை மாதத்திலிருந்தே கர்நாடகாவில் தொற்று பரவலின் வளர்ச்சி விகிதம் அதிகரித்த  தொடங்கியது. ஜூன் மாத இறுதியில், மும்பையின் பாதிப்பு எண்ணிக்கை 80,000 ஐ நெருங்கிய போது, பெங்களூரின் பாதிப்பு எண்ணிக்கை  4,500 என்ற அளவில் இருந்தன. ஆனால், அதன்பிறகு பெங்களூரில் பாதிப்பு விழுக்காடு அதிகரிக்கத் தொடங்கின.

கர்நாடகா மாநிலத்தின் மொத்த பாதிப்புகளில்  (4.59 லட்சம்) 40 சதவீத பாதிப்புக்கு பெங்களூர் நகரம் காரணமாக உள்ளது. தற்போது, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின்  எண்ணிக்கை 43,000 ஐத் தாண்டியுள்ளன. புனே தவிர வேறு எந்த நகரிலும் (75,000), இத்தகைய எண்ணிக்கை காணப்படவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவருபவர்களின் மொத்த எண்ணிக்கை 47,012  என்ற அளவில் தான் உள்ளன குறைவாக உள்ளது. சென்னை மாநகரில் இந்த எண்ணிக்கை 10,393 என்ற அளவில் உள்ளது.

 

கடந்த சில நாட்களாக, பெங்களூரின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3,500க்கும் அதிகமாக உள்ளன. புனே,  டெல்லி போன்ற பெருநகரங்கள் மட்டுமே இத்தகைய பாதிப்பை பதிவு செய்து வருகிறது. தினசரி பாதிப்பில் சரிவை சந்தித்து வந்த மும்பையிலும்,  கடந்த இரண்டு வாரங்களாக எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகின்றனர். ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில், 1,000 க்கும்  குறைவான தினசரி பாதிப்பைக் கண்ட மும்பையில், தற்போது புதிய பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கின. உதாரணமாக, கடந்த வாரம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2,371 ஆக அதிகரித்தது.

மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், " பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு, சமீபத்தில் முடிவடைந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் , ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட  தளர்வுகள் ஆகியவை பாதிப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளன" என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் ஒன்றாக கருதப்பட்ட பீகாரில், கடந்த இரண்டு வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது. அதன் தற்போதைய, தினசரி பாதிப்பு எண்ணிக்கை 1.01 சதவிகிதமாக உள்ளது. அதிகபட்ச கொரோனா பாதிப்புகளை கண்டறிந்த முதல் பத்து மாநிலங்களில், ஒடிசாவின் பாதிப்பு வளர்ச்சி விகிதம் ( 2.38 %) மிகவும் அதிகமாக உள்ளது. நேற்று, முதன் முறையாக மாநிலத்தின் பாதிப்பு எண்ணிக்கை 4,000 -ஐக் கடந்தது. இதன்மூலம், அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.55 லட்சத்தைக் கடந்தது.

இருப்பினும், நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்கள் பட்டியலில் சத்தீஸ்கர் முதலிடத்தில் உள்ளது. அதன், பாதிப்பு எண்ணிக்கை  தற்போது 5 சத விகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. அதற்கடுத்த படியாக,  கேரளா, பஞ்சாப்  ஹரியானா போன்ற மாநிலங்களில் வளர்ச்சி விகிதம் அதிகரித்து காணப்படுகிறது.

புதிதாக நேற்று 92,000க்கும் அதிகமானோருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48.46 லட்சமாக  உயர்ந்துள்ளது. இதில்,  37.80 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தைக் கடந்தது. புதிய பாதிப்புகளுக்கு மேல் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பது ஒரு நல்ல போக்காக கருதப்படுகிறது. கொரோனா தொற்று அடைந்தவர்களில் இதுவரை 88.98 % குணமடைந்துள்ளனர்.

நாட்டில் பதிவாகியுள்ள பாதிப்புகளில் 92% பேருக்கு குறைவான அளிவிலேயே தொற்று உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. வெறும் 5.8% பேருக்கும் மட்டுமே பிராண வாயு சிகிச்சை தேவைப்படுகிறது. 1.7% பேருக்கு மட்டுமே தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Corona Coronaviurs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment