Advertisment

ஷாப்பிங் போகிறீர்களா? கவனத்தில் வைக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்

கடைகளில் அதிக பொருட்களை வாங்க நீண்ட நேரம் செலவிடுவதை தவிர்க்க, பலமுறை கடைகளுக்கு செல்ல நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, india lockdown, grocery shop, hand wash, sanitizer, corona infection, spread,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

coronavirus, india lockdown, grocery shop, hand wash, sanitizer, corona infection, spread,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

Advertisment

வைரஸ் தொற்று அதிகரித்துள்ள இந்த வேளையில், அத்தியாவசிய தேவைகளுக்காக கடைகளுக்கு அடிக்கடி செல்லுவதும் தொற்று அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கடைகளிலும் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைகளில், கடை விற்பனையாளருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே போதிய இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒரு மீட்டர் இடைவெளி, 6 அடி இடைவெளி விட்டு நிற்க வேண்டும். முக கவசம் அணிந்திருக்க வேண்டும். முக கவசம், வாய் மற்றும் மூக்கு பகுதியை மூடியவாறு இருக்க வேண்டும். இருந்தபோதிலும், கையுறை அணிய வலியுறுத்தப்படவில்லை.

பல்வேறு கடைகள், தங்களது வாடிக்கையாளர்கள் நலனுக்காக, வருபவர்களுக்கு சானிடைசர் பயன்படுத்த அறிவுறுத்துகின்றனர். கடையிலிருந்து வெளியே வரும்போதும், வீட்டிற்கு வந்தபோதும் அவர்கள் சானிடைசர் கொண்டு கைகளை கழுவ அறிவுறுத்தப்படுகின்றனர். கடையிலிருந்து வாங்கி வந்த பொருட்களை எடுத்து வைத்தபிறகு, சோப்பு, தண்ணீர் அல்லது சானிடைசர் கொண்டு 20 வினாடிகள் கைகழுவ வலியுறுத்தப்படுகின்றனர்.

publive-image

கொரோனா வைரஸ், சாதாரணமாக 72 மணிநேரங்கள் உயிர் வாழும் தன்மையுடையது. இத்தகைய நிலையில் நாம் பலசரக்கு பொருட்கள் வாங்குவது பாதுகாப்பானதா? நீங்கள் காய்கறி உள்ளிட்ட பலசரக்கு பொருட்களை வாங்கி சில மணிநேரங்கள் கடந்த பின்பும், அந்த வைரஸ் அதிலேயே இருக்கும். எனவே அதை பயன்படுத்துவதற்கு முன், நாம் நம் கைகளை சானிடைசரால் கழுவிக்கொள்ள வேண்டும். கண்டெய்னர்களில் அடைக்கப்பட்ட காய்கறிகளை இந்நேரத்தில் வாங்கி பயன்படுத்துவது பாதுகாப்பானதாக அமையும்.

கொரோனா தொற்று உள்ளவர் பயன்படுத்திய உணவை மற்றொருவர் சாப்பிடுவதால் அவருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. சமைக்கும்போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில், அந்த வைரஸ் இறந்துவிடும். பழங்கள், காய்கறிகளை பயன்படுத்துவதற்கு முன் அதை நன்கு தண்ணீரால் கழுவ வேண்டும். நாம் இது எப்போதும் கடைபிடிக்கும் நடவடிக்கைதான்.

 

publive-image

கடைகளில் அதிக பொருட்களை வாங்க நீண்ட நேரம் செலவிடுவதை தவிர்க்க, பலமுறை கடைகளுக்கு செல்ல நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேபோல், கடைகளுக்கு செல்லும் போது குழந்தைகளை அழைத்து செல்லாமல், தனியாக செல்வது நலம்.

வைரஸ் தொற்று உள்ளவர் இருமும்போதும் தும்மும்போதும் அவரிடமிருந்து வெளிப்படும் நீர்த்திவலைகளின் மூலம் இந்த வைரஸ் தொற்று மற்றவர்களுக்கும் பரவுகிறது. அதேபோல், வைரஸ் உள்ள இடங்களை மற்றவர்கள் தொடுவதன் மூலமும் இந்த வைரஸ் அதிகளவில் மற்றவர்களுக்கு பரவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Corona Virus Lockdown Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment