Advertisment

அடுத்த ஜூலைக்குள் 25 கோடி இந்தியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஹைதராபாத்தை சேர்ந்த பையோலாஜிக்கல் ஈ ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவிற்கு தடுப்பூசியை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
Covid-19 vaccine tracker Oct 5 India hopes to vaccinate 20-25 crore people by July next year

Covid-19 vaccine tracker, Oct 5: India hopes to vaccinate 20-25 crore people by July next year :  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் கூற்றுப்படி அடுத்த வருடம் ஜூலைக்குள் இந்தியா மக்கள் தொகையில் 6-ல் ஒரு பங்கினருக்கு, அதாவது 20 முதல் 25 கோடி நபர்களுக்கு கொரோனா வைரஸுக்கு தடுப்பூசி வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஆரம்பத்திற்குள் ஒன்று அல்லது அதற்கு மேலான தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டிற்கு வரும் என்று ஒரு கருத்து நிலவி வருகிறது. தற்போது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டு மருத்துவ சோதனைகளை மேற்கொண்டு வரும் தடுப்பூசியில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது இந்தியா.

Advertisment

அடுத்த ஆண்டு ஜூலைக்குள் 40 முதல் 50 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்க இந்தியா திட்டமிட்டு வருவதாக ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். இது 20 முதல் 25 கோடி மக்களுக்கு போதுமானதாக இருக்கும். இதில் சில மருந்துகள் இன்னும் சோதனைப்பணியில் இருப்பதால், அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் தான் கிடைக்கும். குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் என்ற அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஒரே பரு மருந்து மட்டும் தான் தற்போது மூன்றாம் கட்ட பரிசோதனையில் உள்ளது. அது சிங்கிள் டோஸ் வேக்சின் என்பது குறிப்பிடத்தக்கது.

யாருக்கெல்லாம் முதன்மையாக உரிமை கொடுத்து கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் பட்டியல் தயாரிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டதாக ஹர்ஷ் வர்தன் அறிவித்தார். இந்த மாத இறுதிக்குள் இந்த பட்டியல் தயாராகிவிடும். தடுப்பூசிகளின் சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விநியோகம் உள்ளிட்டவற்றை சரியாக செய்ய ஒரு குழு ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

To read this copy in English

இந்திய நிறுவனங்கள் தற்போது இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து வருகின்றன. இரண்டும் இரண்டாம் கட்ட மனித சோதனையில் உள்ளது. ஒன்று ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனமும், மற்றொன்று அகமதாபாத்தை தளமாகக் கொண்ட ஜைடஸ் காடிலாவும் உருவாக்கி வருகின்றன. சோதனைகள் முறையாக நடைபெற்றால் , அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அவை கிடைக்கக்கூடும்.

கூடுதலாக இந்திய நிறுவனங்கள் நான்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன், இந்தியாவில் தயாரிப்பு மற்றும் விநோயகத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளது. புனேவின் சீரம் நிறுவனம் இரண்டு தடுப்பூசிகளை கொண்டு வர உள்ளது. ஒன்று ஆக்ஸ்ஃபோர்ட் நிறுவனத்தின் அஸ்ட்ரா ஜெனெக்கா மற்றும் அமெரிக்க நிறுவனத்தின் நோவாவாக்ஸ் ஆகும். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில் மனித சோதனைகளுக்காக வந்துள்ளது.

Covid-19 vaccine tracker, Oct 5: India hopes to vaccinate 20-25 crore people by July next year Visitors with protective masks to help curb the spread of the coronavirus take selfies at shopping arcade in Asakusa district Tuesday, Sept. 29, 2020, in Tokyo. The Japanese capital confirmed more than 200 coronavirus cases on Tuesday. (AP Photo/Eugene Hoshiko)

Covid-19 vaccine tracker, Oct 5: India hopes to vaccinate 20-25 crore people by July next year

ரஷ்ய தடுப்பு மருந்தினை டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் வழங்க உள்ளது. இந்த தடுப்பூசி தன்னுடைய இறுதி கட்ட மனித சோதனையை இந்தியாவில் நடத்த உள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பையோலாஜிக்கல் ஈ ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்தியாவிற்கு தடுப்பூசியை கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஜப்பான் மக்களுக்கு ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்?

க்யோடோ நியூஸ் ஏஜென்சியின் செய்திப்படி, ஜப்பான் அரசு தங்களின் மக்களுக்கு குறைந்த பட்சம் ஒரு டோஸ் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளது. இந்த முடிவுக்கு வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை ஒப்புதழ் வழங்கியது ஜப்பான் அரசு. அஸ்ட்ராஜென்கா மற்றும் பைஜெர் நிறுவனத்துடன் தலா 120 மில்லியன் தடுப்பூசிகளுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மொடெர்னா நிறுவனத்திடம் 40 மில்லியன் டோஸ்களுக்கான பேர ஒப்பந்தத்தில் இறங்கியுள்ளது. இந்த மூன்று மருந்துகளும் அமெரிக்காவில் மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையில் உள்ளது. இவை அனைத்தும் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் பயன்பாட்டிற்உ வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் மக்கள் அனைவரும் அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டுக்குள் தடுப்பூசிகளை பெற உறுதி அளித்துள்ளது.

Covid-19 vaccine tracker, Oct 5: India hopes to vaccinate 20-25 crore people by July next year

தடுப்பூசிகளால் ஏதேனும் விளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அதற்கான இழப்பீட்டினை மக்களுக்கு அரசு தான் தர வேண்டும் என்றும், தயாரிப்பு நிறுவனங்கள் அளிக்காது என்று வெள்ளிக்கிழமை ஒப்பந்தமான கொள்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.  கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை தங்கள் மக்களுக்கு இலவசமாக கிடைக்க பல நாடுகளும் முடிவு செய்துள்ளன. இவற்றில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவும் அடங்கும்.

கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான வேட்டை: அக்டோபர் 4 வரை

193 மருந்துகள் முன் மருத்துவ மற்றும் மருத்துவ சோதனைகளில் உள்ளது

இவற்றில் 42 மருந்துகள் மனிதர்கள் மீதான சோதனையில் உள்ளது

10 மருந்துகள் இறுதி கட்டத்தில், மூன்றாம் கட்ட மனித சோதனையில் உள்ளது

8 மருந்துகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டது. அதில் இரண்டு, இரண்டாம் கட்ட சோதனையில் உள்ளது.

அதிகமாக பேசப்பட்ட மருந்துகள்

அஸ்ட்ரஜெனெக்கா ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம்

மொடெர்னா

ஃபைசர்/பையோஎன்டெக்

ஜான்சன் அண்ட் ஜான்சன்

சனோஃபி

நோவாக்ஸ்

கமலேயா நிறுவனத்தால் மாஸ்கோவில் உருவாக்கப்பட்டு வரும் ரஷ்ய தடுப்பூசி

மூன்று சீன தடுப்பூசிகள், மூன்றாம் கட்ட மருத்துவ சோதனையை மேற்கொள்ளாமலே மனிதர்கள் பயன்பாட்டிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றை அமீரகத்திற்கு வழங்கியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment