Advertisment

கொரோனா வைரஸ் முதலில் எங்கு தாக்குகிறது? இரண்டு செல் வகைகளை கைகாட்டும் புது ஆய்வு

கொரோனா வைரஸ் நுழைந்தவுடன் வெளிப்படும் ஆரம்ப செயல்பாடுகளாக, இந்த இரண்டு செல் வகைகள் சுட்டிக்காட்டப்படுவது இதுவே முதல் முறை. கொரோனா வைரஸ் தொற்றின் அசாத்திய பரவலுக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா வைரஸ் முதலில் எங்கு தாக்குகிறது? இரண்டு செல் வகைகளை கைகாட்டும் புது ஆய்வு

மூக்கில் காணப்படும் இரண்டு குறிப்பிட்ட செல்வகைகளில் கோவிட்- 19 நோயை ஏற்படுத்தும் சார்ஸ்- கோவ்- 2 வைரசின் ஆர்ம்பக்கட்ட செயல்பாடுகள் அதிகமாக இருப்பதாக கடந்த வாரத்தில் வெளியான ஆய்வறிக்கை  தெரிவித்துள்ளது. இந்த தகவல், கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்பான நமது தேடலுக்கு எவ்வாறு கூடுதல் வலுசேர்க்கிறது என்பதை இங்கே காண்போம்.

Advertisment

நோய்த்தொற்றின் வழிமுறைகள் ஏற்கனவே தெரியும் தானே?  

ஆம், செல்லுலார் மட்டத்தில் என்ன நடக்கிறது என்பது நமக்கு ஏற்கனவே தெரிந்தது தான். உதாரணமாக, அனைத்து கொரோனா வைரஸ்களைப் போலவே, சார்ஸ்-கோவி-2 வைரஸ் கொழுப்பு என்னும் ஒரு பாதுகாப்பு அடுக்கால் மூடப்பட்ட ஒரு புரத மூலக் கூறாகும். வைரசின் புரதங்கள் கூர்முனையில் இருப்பதால், அதன் மேற்பரப்பு கிரீடம் போல் காட்சியளிகின்றன. அதனால், இதற்கு கொரோனா வைரஸ் என்று பெயர் சூட்டப்பட்டது.

மனித உயிரணுக்களில் காணப்படும் ஏஸ் 2 (ACE2) எனும் புரதத்தை "திறக்க" இந்த கூர்முனை வடிவம் பெரிய "துடுப்பு சீட்டாக" செயல்படுகிறது. நமது தொண்டையிலும், நுரையீரலிலும் காணப்படும் ஏஸ் 2 (ACE2) ஏற்பிகளுடன் சார்ஸ்-கோவி-2 (SARS-CoV-2) ஒன்றாக இணைந்து கொள்கிறது. நமது தோலில் ஏஸ்2 வெளிப்பாடு இல்லாமல் இருப்பதால், அங்கு ஒட்டிகொண்டிருக்கும் இருக்கும் வைரஸ் தீங்கு விளைவிக்காது. செல்களுக்கு சென்றவுடன், வைரஸ் TMPRSS2 எனப்படும் இரண்டாவது புரதத்தைப் பயன்படுத்துகிறது. இதற்கு, நமது புரதத்தைப் பிரிக்கும் திறனிருப்பதால், வைரஸை உயிரணுக்களுக்குள் இனப்பெருக்கம் செய்யவும், பரப்பவும் அனுமதிக்கிறது.

புதிய ஆய்வு என்ன கண்டறிந்துள்ளது?

வைரஸ் தாக்கத் தொடங்கும் போது, அதன் முதற்கட்ட செயல்பாடுகள், நமது மூக்கில் காணப்படும் கோப்லெட், சிலியேட் ஆகிய இரண்டு செல் வகைகளில் அரங்கேறுவதை இந்த புதிய ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.

சுவாசக் குழாய், குடல் பாதை, மேல் கண்ணிமை போன்றவற்றில் காணப்படும் கோப்லெட்  செல்கள், உறுப்புகளின் மேற்பரப்பில் சளி உற்பத்தி செய்யும் செயல்களை செய்கின்றன.

முடி போன்ற தோற்றம்  கொண்ட சிலியட் செல்கள், பல்வேறு உறுப்புகளின் மேற்பரப்பில் வாழும் தன்மை உடையது. இந்த செல்கள் சளி, தூசி போன்றவற்றை தொண்டைக்கு எடுத்து சென்று விழுங்க உதவுகின்றன.

நோய்த்தொற்றின் ஆரம்ப வெளிப்பாடாக  இந்த செல்களை எவ்வாறு கண்டறிந்தனர்?

ஏஸ் 2 (ACE2) மற்றும் TMPRSS2 ஆகிய இரண்டு புரதங்களும், நமது உறுப்புகளில் எங்கு அதிகமாக வெளிப்படுத்தப்படுகிறது என்பதை கண்டறிவது  தான் ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். ஏஸ் 2 (ACE2) வெளிப்பாடு பொதுவாக குறைவாக இருந்தாலும், TMPRSS2 புரதம் உடலில் பரந்த அளவில் தன்னை வெளிப்படுத்தியது. எனவே, ஆரம்ப தொற்று காலகட்டத்தில் TMPRSS2 புரதத்தை விட ஏஸ் 2 (ACE2) புரதம், வைரஸ் நுழைவதை கட்டுப்படுத்தும் காரணியாக இருக்கலாம் என்பதை  சுட்டிக்காட்டுவதாக  ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

 

 

மூக்கின் உள் புறம் உள்ளிட்ட வெவ்வேறு உறுப்புகளின் உள்ள செல்களில் ஏஸ் 2 (ACE2) மற்றும் TMPRSS2 புரதங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. காற்றுப்பாதையில் உள்ள அனைத்து செல்களை காட்டிலும், மூக்கில் சளி உற்பத்தி செய்யும் கோபட் செல்கள் மற்றும் சிலியேட் செல்களில், கொரோனா வைரஸ் புரதங்கள் மிகவும் அதிக அளவில் இருப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இதன் மூலம் வைரஸின் ஆரம்ப நோய்த்தொற்று செயல்முறை வெளிப்பாடாக இந்த இரண்டு செல்கள் உள்ளது ” டாக்டர் வரடன் சுங்னக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மாற்று நுழைவு பாதையை இந்த ஆய்வு நிராகரிக்கிறதா?

கண்ணின் கருவிழிப்படலங்களிலும், குடலின் புறணிகளிலும் கூட இந்த இரண்டு புரதங்கள் காணப்பட்டுள்ளன. இதன்மூலம், மனிதக் கழிவுகளில் இருந்து வாய் மூலம் வைரஸ் தொற்று உடம்பிற்குள் பரவும் சாத்தியக் கூறுகளையும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

எவ்வாறாயினும், கீழ்காணும் மூன்று முக்கிய அம்சங்களை ஆராய்ச்சி அடிகோடிட்டு காட்டுகிறது.

  1. புரதங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் வெளிப்படுத்தப்பட்ட அந்த இரண்டு செல் வகைகள், வைரஸ் அதிகம் அணுகக்கூடிய இடத்தில் அமைந்துள்ளன.
  2. பல்வேறு நோயெதிர்ப்பு மரபணுக்கள் தொற்றுக்கு எதிராக செயல்படும் அதே நேரத்தில், மூக்கில் உள்ள செல்கள் ஏஸ் 2 (ACE2) புரதத்தை உற்பத்தி செய்ய தொடங்குகின்றன.
  3.  பாதிக்கப்பட்ட நபர் இருமல் மற்றும் தும்மலின் போது உருவாகும் நீர்துளிகளால் தான் தொற்று பரவல் நிகழ்வதாக ஆரியப்படுகிறது .

 

எவ்வாறு உதவுகிறது?

கொரோனா வைரஸ் நுழைந்தவுடன் வெளிப்படும் ஆரம்ப செயல்பாடுகளாக, இந்த இரண்டு செல் வகைகள் சுட்டிக்காட்டப்படுவது இதுவே முதல் முறை. கொரோனா வைரஸ் தொற்றின் அசாத்திய பரவலுக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? என்பதற்கான முழுமையான புரிந்துணர்வுக்கு இந்த ஆய்வு உதவியாக இருக்கலாம். வைரஸ் பரவலுக்கு எந்த சரியான செல் வகைகள் முக்கியம் என்பதை அறிவதன் மூலம் பரவலைக் குறைப்பதற்கான ஒரு அடிப்படையை வழங்குகிறது, ”என்று வெல்கம் சாங்கர் நிறுவனத்தின் மூத்த எழுத்தாளரும், மருத்துவ நிபுணருமான சாரா டீச்மேன் தெரிவித்தார்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment