அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் கொரோனா பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்களின் வயது, அவர்களின் உடல்நலம் போன்ற தகவமைப்புகளே, கொரோனா வைரஸ் சார்ஸ் கோவிட்-2 பாதிப்பிற்கு அவர்களை அதிகம் உள்ளாக்குகிறது போன்ற தரவுகள் நமக்கு அதிகம் கிடைத்துள்ளன. விஞ்ஞானிகள் இதுகுறித்த முடிவுக்கு வந்துள்ளனர்.
கொரோனா வைரசை எதிர்க்கவல்ல மனிதனின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திக்கு காரணமான ஜீன் மூலக்கூறுகள், வயது மற்றும் நீண்டகாலமாக இருந்துவரும் உடற்பாதிப்புகளின் காரணமாக கொரோனா வைரசை தாக்கி அழிக்க இயலவில்லை என்று Aging and Disease என்ற ஜெர்னலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குட்டி ஜீன் மூலக்கூறுகள், குட்டி ஆர்என்ஏக்களாக இருப்பதால் அவை மைக்ரோ ஆர்என்ஏக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்து மைக்ரோ ஆர்என்ஏக்களில் கோடிங் மூலக்கூறுகள் இல்லாததால், இதனால் புரோட்டீன்களை ( புரதங்களை) உருவாக்க இயலாது. மனித உடலில், ஜீன்கள் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்த இந்த மைக்ரோ ஆர்என்ஏக்கள் உதவிபுரிகின்றன.
கொரோனா விவகாரத்தில், இந்த மைக்ரோ ஆர்என்ஏக்களின் பங்கு மிகமுக்கியமானதாக அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புள்ளாகும் ஓரு நபரின் உடலில், உள்ள இந்த மைக்ரோ ஆர்என்ஏக்கள், வைரசிற்கு எதிராக போரிட்டு, வைரசை துண்டு துண்டாக கத்தரித்து செயலற்றதாக்கி விடும்.
அதிக வயது மற்றும் நாள்பட்ட உடல்நலப்பாதிப்புகளால் அவதியுறும் நபர்களின் உடலில் இந்த மைக்ரோ ஆர்என்ஏக்களின் எண்ணிக்கை மிகக்குறைந்த அளவில் இருக்கும். கொரோனா வைரசை எதிர்க்கும் இந்த போரில், தேவையான அளவு மைக்ரோ ஆர்என்ஏக்கள் இல்லாததால், கொரோனா வைரஸ் எளிதாக பல்கிப்பெருகி, நமது உடலை மேலும் பலவீனப்படுத்தி விடுகின்றன.
அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள அகஸ்டா பல்கலைகழக மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் சதானந்த் புல்ஜூலே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு இமெயில் வழியாக அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, மனித உடலில் உள்ள மைக்ரோ ஆர்என்ஏக்களின் ஜீன் தொடர்வரிசையையும், கொரோனாவைரசின் ஆர்என்ஏ ஜீனோம் தொடர்வரிசையையும் வகைப்படுத்தியுள்ளனர். இதன்மூலமே, அதிக வயது மற்றும் நாட்பட்ட உடல்நிலைப்பாதிப்புகளால், கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுப்படுத்த இயலாததாக உள்ளது என கண்டறிந்தோம்.
இரண்டு கொரோனா வைரஸ்களின் ( சார்ஸ் வைரஸ், கோவிட் 19 வைரஸ்) ஜீனோம்களை வகைப்படுத்தினோம். இந்த வைரஸ்களின் சாம்பிள்களை, 2020ம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில், 17 நாடுகளில் இருந்து சேகரித்தோம். இதனை ஆய்வுக்கு உட்படுத்தினோம்.
சார்ஸ் வைரஸ்க்கு எதிரான நடவடிக்ககைகளில் 848 மைக்ரோ ஆர்என்ஏக்கள் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல், கோவிட் 19 வைரசுக்கு எதிரான போரில், 873 மைக்ரோ ஆர்என்ஏக்கள் தேவைப்பட்டதை கண்டறிந்தனர். இதில் 558 மைக்ரோ ஆர்என்ஏக்கள் இரண்டு வைரஸ்களையும் கட்டுப்படுத்த வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிக வயது, நீரிழிவு, இதய கோளாறுகள் உள்ளவர்களது உடலில் மைக்ரோ ஆர்என்ஏக்களின் அளவு கணிசமாக குறைந்து காணப்படுவதால், அவர்களால் கொரோனா வைரசை எதிர்த்து போரிடமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. இதன்காரணமாக, அதிக மரண விகிதங்கள் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மனித உடலினுள் புகும் கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்களை எதிர்க்க மைக்ரோ ஆர்என்ஏக்களின் பங்கு அதிமுக்கியமானதாக உள்ளதாக அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook
Web Title:Coronavirus old age peoplehow coronavirus attackscovid 19 india