Advertisment

கொரானா வைரஸில் இருந்து தப்பித்துக் கொண்டதா ஆப்பிரிக்க நாடுகள்?

முக்கியத்துவம் பெறும் நாடுகளின் விமான நிலையங்களிலேயே சோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coronavirus why African countries have been spared

Coronavirus why African countries have been spared

ஆப்பிரிக்க கண்டத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் சீனர்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆப்பிரிக்காவில் இருந்தும் நூற்றுக் கணக்கானோர் தினமும் சீனாவிற்கு வருகை புரிகின்றனர். ஹூபேய் மாகாணத்தின் வுஹானில் கொரோனா வைரஸ் நோய் தொற்றின் தாக்கம் அதிர்ச்சியை தருவதற்கு முன்பு வரை நாள் ஒன்றுக்கு 8 விமானங்கள் சீனாவுக்கும் ஆப்பிர்க்க நாடுகளுக்கும் இடையே பறந்தது. எத்தொப்பியன் ஏர்லைன்ஸ் அதிக அளவில் சீன வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.

Advertisment

இந்த நாடுகளுக்கு இடையே தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து காரணமாக இந்த நோய் தொற்று பரவியிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் தற்போதைய அறிக்கையின் படி இதுவரை கொரோனா வைரஸ் நோய் தொற்றினால் 1369 நபர்கள் உயிரிழந்தனர். மேலும் உலக அளவில் 46,997 நபர்கள் இந்த நோய் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

குறைவாகவே நடத்தப்பட்ட பரிசோதனைகள்

இந்த கண்டத்தில் மிகவும் குறைவாகவே பரிசோதனைகள் நடத்தப்படுவதற்கான வசதிகளே உள்ளது. செனேகல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் மட்டுமே பரிசோதனைகள் நடத்தப்பட முடியும். கடந்த வாரத்தில் தான் கொரொனா நோய் தொற்றினை அவர்கள் அங்கு கண்டறிந்துள்ளனர். இதுவரை கொரொனா வைரஸ் 'கேஸ்கள்’ வந்துள்ளதா அல்லது நாங்கள் மிஸ் செய்து விட்டோமா என்று தெரியவில்லை. நோய் அறிகுறிகளுடன் வந்திருப்பார்கள். நாங்கள் தான் டிடெக்ட் செய்யாமல் விட்டிருப்போம் என்று கூறுகிறார் கென்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்.

செனேகலில் கடந்த வாரம், பல்வேறு ஆப்பிரிக்க நாட்டு ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த நோய் தொற்றை எப்படி கண்டறிய முடியும் என்பதை கண்டறிந்துள்ளனர். தற்போது நைஜீரியா, கபோன், கேமரூன், எத்தியோப்பியா, கென்யா, ஜாம்பியா, சியெர்ரா லியொன் போன்ற நாடுகள் இந்த நோய் தொற்றினை கண்டறியும் சோதனைகளை செய்ய இயலும் என்று WHO அறிவித்துள்ளது.

முக்கியத்துவம் பெறும் நாடுகளின் விமான நிலையங்களிலேயே சோதனைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முக்கியமான துறைகளிலும் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சியெர்ரா லியோனிற்கு கடந்த வாரம் சீனாவில் இருந்து வந்த 30 நபர்களை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். கடந்த 14 நாட்களில் நீங்கள் சீனாவில் இருந்தது உறுதி செய்யப்பட்டால் நீங்கள் சீன அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, சியெர்ராவை சேர்ந்தவராக இருந்தாலும் சரி உங்களை மருத்துவ பாதுகாப்பில் தான் வைப்போம் என்று அவசர சுகாதார மேலாண்மை இயக்குநர் முகமது அலெக்ஸ் வாண்டி அறிவித்தார். உங்களுக்கு நோய் தொற்று இருக்கிறது அல்லது ஏதாவது குற்றம் செய்திருக்கிறீர்கள் என்று நினைக்க வேண்டாம். ஆனால் இது இங்கிருக்கும் மக்கள் தொகையை பாதுகாக்க உதவும் என்றும் அவர் கூறினார்.

ஆராய்ச்சியாளர்களின் கருத்து!

நோய் தொற்றுகள் ஆராய்ச்சியாளர் பால் ஹண்டர் கூறுகையில் “கொரொனா வைரஸ் ஆப்பிரிக்காவில் பரவமால் இருப்பது அதிர்ஷ்டம் தான்” என்று தெரிவித்தார். மேலும் கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்று நாம் ஆராய்ச்சி செய்தால் அளவுக்கு அதிகமான பயணங்கள் காரணமாக தான். இதனால் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று அவர் கூறினார்.

Too warm for COVID-19?

ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் வெப்பமாக இருக்கின்ற காரணத்தால் கூட கொரோனா வைரஸ் இங்கு பரவாமல் இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர். காய்ச்சல் மற்றும் சாதாரண இருமல் போன்றவற்றை உருவாக்கும் கொரோனா வைரஸ் தான் இந்த நோயையும் உருவாக்கியுள்ளது. சீசனுக்கு மட்டுமே பரவும் இந்த நோய் சில நேரங்களில் அதிகமாக பரவும். சில நேரங்களில் அப்படியே காணாமல் போய்விடும். குளிர் காலங்களில் சில நேரங்களில் காய்ச்சல் அதிகமாக பரவும். அது போல தான் இதுவும். குளிர் காலத்தில் அதிகமாக இருக்கும் இந்த நோய் தொற்று கோடை காலங்களில் அப்படியே குறைந்துவிடும். வைரஸும் அப்படியே வெப்பமான இடங்களில் இறந்து போவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. மிகவும் வெப்பமான பகுதிகளில் விரைவில் இந்த நோய் கிருமி அழிந்துவிடும் என்றூம் சிலர் கூறுகின்றனர்.

ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தாது என்று நம்புவதாக கூறுகிறார் பால் ஹண்டர். 2003ம் ஆண்டு கொரோனா நோய் தொற்றால் உருவான சார்ஸ் கூட 26 நாடுகளில் பரவியது. ஆனால் ஆப்பிரிக்காவில் அதனால் எந்தவிதமான தாக்கத்தையும் உருவாக்க இயலவில்லை. உலகின் மற்ற நாடுகளில் வாழ்வது போல் ஆப்பிக்காவினர் கூட்டம் கூட்டமாக வாழ்வதில்லை. அதே போன்று அவர்கள் ஆப்பிரிக்காவில் மட்டுமே அதிக நேரம் செலவிடுகின்றனர் என்றும் கூறியிருந்தார்.  ஆப்பிரிக்காவினர் கொரோனாவை எதிர்க்கொள்ளும் அளவிற்கு அதிக அளவில் நோய் தொற்று இல்லாமல் இருக்கின்றார்கள் என்று சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்களை முற்றிலும் மறுத்த டாக்டர் ஞெரே இதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் அவர் கூறினார்.

China Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment