Advertisment

கொரோனா வைரஸ் இறப்பு விகிதத்தை ஏன் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும்?

பயன்படுத்தப்பட்ட சோதனையின் வகையைப் பொறுத்து, நாடுகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மட்டுமே கணக்கிடக்கூடும். நோய்த் தொற்று இருந்து குணமானவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
COVID-19 case fatality rate should be read with caution here's why corona virus

COVID-19 case fatality rate should be read with caution here's why corona virus

உலகெங்கிலும் உள்ள நாடுகள் கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கையாண்டு கொண்டிருக்கும் சூழலில், பல்வேறு நாடுகளால் வெளியிடப்பட்ட இறப்பு விகித (சி.எஃப்.ஆர்) புள்ளிவிவரங்கள் மூலம், COVID-19 எவ்வளவு ஆபத்தானது என்பதைக் கண்டறிவது கடினமாகிறது. உதாரணமாக, கோவிட் -19 வைரஸால் அதிக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இத்தாலி, சி.எஃப்.ஆர் 12.6 சதவீதத்தைக் கொண்டுள்ளது, ஜெர்மனியில் சி.எஃப்.ஆர் 2-ஆக உள்ளது. இத்தாலியில் 17,000 க்கும் அதிகமான இறப்புகள் ஏற்பட்டது. ஜெர்மனி 2000 க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். பஹாமாஸில், மொத்தமே 29 வழக்குகள் தான். ஆனால், இறப்புகள் 5. இதனால் சி.எஃப்.ஆர் 17.24 என்று உள்ளது.

Advertisment

நோய்த்தொற்றின் எண்ணிக்கையை உலகெங்கிலும் இருந்து தினமும் பதிவுசெய்து புதுப்பிக்கும்போது, நோயின் முன்கணிப்பைக் கண்டறியும் பொருட்டு, சி.எஃப்.ஆர் அவ்வாறு செய்வதற்கான சரியான வழி என்று வல்லுநர்கள் நம்பவில்லை, ஏனெனில் கொரோனா வைரஸ் உள்ள பலர் லேசான அறிகுறிகளே தென்பட்டது, அல்லது தென்படவேயில்லை. ஒரு நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையை தீர்மானிப்பது கடினம்.

சி.எஃப்.ஆர் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

சி.எஃப்.ஆர் ஒரு குறிப்பிட்ட காரணத்தால் நிகழும் மொத்த இறப்புகளின் விகிதத்தை, அதே குறிப்பிட்ட காரணத்தால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டு கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, இத்தாலியின் சி.எஃப்.ஆரை மொத்த இறப்புகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம். அதாவது அங்கு மொத்தமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 16,000ஐ, அந்த நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132,000 உடன் வகுக்க வேண்டும்.

சி.எஃப்.ஆர் நமக்கு என்ன சொல்கிறது?

ஒரு நோயின் தீவிரத்தையும் முன்கணிப்பையும் தீர்மானிக்க சி.எஃப்.ஆர் பயன்படுத்தப்படலாம். மொத்த COVID-19 பாதிப்புகளின் எண்ணிக்கை கணக்கிடப்பட்ட நாடுகள் எவ்வளவு தீவிரமாக சோதனை செய்கின்றன என்பதைப் பொறுத்தது, சி.எஃப்.ஆர் முற்றிலும் நம்பகமான முறையாக இருக்க வாய்ப்பில்லை.

publive-image

நினா ஸ்வால்பே கருத்துப்படி, பல இடங்களில் போதுமான சோதனை பொருட்கள் மற்றும் வளங்கள் இல்லாததால், தாங்களாக முன்வந்து  புகாரளிக்கும் நபர்கள் மட்டுமே சோதிக்கப்படுகிறார்கள். இதன் பொருள் பெரும்பாலான நாடுகளில் சோதனை என்பது மருத்துவமனைகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, மேலும் தங்களைத் தாங்களே புகாரளிக்கும் அளவுக்கு நோய்வாய்ப்படாத லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களையும், அறிகுறியற்றவர்களையும், அறிகுறிகளைக் காட்டாதவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

பயன்படுத்தப்பட்ட சோதனையின் வகையைப் பொறுத்து, நாடுகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களை மட்டுமே கணக்கிடக்கூடும். நோய்த் தொற்று இருந்து குணமானவர்களை கணக்கில் எடுத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று ஸ்வால்பே மேலும் சுட்டிக்காட்டுகிறார். எனவே சி.எஃப்.ஆர் மிகைப்படுத்தப்படும் ஒன்றாக உள்ளது. “வேறுவிதமாகக் கூறினால், மருத்துவமனை பராமரிப்பு தேவையில்லாதவர்களைக் கணக்கிடாமல், COVID-19 ஆல் இறக்கும் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதத்தை கணிப்பதில் நாம் பெருமளவில் இருக்கிறோம். இது ஒரு ஆபத்தான செய்தி, இது ஒரு தவறான வகுக்கும் எண்ணை குறிப்பிட வழிவகுக்கிறது" என்று ஸ்வால்பே கூறுகிறார்.

மறுபுறம், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் சீனாவில் உள்ள நிறுவனங்களின் ஆசிரியர்கள் லான்செட் இதழில் சி.எஃப்.ஆர் குறைத்து மதிப்பிடப்படுவதாக பரிந்துரைத்தனர், மேலும் இறப்பு விகிதத்தின் வகுத்தல் என்பது இறந்தவர்கள் மற்றும் அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், இந்த ஆலோசனையை ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நிறுவனத்தின் மார்க் லிப்சிட்ச் அதே பத்திரிகையில் விமர்சித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Corona
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment