Advertisment

பல தடுப்பூசிகள் இருந்தும் இன்னும் தட்டுப்பாடு ஏன்?

வேறு எந்த நோயையும் விட கோவிட் -19 தடுப்பூசிகள் வேகமாக உருவாக்கப்படுகின்றன. இருப்பினும் தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது. உலகளாவிய தடுப்பூசி உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகமான தடுப்பூசிகள் மற்றும் ஐபி தள்ளுபடி ஆகியவற்றை இந்தியா எதிர்பார்க்கிறது.

author-image
WebDesk
New Update
Covid 19, covid 19 india second wave, Challenge ahead in vaccinating India, vaccinating India, கோவிட் 19, கொரோனா வைரஸ், கோவிட் 19 தடுப்பூசி, இந்தியாவுக்கு முன்னால் உள்ள சவால், coronavirus, covid 19 updates, india

கோவிட் -19 தடுப்பூசிகள் வியக்கத்தக்க வேகத்தில் உருவாக்கப்பட்டன. வேறு எந்த நோயும் இவ்வளவு வேகத்தில் இத்தனை தடுப்பூசிகள் உருவாக்கத்தைக் கண்டதில்லை. 250 தடுப்பூசி விண்ணப்பதரார்கள் உருவாக்கி வரும் தடுப்பூசிகளில், குறைந்தது 10 தடுப்பூசிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் முதல் கட்டத்தில் பெரும்பாலானவை முன்னர் மனிதர்களில் பயன்படுத்தப்படாத இரண்டு தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. ஃபைசர்-பயோஎன்டெக், மாடர்னாவின் எம்.ஆர்.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசிகள் மற்றும் அஸ்ட்ரா ஜெனெகா / ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வைரல் வெக்டார் அடிப்படையிலான தடுப்பூசிகள், ஸ்புட்னிக் வி, மற்றும் சீனாவிலிருந்து வந்த கேன்சினோ பயோலாஜிக்ஸ் கொரோனா தடுப்பூசி ஆகியவை இதில் அடங்கும்.

Advertisment

செயலற்ற வைரஸைப் பயன்படுத்துவது குறித்த நேரத்தை சோதித்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் அமைந்த தடுப்பூசிகளில் பாரத் பயோடெக்-ஐ.சி.எம்.ஆர்-ன் கோவேக்சின், ஜான்சன் அண்ட் ஜான்சனின் ஜான்சென் மற்றும் சீனாவிலிருந்து வந்த சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகிய தடுப்பூசிகள் இதில் அடங்கும். இவை அனைத்தும் கடுமையான நோய் மற்றும் மரணத்திலிருந்து காப்பாற்றுவதில் பாதுகாப்பானவை மற்றும் திறமையானவை ஆகும். ஆனால், அவை தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பது அவசியமில்லை.

இவை இரண்டு முறை வழங்கப்படுகின்றன. ஜான்சென் ஒருமுறை மட்டுமே போடப்படும் தடுப்பூசி ஆகும். இது எதிர்கால தடுப்பூசிகளுக்கான ட்ரெண்ட் செட்டராக இருக்கிறது. குறைந்தது 50 தடுப்பூசிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் 3 அல்லது 4 அனுமதிகளைப் பெற்றுள்ளள்ளன. இந்தியாவில் ஜைடஸ் கேடிலாவில் இருந்து டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி உட்பட பல தடுப்பூசி முன்னேற்றத்தில் இறுதி கட்டத்தில் உள்ளன.

பல தடுப்பூசிகள் இருந்தும் இன்னும் பற்றாக்குறை ஏன்

பல தடுப்பூசிகள் உருவாக்கப்படுவதால், SARS-CoV-2 போன்ற வைரஸுக்கு எதிராக திறமையான தடுப்பூசிகளை தயாரிப்பது மிகவும் கடினம் அல்ல என்ற தோற்றத்தை இது உருவாக்கக்கூடும். அதிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். தடுப்பூசி உருவாக்குவது என்பது மிகவும் சிக்கலானது. தடுப்பூசி உருவாக்குவது ஒரு சிறப்பு நிறுவனமாகும். சாதாரண சூழ்நிலைகளில், விஞ்ஞான அறிவு உருவான பின்னர், எந்தவொரு தடுப்பூசியையும் உருவாக்க 10-15 ஆண்டுகள் ஆகும். உலகம் முழுவதும் இப்போது இந்தியாவில், கேள்வி எழுப்பப்படுவது என்னவென்றால், பல தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட, தடுப்பூசி விநியோகத்தில் ஏன் ஒரு பெரிய பற்றாக்குறை உள்ளது. இந்த தடுப்பூசிகள் நியாயப்படுத்த முடியாத அளவில் எல்லோராலும் அணுக முடியாமல் இருப்பது ஏன்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முதலாவதாக, உலகளவில் சுமார் ஏழு பில்லியன் (700 கோடி) மக்களுக்கு தலா 2 முறை தடுப்பூசி போடப்பட வேண்டும் என்பதால் தடுப்பூசியின் தேவை மிக அதிகமாக உள்ளது. இரண்டாவதாக, பணக்கார நாடுகள் எப்பொழுதும் போலவே நடந்து கொண்டன. கிடைக்கக்கூடிய தடுப்பூசிகளில் 80%க்கும் அதிகமான தடுப்பூசிகளை உலக மக்கள்தொகையில் சுமார் 20% மட்டுமே கொண்ட ஒரு சில நாடுகளால் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன அல்லது ஏற்கனவே வாங்கி சேமிக்கப்பட்டுள்ளன. கோவேக்ஸ் போன்ற உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையிலான முயற்சி இருந்தும்கூட ஆப்பிரிக்க மக்களில் சுமார் 1% பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர்.

இங்கே மற்ற சில சிக்கல்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, இப்போதைக்கு, ஃபைசர், மாடர்னா மற்றும் சமீபத்தில் ஜான்சென் ஆகிய மூன்று தடுப்பூசிகள் மட்டுமே அமெரிக்க எஃப்.டி.ஏ.வால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மிகவும் மலிவான விலையுள்ள அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி இன்னும் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 12-16 வயதிற்குட்பட்ட குழுக்களுக்கு நோய்த்தடுப்பு செய்ய ஃபைசர் ஒப்புதல் பெறுவதாக சமீபத்திய அறிக்கைகள் கூறுகிறது. இந்த வயதினரிடையே பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை முடிக்க மாடர்னா மற்றும் ஜான்சென் நெருக்கமாக இருப்பதால், மேற்கத்திய நாடுகள், ஏற்கனவே வயது வந்தோர்களில் கணிசமானவர்களை நோய்த்தடுப்புக்கு உட்படுத்தியுள்ளன. அனேகமாக, இளம் குழந்தைகள் மற்றும் பச்சிளம்குழந்தைகளுக்குகூட தடுப்பூசி போடுவதைத் தொடரும். எனவே இந்த தடுப்பூசிகளை சந்தையில் தடையில்லாமல் அணுகுவது இன்னும் கடினமாகிவிடும்.

மற்றொருபுறம், பிரேசிலில் ‘ஸ்பூட்னிக் வி’-க்கான ஒப்புதல் சமீபத்தில் மறுக்கப்பட்டது. சீனாவின் சினோவாக் மற்றும் சினோபார்மின் தடுப்பூசிகள் மேற்கத்திய நாடுகளில் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை. திறமையான மற்றும் பாதுகாப்பான தடுப்பூசிகள், அவற்றின் தோற்றத்தைப் பொருட்படுத்தாமல், விமர்சன ரீதியாக ஆனால் விரைவாக ஆராய்ந்து களத்தில் சேர்க்க வேண்டும்.

இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை

உலகில் வேறு எங்கும் காணப்படாத அளவில் தொற்றுநோயின் மிகக் கொடூரமான இரண்டாவது அலையின் பிடியில் இந்தியா சிக்கியுள்ளது. ஒரு நாளைக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், வைரஸ் மிகவும் ஆபத்தான வகைகளாக மாறக்கூடும் என்ற தீவிர கவலை உள்ளது. மேலும், வைரஸ் பெருக்கத்தின் தொடர்நிகழ்வை விரைவில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உலகளாவிய பிரச்சினையாக மாறும். உலகெங்கிலும் இந்த புதிய அலைக வைரஸ் பிறழ்வுகளால் இயக்கப்படுகின்றன. தற்போதைய தடுப்பூசிகள் இவற்றிற்கு எதிராக பயனுள்ளதாக தோன்றினாலும், தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் நோய் எதிர்ப்பில் இருந்து தப்பிக்கும் வைரஸ் பிறழ்வுகளின் எழுச்சி அதிகரிக்கும்.

இயல்பாகவே பலவீனமான சுகாதார அமைப்பைக் கொண்டுள்ள இந்தியா முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜன் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. மேலும் இந்தியாவில் வயதுவந்தோர் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதறற்கான அதன் லட்சிய திட்டத்தின் விநியோகச் சங்கிலியில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது. தடுப்பூசி விநியோகத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்தில் இருந்தாலும், இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 13% பேர் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூச்யைப் பெற்றுள்ளனர். சுமார் 2% பெருக்கு முழுவதுமாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பல நாடுகள் ஏற்கனவே வயது வந்தோர் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளன.

இந்தியா தடுப்பூசி உற்பத்தியின் மையமாக அறியப்படுவதால், அது ஏன் அனைவருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று எல்லோரும் கேட்கிறார்கள். இதற்கு காரணம், தற்போது நாட்டில் கிடைக்கக்கூடிய இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிப்பது என்பது கடினமானது. தடுப்பூசிகள் பல கூறுகளின் சிக்கலான சூத்திரங்களைக் கொண்டது. மேலும், அவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் தடையற்ற விநியோகத்தை சார்ந்துள்ளது. மொத்தப் பொருளின் உற்பத்தி முதல் குப்பிகளில் தடுப்பூசி ஃபார்முலாவை நிரப்புவது வரை மிகவும் சிக்கலான அதிக நேரத்தைச் செலவழிக்கும் செயல்முறையாகும். போதுமான நிதி கிடைத்த பிறகும், தற்போதுள்ள உற்பத்தியை அதிகரிப்பதற்கு தவிர்க்க முடியாதபடி குறைந்தபட்சம் 2-3 மாதங்கள் ஆகும்.

தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டாலும், உண்மையான உற்பத்தி தொடங்குவதற்கு பல மாதங்கள் ஆகும். இந்தியாவின் வயது வந்த மக்களுக்கு தடுப்பூசி போடுவதால், அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படாவிட்டால், குறைந்தபட்சம் அடுத்த சில மாதங்களுக்கு தடுப்பூசி விநியோகத்தில் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும். இந்த தேர்வை கவனமாக ஆனால் விரைவாக கருத்தில் கொள்ள வேண்டும்.

ஸ்பூட்னிக் வி, ஜான்சென், மற்றும் நோவாவேக்ஸ் உள்ளிட்ட குறைந்தது 3 அல்லது 4 தடுப்பூசிகள் ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன. மேலும் பல தடுப்பூசிகள் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. 2021ம் ஆண்டு இறுதியில் இந்தியா நிச்சயமாக உலகின் முக்கிய பகுதிகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான தடுப்பூசிகளை தயாரிக்கும் என்ற நம்பிகையில் உள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கூட்டு முன்மொழிவு உலக வர்த்தக அமைப்பில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்படும். இந்த முன்மொழிவு விரைவாக பரிசீலிக்க வரும்போது அதற்கு ஆதரவாக அமெரிக்கா ஏற்கனவே சாதகமாக பதிலளித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஏற்கனவே கோவிட் தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஐபிஆரை குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு போதுமான பாதுகாப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகம் முழுவதற்கு உயர் தரமான மற்றும் மலிவு விலையுள்ள தடுப்பூசிகளை தயாரிக்க பெரிதும் உதவும். இது எல்லாமே நோய் எதிர்ப்பில் இருந்து தப்பிக்கும் வைரஸ் பிறழ்வுகளை உருவாக்குவதற்கு முன்பு நடக்க வேண்டும். இந்த பந்தயத்தில் வைரஸை தோற்கடித்து முன்னேறுவதைத் தவிர மனிதகுலத்திற்கு வேறு வழியில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine India Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment