Advertisment

Explained: அலுவலகங்கள் மீண்டும் திறப்பதற்கு அரசின் வழிகாட்டுதல்கள் என்ன?

கோவிட்-19 பரவுதலைக் கட்டுப்படுத்த பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை திங்கள்கிழமை வெளியிட்டது. இந்தியா அறிவித்துள்ள 4வது கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, lock down, covid-19, workplace guidelines, mha guidelines for offices, கொரோனா வைரஸ், பணியிடங்களில் புதிய வழிகாட்டுதல்கள், மத்திய அரசு, பொது முடக்கம், india lockdown, coronavirus cases in india, tamil indian express explained

கோவிட்-19 பரவுதலைக் கட்டுப்படுத்த பணியிடங்களில் பின்பற்ற வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை திங்கள்கிழமை வெளியிட்டது. இந்தியா அறிவித்துள்ள 4வது கட்ட பொது முடக்கம் மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலில், அனைத்து அலுவலகங்களையும் 100 சதவீதம் பணியாளர்கள் திறனில் செயல்பட அனுமதித்துள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்வது ஊக்குவிக்கப்பட்டாலும் சாத்தியமான் அளவில் பணியாளர்களைக் கொண்டு செயல்பட அனுமதி அளித்துள்ளது.

Advertisment

அடிப்படை தடுப்பு நடவடிக்கைகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் எல்லா நேரங்களிலும் பின்பற்ற வேண்டும்.

1. எல்லா நேரங்களிலும் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

2. கட்டாயமாக முகத்தை மூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

3. அடிக்கடி கைகழுவ வேண்டும். குறைந்த பட்சம் 40-60 நொடிகளாவது கை கழுவ வேண்டும். கைகள் பார்வைக்கு அழுக்காக இல்லாவிட்டாலும், ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர்களைக் கொண்டு குறைந்த பட்சம் 20 நடிகளாவது கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

4. கண்டிப்பாக பின்பற்ற வேண்டியது நடவடிக்கைகள்: ஒருவர் தும்மும்போதும் இருமும்போதும் டிஸ்யூ பேப்பர், கைக்குட்டை, அல்லது முழங்கையைப் பயன்படுத்தி மூட வேண்டும். அப்படி பயன்படுத்தப்பட்ட டிஸ்யூ பேப்பர்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இது போன்ற கடுமையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

5.அனைவரும் தங்களுடைய உடல்நிலையை சுயமாக கண்காணித்துக்கொள்ள வேண்டும். ஏதேனும் நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

அலுவலகங்களுக்கான நோய் தடுப்பு நடவடிக்கைகள்

உடல்நிலை சரியில்லாமல் அல்லது காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடாது. அவர்கள் உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடமிருந்து மருத்துவ ஆலோசனையைப் பெற அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், "எந்தவொரு ஊழியர்களும் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு மண்டல நடவடிக்கைகளின் அடிப்படையில் வீட்டில் தனிமைப்படுத்த வேண்டும்.

அலுவலகத்தில் யாராவது கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால் என்ன நடக்கும்?

ஒரு நபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில நபர்கள், ஒரு அறை அல்லது மூடிய இடத்தை பகிர்ந்துகொள்பவர்கள், கோவிட்-19 அறிகுறிகளால் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பின்வரும் நடவடிக்கைகள் அவர்களுக்காக பரிந்துரைக்கப்படுகின்றன.

நோய்வாய்ப்பட்ட நபரை ஒரு அறையில் அல்லது ஒரு பகுதியில் மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் பணியிடத்தில் வைக்க வேண்டும். அவர் / அவள் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்படும் வரை முகக்கவசம் அல்லது முகத்தை மூடுவதற்கு ஏதேனும் வழங்குங்கள்.

சம்பந்தப்பட்ட மத்திய / மாநில சுகாதார அதிகாரிகளுக்கு புகார் அளிக்க வேண்டும். 1075 என்ற ஹெல்ப்லைன் எண்ணில் உடனடியாக புகார் தெரிவிக்கப்பட வேண்டும்.

நியமிக்கப்பட்ட பொது சுகாதார அதிகாரிகளால் ஒரு ஆபத்து மதிப்பீடு மேற்கொள்ளப்படும். மாவட்ட ஆர்.ஆர்.டி / சிகிச்சையளிக்கும் மருத்துவர், நோய்த்தொற்று மேலாண்மை அதிகாரிகள் அறுவுரையின் அடிப்படையில் நோய்தொற்று ஏற்பட்ட நபருடன் தொடர்புள்ள இடங்களுக்கு கிருமிநாசினி தேவை குறித்த மேலதிக ஆலோசனைகள் வழங்கப்படும்.

சுகாதார அதிகாரிகளின் மதிப்பீட்டில் மிகவும் லேசான அல்லது லேசான அறிகுறிகள் இருப்பதாகப் புகார் அளித்தால் சந்தேகத்திற்கிடமான நோயாளி வீட்டுத் தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுவார்கள். இது சில அளவுகோல்களை நிறைவேற்றுவதற்கு உட்பட்டது.

சந்தேகத்திற்கிடமான நோயாளி சுகாதார அதிகாரிகளால் மிதமானது மற்றும் கடுமையானது என்று மதிப்பிடப்பட்டால், அவர் / அவள் சந்தேகத்திற்கிடமான உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 நோயாளிகளின் சரியான மேலாண்மை குறித்து அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவார்கள்.

சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் விரைவான மருத்துவ நடவடிக்கை குழு தெரிவிக்கப்பட்டு நோயாளியின் தொடர்புகளின் பட்டியலை மேற்கொள்ளும்.

நோயாளியின் பரிசோதனை முடிவு நேர்மறையானதாக கிடைத்தவுடன் தொடர்புத் தடமறிதல் மற்றும் பணியிடத்தை கிருமி நீக்கம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடங்கும். இந்த நோக்கத்திற்காக புகார்கள் துரிதப்படுத்தப்படும்.

அமைச்சகத்தின் வழிகாட்டுதலில், “நோய் அறிகுறி உள்ள நபர் அல்லது அறிகுறியற்ற நபரில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொடர்புகள் இருந்தால், பணியிட இடத்தில் ஒரு கொத்து பரவல் உருவாக வாய்ப்புள்ளது. பணியிட அமைப்புகளில் நெருக்கமான சூழல் காரணமாக, இது ஒரு பெரிய கிளஸ்டராக கூட இருக்கலாம் (15 நோய்த்தொற்றுகளுக்கு அதிகமாக இருக்கலாம்). இடர் மதிப்பீடு, தனிமைப்படுத்தல் மற்றும் தொடர்புகளின் தனிமைப்படுத்தல், வழக்கு பரிந்துரை மற்றும் மேலாண்மை ஆகியவற்றின் அத்தியாவசியக் கொள்கைகள் அப்படியே இருக்கும். இருப்பினும், ஏற்பாடுகளின் அளவு அதிகமாக இருக்கும்.” தெரிவித்துள்ளது.

பணியிடத்தை மூடுதல்

ஒன்று அல்லது இரண்டு வழக்குகள் பதிவாகியிருந்தால், கிருமிநாசினி செயல்முறை கடந்த 48 மணி நேரத்தில் நோயாளி பார்வையிட்ட இடங்கள் / பகுதிகளில் பயன்படுத்த வேண்டும். அலுவலகத்தின் மற்ற பகுதிகள் அல்லது முழு அலுவலக கட்டடத்தையும் மூட வேண்டிய அவசியமில்லை / வேலை நிறுத்தப்பட்ட பின்னர், நெறிமுறையின்படி கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் பணிகளை மீண்டும் தொடங்கலாம்.

இருப்பினும், ஒரு பெரிய வைரஸ் பரவல் ஏற்பட்டால், முழுமையான கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் முழு கட்டிடமும் 48 மணி நேரம் மூடப்பட வேண்டும். கட்டிடம் போதுமான அளவு கிருமி நீக்கம் செய்யப்பட்டு மறு பயன்பாட்டுக்கு ஏற்றது என்று அறிவிக்கப்படும் வரை அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள்.

அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய கிருமிநாசினி நடைமுறைகள் யாவை?

உட்புற பகுதிகளில்: அறைகள் பயன்படுத்தப்படுவதற்கு முன்பு, ஒவ்வொரு மாலை நேரத்திலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு அல்லது அதிகாலையில் கூட்ட அறைகள் உட்பட அலுவலக இடங்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும்.

தொடர்பு இடங்கள் மேற்பரப்பு பார்வைக்கு அழுக்காக இருந்தால், கிருமி நீக்கம் செய்வதற்கு முன்பு சோப்பு மற்றும் தண்ணீரில் அதை சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்வதற்கு முன்பு, தொழிலாளி ரப்பர் பூட்ஸ், கையுறைகள் (ஹெவி டியூட்டி) மற்றும் மூன்று அடுக்கு முகக்கவசத்தை அணிய வேண்டும்.

வெளிப்புற பகுதிகளில்: காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியின் வெளிப்பாடு காரணமாக வெளிப்புற பகுதிகளுக்கு உட்புற பகுதிகளை விட குறைவான ஆபத்து உள்ளது. பஸ் நிறுத்தங்கள், ரயில்வே தளங்கள், பூங்காக்கள், சாலைகள் போன்றவை இதில் அடங்கும். சுத்தம் மற்றும் கிருமி நீக்கம் செய்யும் முயற்சிகள் ஏற்கனவே மேலே விவரிக்கப்பட்டுள்ளபடி அடிக்கடி தொட்ட / அசுத்தமான மேற்பரப்புகளை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும்.

பொது கழிப்பறைகள்: சுகாதாரத் தொழிலாளர்கள் கழிப்பறைகளுக்கு (மாப்ஸ், நைலான் ஸ்க்ரப்பர்) தனித்தனி துப்புரவு உபகரணங்களையும், கழிப்பறை பேசின்களுக்கு தனித்தனியாக வைத்து பயன்படுத்த வேண்டும். கழிப்பறையை சுத்தம் செய்யும் போது அவர்கள் எப்போதும் பயன்படுத்தும் பாதுகாப்பு கையுறைகளை அணிய வேண்டும்.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ): துப்புரவு மற்றும் கிருமி நீக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ளும்போது பின்வருவனவற்றை உள்ளடக்கிய பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்களை அணியுங்கள். ஒரு முறை பயன்படுத்தப்படும் ரப்பர் பூட்ஸ், கையுறைகள் (ஹெவி டியூட்டி) மற்றும் மூன்று அடுக்கு முகக்கவசத்தை அணியுங்கள். கையுறைகள் அகற்றப்பட்டு சேதமடையும்போது அவற்றை தவிர்க்க வேண்டும், மேலும் புதிய ஜோடி கையுறைகளை அணிய வேண்டும். துப்புரவு நடவடிக்கைகள் முடிந்தபின் அனைத்து டிஸ்போஸபில் பாதுகாப்பு உபகரணங்களையும் அகற்றப்பட்டு தவிர்க்க வேண்டும். தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் ஒவ்வொரு பகுதியையும் அகற்றி உடனடியாக கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் கழுவ வேண்டும்.

அறிவுறுத்தல்களின்படி சரியாக பொருத்தமாக அணிந்தால் முகக்கவசம் பயனுள்ளதாக இருக்கும். முகக்கவசம் சேதமடைந்தால் அல்லது நனைந்திருந்தால் அவற்றை அப்புறப்படுத்திவிட்டு புதியதாக மாற்ற வேண்டும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil
Corona Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment