Advertisment

அமெரிக்காவில் கச்சா எண்ணெய் வாங்குவோருக்கு பணம்! ஏன் இந்த நிலைமை?

கச்சா எண்ணையை தயவு செய்து நீங்கள்  வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு நாங்கள் $40 தருகிறோம் என்று கூறுவதற்கு சமமாகும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
அமெரிக்காவில் கச்சா எண்ணெய் வாங்குவோருக்கு பணம்! ஏன் இந்த நிலைமை?

உலகின் ஆக சிறந்த யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலை (டபிள்யூ.டி.ஐ) கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாயின் விலை, நேற்று நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் “-40.32" டாலராக சரிந்த போது, அமெரிக்கா கச்சா எண்ணெய் சந்தைகள் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியது என்று திடமாக சொல்லலாம்.

Advertisment

அதாவது, இந்த விலையில், வாடிக்கையாளர்கள் தங்களிடம் வாங்கும் ஒவ்வொரு பீப்பாய் கச்சா எண்ணைய்க்கும், 40 அமெரிக்கா டாலரை விற்பனையாளர்கள் கொடுக்க வேண்டும். (சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லை, தயவு செய்து நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள், அதற்கு நாங்கள் $40 தருகிறோம் என்று கூறுவதற்கு சமமாகும்)

ஆனால், இது எப்படி நடந்திருக்க முடியும்? முதலாவதாக, விலைகள் பூஜ்ஜியத்திற்கு கீழே எப்படி சரிந்தன? என்ற கேள்விகள் நம் மனதில் இப்போதே எழ ஆரம்பித்திருக்கும்.

தற்போதைய உலக நடப்பு சூழலில், இது ஒரு நியாயமற்ற, அசாதாரணமான முடிவு இல்லை  என்பதே இதற்கான பதிலாக அமையும்.

தற்போதைய சூழல் :

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக உலகளாவிய முடக்கத்திற்கு முன்பே,  கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியது என்பதை முதலில் நாம்  புரிந்து கொள்ள வேண்டும்.  2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 60 டாலர் அளவில் விற்கப்பட்ட ஒரு பீப்பாய்,  மார்ச் மாத இறுதியில் 20 டாலர் அளவில் குறைந்தன.

இதற்கு காரணம், மிகவும் வெளிப்படையானது. தேவைக்கும் அதிகமாக ஒரு பொருளின் விநியோகம் இருக்கும்போது, அதன் விலை குறையும் என்பது ஊரறிந்த விசயம் தான். அதுதான், தற்போது உலகளாவிய எண்ணெய் சந்தைகளிலும், குறிப்பாக அமெரிக்கா எண்ணெய் சந்தையிலும் நடந்து வருகிறது. அதிகமான, கச்சா எண்ணெய் உற்பத்தியால் எண்ணெய் சந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது.

வரலாற்று ரீதியாக, சவுதி அரேபியாவின் (உலகளாவிய தேவையில் 10 சதவீதத்தை ஒற்றையாளாக ஏற்றுமதி செய்கிறது) தலைமையிலான பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு ஒரு கார்டெல்லாக (போட்டியை அழித்து விலைகளை ஏற்றி வைப்பது போன்ற நோக்கங்களுக்கான வணிக நிலையங்களின் கூட்டணி) இருந்து சாதகமான விலைகளை நிர்ணயிக்கின்றன. இந்த நாடுகள் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் விலையைக் குறைக்கும், உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் எண்ணெய் விலையை உயர்த்தும்.

ஒபெக் அமைப்பு உலகளாவிய எண்ணெய் விலைகள் மற்றும் விநியோகத்தை சரிசெய்யும் நோக்கில், சமீப காலமாக  ரஷ்யா மற்றும் ஒபெக் +  நாடுகளுடன் இனைந்து செயல்பட்டு வருகின்றது.

எண்ணெய் விலையைக் குறைக்கும் நோக்கில், உற்பத்தியைக் குறைப்பது (அ) கச்சா எண்ணெய் கிணற்றை முற்றிலுமாக மூடுவது  என்பது மிகவும் கடினமான  செயல் என்பதையும் இங்கு புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், உற்பத்தியை மீண்டும் தொடங்குவது மிகவும் சிக்கலானது, பொருளாதார ரீதியில் சவாலானது. மேலும், உற்பத்தியைக் குறைக்க வேண்டும் என்ற ஒரு நாட்டின் முடிவை, மற்றவர்களும் பின்பற்றாவிட்டால், உலகளாவிய எண்ணெய் சந்தைகளில் அந்த நாடு தனது ஆதிக்கத்தை இழக்க நேரிடும்.

 

பிரச்சனை எங்கு ஆரம்பத்தது: கடந்த மார்ச் மாத தொடக்கத்தில், கச்சா எண்ணெய் விலையை சீரான முறையில் நிர்ணயிக்கத் தேவைப்படும் உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்திற்கு, சவுதி அரேபியாவும் ரஷ்யாவும் உடன்படாததால், எண்ணெய் உற்பத்தி நாடுகளின் பழைய மகிழ்ச்சியான தருணம் முடிவுக்கு வந்தது. இதன் விளைவாக, சவூதி அரேபியா தலைமையிலான எண்ணெய் ஏற்றுமதி நாடுகள், எண்ணெய் உற்பத்தியில் கைவைக்காமல், ஒருவருக்கொருவர் விலையைக் குறைத்து போட்டி போட ஆரம்பித்தனர்.

சாதாரண காலங்களில் கூட, இந்த விலை குறைப்பு  நடவடிக்கை நிலையானதாக இருக்க முடியாது . ஆனால், கொரோனா வைரஸ் பெருந்த்தொற்று , இந்த நடவடிக்கையை பேரழிவுக்கு வித்திட்டது. கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும், வளர்ந்த நாடுகள் கோவிட் -19 தொற்றுக்கு  இரையாகின. உலகம் பொது முடக்க நிலைக்கு செல்லப்பட்டதால், விமானங்கள் குறைந்தன, சாலைகளில் குறைவான கார்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆங்கிலத்தில் படிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்

கோவிட் -19  :

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழுத்தத்தால், சவுதி அரேபியாவும், ரஷ்யாவும் தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை மறந்து, கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கடந்த வாரம் கையெழுத்திட்டனர். உண்மையில், இது மிகவும் தாமதமாக வந்த முடிவு என்றே சொல்ல வேண்டும்.

எண்ணெய் ஏற்றுமதி நாடுகள், நாளொன்றுக்கு எண்ணெய் உற்பத்தியை 6 மில்லியன் பீப்பாய்கள் குறைக்க முடிவு செய்திருந்தாலும், (வரலாற்றில்,  மிக உயர்ந்த உற்பத்தி குறைப்பு நடவடிக்கை)  கொரோனா வைரஸ் பொது முடக்கத்தால், எண்ணெயின் தேவை நாளொன்றுக்கு 9 முதல் 10 மில்லியன் பீப்பாய்கள் வரை குறைந்து வருகிறது. மார்ச்-ஏப்ரல் மாதங்களில், விநியோகம்-தேவை இரண்டிற்குமான இடைவெளி  தொடர்ந்து மோசமடைந்தது. அதன் உச்சமாக,  கச்சா எண்ணெயைக் கொண்டு செல்வதற்காகப் பயன்படும்  ரயில்களும், கப்பல்களும்  கச்சா எண்ணெயைச் சேமிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

2018 ஆம் ஆண்டில் அமெரிக்கா மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக மாறியது என்பதை புரிந்துகொள்வதும் இங்கு முக்கியமானது. கச்சா எண்ணெயைக் குறைக்க வேண்டும் என்று முந்தைய அமெரிக்க அதிபர்கள் கூறி வந்ததை போலல்லாமல், டொனால்ட் டிரம்ப் (குறிப்பாக தேர்தல் நேரத்தில்) கச்சா எண்ணெயின் விலை உயர்வுக்கு அதிக அழுத்தம் கொடுத்து வருகிறார்.

திங்கட்கிழமை என்ன நடந்தது?

யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இடைநிலையின் மே மாத ஒப்பந்தங்கள் ஏப்ரல் 21ம் தேதியில் இருந்து காலாவதியாகின்றன. காலக்கெடு நெருங்கியதால், விலைகள் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது . இதற்கு, இரண்டு பரந்த காரணங்கள் இருக்கலாம் .

நேற்று, பல உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை மூடுவதற்கு பதிலாக, நம்பமுடியாத குறைந்த விலையில் தங்கள் கச்சா எண்ணெய்கள் விற்க ஆரம்பித்தனர்.

நுகர்வோர் (ஒப்பந்தங்களை வைத்திருப்பவர்கள்) தரப்பினருக்கும், இது ஒரு பெரிய தலைவலியாக இருந்தது. சேமிக்க இடமில்லாத காரணத்தால், அவர்களும் அதிக எண்ணெயை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வெளியேற விரும்பினர்.

எனவே, அதிகப்படியான கச்சா எண்ணெய் கையிருப்பில் இருந்து விலக வேண்டும் என்ற விரக்தி நுகர்வோருக்கும், விற்பனையாளருக்கும் இடையில் இருந்ததால், நியூயார்க் பங்கு பரிவர்த்தனை சந்தையில் கச்சா எண்ணையின் விலை பூஜ்ஜியமாக வீழ்ச்சியடைந்தது மட்டுமல்லாமல் மைனஸ் பகுதிக்கும் சென்றது.

சுருங்க சொன்னால், எண்ணெயை சேமிப்பதற்கும் (விநியோக ஒப்பந்தம் வைத்திருப்பவர்கள் )  உற்பத்தியை நிறுத்துவதற்கும் (உற்பத்தியாளர்கள்) பதிலாக, ஒரு பேரலுக்கு 40 டாலர் செலவு செய்து  அதை அகற்றுவது நேற்றைய சூழலில் லாபகரமாக இருந்தது.

எண்ணெய் விலை எதிர்காலத்தில் எப்படி இருக்கும்?

அமெரிக்க சந்தைகளில் காணப்பட்ட நிலவரத்தை தான் நாம் இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறோம். மற்ற இடங்களில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்திருந்தாலும், இந்த அளவிற்கு இல்லை. மேலும், அமெரிக்காவில் ஜூன் மாதத்திற்கான எண்ணெய் விலை பீப்பாய்க்கு 20 டாலராக உள்ளது.

இது ஒரு முறை நடக்கும் நிகழ்வாக கூட இருந்திருக்கலாம். எண்ணெய் உற்பத்தியாளர்கள்  தங்கள் உற்பத்தியை மேலும் குறைக்க கட்டாயபடுத்தப் பட்டிருப்பதால், இந்த நிகழ்வு மேலும் நிகழாது.

எவ்வாறாயினும், இது போன்ற ஒரு நிகழ்வு மீண்டும் நடக்க வாய்ப்பில்லை என்பதை அறுதியிட்டு கூற முடியாது. ஏனெனில், கோவிட் -19 பெருந்தொற்றாக  இருப்பதால், ஒவ்வொரு நாளும், கச்சா எண்ணையின் தேவை குறைந்து வருகிறது.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment