Advertisment

கொரோனா வைரசை முதலில் பார்த்த ஜூன் அல்மெய்டா: யார் இவர்?

வைரசின் மேற்பரப்பு சிறிய குமிழிகளில் முடிவடையும் கூர்முனைகளைக் கொண்ட கிரீடம் போல் இருப்பதால் அதற்கு அவர்கள் கொரோனா வைரஸ் எனப் பெயரிட்டனர். 1968-ம் ஆண்டு இந்த பெயர் அறிவியல் சமூகத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா வைரசை முதலில் பார்த்த ஜூன் அல்மெய்டா: யார் இவர்?

கொரோனா வைரஸைக் காட்சிப்படுத்திய முதல் விஞ்ஞானி வைராலஜிஸ்ட் ஜூன் அல்மெய்டா  ஆவார். வைரஸ் நோயறிதலுக்குப் பயன்படுத்தப்படும் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் நுட்பத்தில் முன்னோடியாக திகழ்ந்த இவர் , கொரோனா வைரஸைப் பார்த்த முதல் மனிதராகவும் விளங்குகிறார்.

Advertisment

யார் இந்த ஜூன் அல்மெய்டா  ?

ஸ்காட்லாந்தின் மிகப் பெரிய நகரமாக கருதப்படும் கிளாஸ்கோ குடியிருப்பில் வளர்ந்த இவர், மேற்படிப்புக்கு நிதி பெற முடியாததால் தனது 16 வயதில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டர். இந்த தகவலை,பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் எனும் நாளிதழில் அவரின் மகள் ஜாய்ஸ் எழுதிய கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

1947 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டு வெளியேறிய பின்பு, கிளாஸ்கோ ராயல் இன்ஃபர்மரி என்ற மருத்துவ கல்லூரியில்  ஹிஸ்டோபோதாலஜி  துறையில்  ஆய்வக தொழில்நுட்ப வல்லுனராக  சேர்ந்தார். உதவித்தொகையாக வாரத்திற்கு 25 ஷில்லிங் கிடைத்தது.

பணியில் கிடைத்த அனுபவங்களும், வளர்த்துக் கொண்ட திறமைகளும் பிற்காலத்தில் அவரை ஒரு வைராலஜிஸ்ட் என்னும் நிலைக்கு உயர்த்தியது . இதுவரை அறியப்படாத வைரஸ் அமைப்பின் அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், வைரஸ் தொற்று எப்படி  நோய்க்கிருமியாக  உருவாக்கம் பெறுகிறது  என்பதற்கான விளக்கத்தையும் தேட ஆரம்பித்தார்.

திருமணத்திற்குப் பிறகு,  தனது கணவருடன் கனடா  நாட்டில் குடிபெயர்ந்த இவர், டொராண்டோவில் உள்ள ஒன்டாரியோ புற்றுநோய் நிறுவனத்தில் எலக்ட்ரான் நுண்ணோக்கி தொழில்நுட்ப வல்லுநராக நியமிக்கப்பட்டார்.

எழுத்தாளர் ஜே.இ. பனத்வாலா தொகுத்த 'தேசிய வாழ்க்கை- ஆக்ஸ்போர்டு அகராதி' என்னும் வரலாற்றில் குறிப்பில், அட்லாண்டிக் பெருங்கடல் மறுபுறம் இருக்கும் நாடுகளில் (அமெரிக்கா, கனடா) முறையான கல்வி முறைக்கு குறைந்த அளவிலான முக்கியத்துவம் கொடுத்து வருவதால், அல்மெய்டாவுக்கு வேலை கிடைப்பது சாத்தியமாக இருக்கலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

கனடாவில், அல்மெய்டா பணிகள் அனைவராலும்  கவனிக்கப்பட்டது . வைரஸ் கட்டமைப்புகளுடன் தொடர்புடைய பல அறிவியல் வெளியீடுகளிலும் அவரின் பெயர் சேர்க்கப்பட்டது” என்று பனத்வாலா எழுதியிருந்தார்.

விரைவு ஆய்வக வைரஸ் நோயறிதலுக்கான உலக சுகாதார அமைப்பின் (WHO) 1979 கையேட்டை வடிவமைக்க உதவியவர்களில் இவரும் ஒருவர்.

 

எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி நுட்பத்தின் முன்னோடி ஜூன் அல்மெய்டா : 

எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி என்று அழைக்கப்படும் நுட்பத்தின் முன்னோடியாக  திகழ்ந்தவர் அல்மெய்டா . இது நெகடிவ் ஸ்டைன்  பயன்படுத்துவதை உள்ளடக்கியது.

இவரின் செயல்முறை மூலம், நோய் எதிர்ப்பொருளுடன் (ஆன்டிபாடிகள்  )இணைக்கப்பட்ட வைரஸ், தன்னைத் தானே இணைத்துக் கொள்கின்றன.  எதிர்மறை கறைகளை (Negative Staining) பயன்படுத்துவதன் மூலம், மாதிரிகள், பின்புறத்த்தோடு  சேர்வதில்லை. இதன் மூலம்,  நோய் எதிர்ப்பொருளுடன்  கொத்தாக ஒட்டிக் கொண்டிருகும் வைரஸ் உருவவியல்  கண்டறியப்படுகிறது .

ஆங்கிலத்தில் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

1984 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், வைரஸ் கண்டறியும் துறையில், ஒரு முதன்மை நோயறிதல் நிலையை அடைவதற்கும், பிற நுட்பங்களின் மூலமாக கண்டறிந்தவைகளை  உறுதிப்படுத்துவதற்கும்  இந்த  கருவி பயனுள்ளதாக இருக்கும் என்று அல்மெய்டா  தெரிவித்திருந்தார்.

உண்மையில், ரூபெல்லா வைரசின் முதல் காட்சிப்படுத்தலுக்கு, அல்மெய்டாவின்  எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி நுட்பம் காரணமாக அமைந்தது. மேலும், ஹெபடைடிஸ்-பி வைரசில்  இரண்டு தனித்துவமான கூறுகள் உள்ளன. ஒன்று துகள் மேற்பரப்பிலும், மற்றொன்று உட்புறத்தில் உள்ளது என்பதை   கண்டறிந்ததில் அவருக்கு முக்கிய பங்கு இருந்தது.

 

மனித கொரோனா வைரஸின் முதல் கண்டுபிடிப்பு :

விலங்குகளிடம் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்ட பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1965 ஆம் ஆண்டில் டி.ஜே டைரெல் மற்றும் எம்.எல் பைனோ ஆகியோரால் முதல் மனித கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.  ஜலதோஷத்தின் அறிகுறிகள் இருந்த ஒரு ஆண் குழந்தையின் மூக்கு கழுவலில் இருந்து அவர்கள் ஒரு வைரஸை தனிமைப்படுத்தினர்.

இருவருமே, இதனை வைரஸ் பி 814 என்று அழைத்தனர்.  மேலும் மனித கரு மூச்சுக்குழாய் உறுப்பு திசுக்களில் வைரஸை வளர்க்க முடிந்தாலும், வழக்கமான செல் கல்ச்சரில் அவ்வாறு செய்ய முடியவில்லை என்பதைக் கண்டறிந்தனர்.

1965 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அந்த ஆய்வுக் கட்டுரையில் “கணிசமான ஆரம்ப சந்தேகங்களுக்குப் பிறகு, மனித சுவாசக் குழாயின் அறியப்பட்ட வேறு எந்த வைரஸுடன், இந்த B814 பிரிவு (strain) கிட்டத்தட்ட தொடர்பில்லை என்று நாங்கள் இப்போது நம்புகிறோம்" என்று கூறியிருந்தார்.

அந்த ஆய்வுக் கட்டுரை வெளியான  இரண்டே ஆண்டுகளில்,  அல்மெய்டா தான் கண்டறிந்த  எலக்ட்ரான் மைக்ரோஸ்கோபி நுட்பத்தின் மூலம் மாதிரிகளை காட்சிப்படுத்த முயன்றார்.

இந்த வைரஸ் மாதிரிகள், உருவவியல் ரீதியாக பறவைகள் மூச்சுக்குழாய் தொற்று வைரஸ், எலிகள் ஹெபடைட்ஸ் வைரஸ்  போன்றவைகளோடு ஒத்திருப்பதைக் கண்டனர்.

corona virus in india p chidambaram covid 19

வைரசின் மேற்பரப்பு சிறிய குமிழிகளில் முடிவடையும் கூர்முனைகளைக் கொண்ட கிரீடம் போல் இருப்பதால் அதற்கு அவர்கள் கொரோனா வைரஸ் எனப் பெயரிட்டனர். ஒரு வருடம் கழித்து (1968) இந்த பெயர் அறிவியல் சமூகத்தால்  ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment