Advertisment

அனைவரையும் பரிசோதிப்பது அவசியம் இல்லை: சவால்களை அடுக்குகிறார் எய்ம்ஸ் நிபுணர்

அதே நேரத்தில், கொவிட்-19 நோய் உடைய ஒருவர் எந்த சுவாச பிரச்சனையும் இல்லாமல் உயிர் இழந்தால், அது கொவிட்-19 தொடர்பான மரணமாகாது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அனைவரையும் பரிசோதிப்பது அவசியம் இல்லை: சவால்களை அடுக்குகிறார் எய்ம்ஸ் நிபுணர்

எய்ம்ஸ் மருத்துவ இயக்குனரும், இந்தியாவின் உயர்மட்ட நுரையீரல் நிபுணருமான டாக்டர் ரன்தீப் குலேரியா, கோவிட் -19 தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான உத்திகளை வழிநடத்தும் உயர் மட்ட தொழில்நுட்பக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணல் இங்கே:

இதுவரை உங்களை ஆச்சரியப்படுத்தியது எது? 

உலகளவில்," சில நாடுகள் எவ்வாறு தொற்றுநோயை லேசாக எடுத்துக் கொண்டன" என்ற கேள்வி என்னை ஆச்சரியப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறித்த அளவற்ற நம்பிக்கை, வைரஸ் இங்கு பயணிக்காது என்ற வாதங்களின் விளைவுகளை இன்று நாம் சந்திக்கின்றோம். சீனாவில் என்ன நடக்கிறது? என்பதை உணர்ந்த பின்பும் கூட, பரவல் தடுப்பு நடவடிக்கையை துரிதமாக செயல்பட சில நாடுகளுக்கு வாய்ப்பு இருந்தது.

இந்தியாவில்,மக்கள் ஊரடங்கு தொடர்பான  பிரதமரின் வேண்டுகோள் என்னை ஆச்சரியப்படவைத்தது; இந்த ஊரடங்கு உத்தரவின் முக்கியத்துவத்தை பொது மக்கள் கொண்டாலும், சிலர் அதை முழுமையாகப் பின்பற்றவில்லை என்பது எனக்கு ஏமாற்றத்தை அளித்தது.

உண்மையில் இது மக்கள் இயக்கம். கொவிட்-19 நோய்க்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற வேண்டுமானால், நாம் மருத்துவமனை மட்டத்தில் போராடுவதை விடுத்து சமூக அளவில் கொரோனா வைரஸ் தொற்றை வெல்ல வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்கள் கண்காணிப்பது மட்டுமே  மருத்துவமனைகளின் வேலை; வைரஸ் தொற்றை பரவலை தடுப்பது உண்மையில் ஒரு சமூகத்துக்கான சவால்.

இந்தியா போதுமான அளவு பரிசோதனை செய்யவில்லை? தொற்று பாதிப்புகள் மற்றும் இறப்புகளை நாம் குறைவாக மதிப்பிடுகிறோம் என்ற கருத்தைப் பற்றி ?

முதலில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையின் நோக்கத்தை நாம் பார்க்க வேண்டும். பரிசோதனையின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் என்று நிறைய பேர் வாதிடுகின்றனர். ஆனால், அதற்கு வலுவான காரணங்கள் தேவைப்படுகிறது.

ஆரம்ப நாட்களில், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களிடம்  வைரஸ் தொற்று உள்ளதா? என்ற கேள்வி நம்மில் இருந்தது. அதனால்தான், பயண வரலாறு கொண்ட மக்களையும், அவர்களின் தொடர்பில் இருந்தவர்களையும்  தனிமைப்படுத்தி, பரிசோதனை செய்தோம்.

21 நாட்கள் எல்லைப் பூட்டுதலில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், பரவலை அடுத்தக் கட்டத்திற்கு செல்லாமல்  தடுப்பதற்கான நடவடிக்கை என்ன? தொற்று அதிகமாக இருக்கும் பகுதிகளை அடையாளம் காண்பது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை தேட வேண்டும் .

மேலும், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின்  (ஐ.டி.எஸ்.பி) மூலம் மிகச் சிறந்த சுகாதார தரவுகள் நம்மிடம் உள்ளன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்டவரையும் (அ) கடுமையான சுவாச நோயால் அனுமதிக்கப்பட்டவரையும் இதில் பதிவு செய்யப்படுகின்றனர். இதன் மூலம், எந்தப் பகுதியில்,தொற்று கிளஸ்டர் உருவாகும் என்பதை நம்மால் இன்று தோராயமாக கணிக்க முடியும். கொரோனா வைரஸ் தொற்றுக்கு அனைவரையும் பரிசோதனை செய்வதற்கு ஏராளமான வளங்கள் தேவைப்படுகிறது. மேலும், அதிகமான டெஸ்ட் செயல்முறை மூலம் எந்தவொரு உறுதியான நிலைப்பாடும் நமக்குக் கிடைகாது. எனவே, சோதிக்கப்பட வேண்டிய மக்கள் சோதிப்பது மிகவும் நல்லது.இதுவே கொள்கை ரீதியாக ஒரு நிலையான முடிவை எடுக்க உதவும்.

எங்கு ஹாட்ஸ்பாட்கள் உருவாகின்றன; குறிப்பிடத்தக்க சமூக பரவல் நடைபெறுகிறதா? போன்ற கேள்விகளுக்கு, நமது பரிசோதனை தொடர்பான யுக்திகள் பதிலளிக்க வேண்டும். இதன்மூலம் குறிபிட்ட கிளஸ்டர்களில், கடுமையான கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தல், சுகாதார வளங்களை அதிகமாக்குதல் குறித்த முடிவுகளை எடுக்கு முடியும்.

ஒருவேளை, மிகவும் உடல்நலம் பாதித்த ஒரு புற்றுநோயாளி, கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டப்ப் பின் மரணமடைகிறார்.... அது ஒரு கோவிட் -19 மரணமா?

கொவிட்- 19 தொடர்பான சிக்கல்களால் ஒருவர் இறக்கும் போது அது கொவிட்-19 மரணங்களில்  ஒன்றாகவே கருதப்படுகிறது.  ஒரு நோய்வாய்ப்பட்ட நோயாளிக்கு கொரோனா வைரஸ் தொற்று மூலம் நிமோனியா, செப்சிஸ் போன்ற சிக்கல்களால்  உயிர் இழந்தால், அது கொவிட்-19 தொடர்பான மரணம். அதே நேரத்தில், கொவிட்-19 நோய் உடைய ஒருவர் எந்த சுவாச பிரச்சனையும் இல்லாமல் உயிர் இழந்தால், அது கொவிட்-19 தொடர்பான மரணமாகாது.

கொரோனா வைரஸ் சமூக பரவலைப் பற்றி மிகவும் பேசப்படுகிறது. இதை புரிந்து கொள்வது எப்படி? 

ஓரளவிற்கு, அனைத்து தொற்றுநோய்களும் இறுதியில் சமூகப் பரவலில் முடிவடைகின்றன. இப்போது சமூக பரவலை நாம் தடுக்க முடிந்தாலும், ஒரு கட்டத்தில் இதை நாம் மீண்டும் பரப்புவோம். எனவே, சமுக பரவலை எப்போதும் தடுக்க முடியுமா? என்பது ஒரு கேள்வியே அல்ல.

தொற்றின் ஆரம்பக் கட்டத்திலே, இந்த கொரோனா வைரஸ்  சமூக பரவலைத் தடுப்பதன் மூலம், பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறோம். இதை, ஆங்கிலத்தில் flatten the curve என்று சொல்வார்கள்.

இந்தியாவில் சமூகப் பரவல் இருக்காது என்று சொல்வது சரியானதாக இருக்காது. தற்போதைய நிலவரப்படி, ஓரளவு சமுக அளவிலான பரவல் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுபடுத்த நினைகின்றோம். நல்ல சுகாதார சேவையை வழங்குவதிலும், பிற பகுதிகளுக்கு பரவ அனுமதிக்காத வகையிலும் நமது வளங்களை செலவு செய்கிறோம்.

21 நாள் எல்லைப் பூட்டு- இதுபோன்ற ஒரு கடுமையான நடவடிக்கைத் தேவையா?  உங்களின் பதில்.

இத்தாலி நாட்டோடு ஒப்பிடும்போது, இந்திய மக்கள்தொகையின் சராசரி வயது குறைவு என்பதை  நான் ஒப்புக்கொள்கிறேன்.

கால அளவிலான பாதிப்புகளைப்  பார்த்தோமானால், கொரோனா வைரஸ், 70 வயதுடையவரைக் காட்டிலும், 80 வயதிற்குட்பட்டவர்களைத் தான் அதிகமான பாதிக்கின்றது. எவ்வாறாயினும், இந்தியாவில் இந்த வயதில் அதிகப்படியான மக்கள் உள்ளனர் என்பதை இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் பலருக்கு நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கோளாறு அதிகமாக உள்ளன. இவ்வளவு ஏன்.... உலகின் நீரிழிவு நோயின் தலைநகரமாக இந்தியா உள்ளது. இந்தியாவில்  பெரும்பாலான மக்கள், மேற்கத்திய நாடுகளை விட 10 ஆண்டுகளுக்கு முன்பே இதயக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால், ஒரு முழுமையான எல்லைப் பூட்டு அவசியமாகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தினாலும், இந்த 21 நாட்கள் எல்லைப் பூட்டு மிகவும் அர்த்தமுள்ளது.

நாட்டின் எய்ம்ஸ் நிறுவனத்தின் தலைவராக, நீங்கள் பார்க்கும் அளவீடுகள் என்ன?

கட்டுப்படுத்துதல்....கட்டுப்படுத்துதல்.....கட்டுப்படுத்துதல்.

நமது சுகாதார வசதிகளை நாம் உயர்த்த வேண்டும். பொதுத்துறை மற்றும் தனியார் துறை ஒன்று சேர வேண்டிய நேரம் இது. உதாரணமாக, சில அரசு பொது மருத்துவமனைகளில்  ஐ.சி.யூ பராமரிப்பு, வென்டிலேட்டர் ஆகிய வசதிகள் போதிய அளவில் இல்லை. வென்டிலேட்டர் மூலம் உயிரைக் காப்பாற்றுவதில் தனியார் துறை மிகச் சிறந்த நிலையில் இருக்கக்கூடும். நமது சுகாதார வளங்களை ஒன்றிணைத்து, உயிரைக் காப்பாற்ற ஒரு குழுவாக பணியாற்றுவது முக்கியம்.

‘எங்களுக்கு தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது’ என்று பல நாடுகளில் கூறப்படுகிறது. அதன் வரையறை என்ன?

அமெரிக்காவில், புதிய எண்ணிக்கை வீழ்ச்சியடையத் தொடங்கும் போது நிபுணர்கள் அவ்வாறு தெரிவிக்கின்றனர். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட  நாட்டில், இதை நாம் எப்படி அளவிடுவது? இது கடினமான கேள்வி. ஒரு தேசத்திற்கு முழு வளைவையும் வரைவது கடினம் என்று நான் நினைக்கிறேன். அதனால் தான் பிராந்தியம் வாரியாக கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்தி வருகிறோம்.

இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதன் தனித்துவமான சவால்கள் யாவை? தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ ) மற்றும் வென்டிலேட்டர்கள் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் உள்ளனவே? 

இது பல வழிகளில் ஒரு தனித்துவமான தொற்றுநோய். நிமோனியா மற்றும் சுவாச செயலிழப்பை ஏற்படுத்தும் ஒரு தொற்றுநோயானது எப்போதும் மிகவும் சவாலானது.  மிக உயர்ந்த அளவில் இதற்கு கண்காணிப்பும், சிகிச்சையும் தேவைப்படுகிறது.

நீர்வழியாக தொற்றுநோய் பரவினால் , அதை எளிதாக கட்டுப்படுத்தலாம். ஆனால் பெரும்பாலான தொற்றுநோய்கள் துளிநீரால் (Water Droplets) வேகமாக பரவுகின்றன. இதில் H1N1 போன்ற லேசான தொற்று நோய்களும் அடங்கும். ஆனால், கொரோனா வைரஸ் மிக விரைவாக பரவுகிறது. அதிகம் ஆபத்துள்ள நோயாளிகளில், ஒரு குறிப்பிடத்தக்க இறப்பை இந்த கொவிட்- 19 நோய் ஏற்படுத்துகிறது.

எனவே, மருத்துவமனையின் உள்கட்டமைப்பை  மேம்படுத்துவது நமக்கிருக்கும் மிகப்பெரிய சவால். அதிக வென்டிலேட்டர்களை எவ்வாறு பெறுவது ? ஏற்கனவே உள்ளவற்றை எவ்வாறு விடுவிப்பது? சுகாதாரப் பணியாளர்களின் அச்சத்தை எவ்வாறு சரிசெய்வது ? என்ற கேள்வி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பல மருத்துவமனை அதிகாரிகள் தங்களைப் பற்றியும், தங்கள் குடும்பங்களைப் பற்றியும், தொற்றுநோயை வீட்டிற்கு பரவக்கூடும் என்பது பற்றியும் பயப்படுகிறார்கள்.

பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) கையிருப்பு எங்களிடம் போதுமான அளவில் உள்ளன. வென்டிலேட்டர் பயன்பாடு குறித்த உத்திகளையும் உருவாக்க வேண்டும். ஒரு பிரத்யேக மருத்துவமனை அல்லது ஒரு கட்டிடம் இருக்க வேண்டும். இத்தாலியில், கொவிட்/கொவிட் அல்லாத அனைவரும் ஒரு பொதுவான வார்டுகளில்  தங்கவைக்கப் பட்டிருந்தனர். அதனால், அங்கு வைரஸ் தொற்று பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகின. கொவிட்- 19 தனி மருத்துவமனையாக இருந்தால், நீங்கள் பாதுகாப்பு உபகரணங்களின் தேவைகளையும் குறைக்க முடியும்.

மற்றொரு மிக முக்கியமான விஷயம், நோய்த்தொற்றுக் கட்டுப்பாட்டில் பயிற்சியளிக்கப்பட்ட மனித வளம். கொரோனா நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை மேலாண்மை தேவைப்படுகிறது. உதாரணமாக நுரையீரல் கடினமாகும் பட்சத்தில், பொருத்தப்பட்டிருக்கும் வென்டிலேட்டர்களில்  மாற்றம் செய்ய வேண்டும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த அவர்களுக்கு உடனடியாக மருந்துகள் கொடுக்கப்பட வேண்டும். சிறுநீரக செயலிழந்தால் உடனடியாக டயாலிசிஸ் தேவைப்படுகிறது.

டெலிமெடிசின் மூலம் இதைச் செய்ய முடியுமா? என்ற  உத்திகளையும் நாம் யோசிக்க வேண்டும். ஒரு மருத்துவ நிபுணர் இரண்டு (அ) மூன்று ஐ.சி.யு பிரிவுகளில்  சிகிச்சையளிக்கும் குழுவுக்கு டெலிமெடிசின் மூலம் தொடர்ந்து ஆலோசனை வழங்க முடியுமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

எய்ம்ஸ் ஏற்கனவே ஒரு இணைப்பு மையத்தை உருவாக்கியுள்ளது.  இதன்மூலம், நாட்டில் எங்கிருந்தும் மருத்துவர்கள் அவசர சிகிச்சை மேலாண்மை குறித்து எங்களுடன் பேசலாம்.

வைரஸின் இந்திய ஸ்ட்ரெய்ன் குறித்து இதுவரை நமக்கு என்ன தெரியும்? ஆராய்ச்சி இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா ஸ்ட்ரெய்னின் வீரியம் குறைவாக இருக்கும் என்று  நிறைய யூகங்கள் உள்ளன. அதை மெய்பிக்க  டேட்டா இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நாங்கள் வைரஸை தனிமைப்படுத்தியுள்ளோம். எனவே, தடுப்பூசி குறித்து நிறைய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

சுகாதார பணியாளர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடன் அஜித்ரோமைசின் பற்றி பேசியிருந்தார். அதற்கான ஆதாரம் என்ன?

நோயாளிகளுக்கு இந்த இரண்டு மருந்துகளையும் பயன்படுத்த அவசர ஒப்புதல் மூலம் அமெரிக்க எஃப்.டி.ஏ (உணவு மற்றும் மருந்து நிர்வாகம்) ஒப்புதல் அளித்துள்ளது.  பிரான்ஸ், சீனா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட தரவுகளையும் பார்த்தோம். மருந்தின் இயக்கவியல், மருந்தின் பாதுகாப்பு  அடிப்படையில், இந்த மருந்து பாதுகாப்பானது என்று கண்டறிந்தோம். பல நாட்களுக்கு முன்பு இதை நாங்கள் பரிந்துரைத்தோம். இவை இரண்டிற்கும் இன்னும் குறைந்த அளவே  நிரூபிக்கப்பட்டுள்ளன. நாளாக நாளாக, ​​கூடுதல் சான்றுகள் கிடைக்கும்.

அதிக வெப்பநிலை வைரஸைக் குறைக்கும் என்று தகவல்கள் பற்றி? 

வெப்பநிலைக் கோட்பாடு அடிப்படையில் வெப்பநிலை அதிகரிக்கும் போது,வைரஸின் வீரியத்தன்மை குறையக்கூடும். வெளிப்புற சூழலில், வெப்பநிலை 40 ° C க்கு மேல் இருந்தால், வைரஸ் மிக நீண்ட நாட்களுக்கு உயிர்வாழாது. இருப்பினும், இரண்டு விஷயங்களை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்:

சிங்கப்பூர் போன்ற  வெப்பமண்டலமான பிற பகுதிகளில்  இன்னும் வைரஸ் பரவல்கள் உள்ளன ; இரண்டாவதாக, வெப்பநிலையில் இருந்தாலும் குளிரூட்டப்பட்ட இடத்தில் தான் நம்மில் பலர் நேரத்தை செலவிடுகிறோம். அங்கே இருமல் மற்றும் சளி இருந்தால், வைரஸ் அந்த சூழலில் நீண்ட காலத்திற்கு சாத்தியமானதாக இருக்கும்.

எனவே கோடைக்காலம் வெளிப்புறங்களில் வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவக்கூடும், ஆனால், வீட்டிற்குள் இல்லை.

ரன்தீப் குலேரியா, கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களை இணைக்கும் தேசிய தொலை தொடர்பு மையத்தை நடத்தும் ஒரு குழுவுக்கு தலைமை தாங்குகிறார்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment