Advertisment

கோவிட் இணைந்த மியூகோர்மைகோசிஸ்: ஸ்டீராய்டு வேண்டாம்; ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு தேவை

Mucormycosis With Covid 19: கொரோனா பாதித்து இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதால் அதை கட்டுப்படுத்துவது அவசிமான ஒன்றாக உள்ளது.

author-image
WebDesk
New Update
கோவிட் இணைந்த மியூகோர்மைகோசிஸ்: ஸ்டீராய்டு வேண்டாம்; ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு தேவை

வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதை தொடர்ந்து மியூகோர் மைகோசிஸ் எனும் கறுப்பு பூஞ்சை தொற்று தற்போது மக்களிடையே அதிகமாக பரவி வருகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஸ்டிராய்டு எடுத்துக்கொள்பவர்களுக்கு இந்த பாதிப்பு உண்டாவதாக பல அறிக்கைகள் வந்துள்ளன.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸுடன் பேசிய பி.ஜி.ஐ.யின் மருத்துவ நுண்ணுயிரியல் துறையின் தலைவரும், மருத்துவ மைக்காலஜி மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் பொறுப்பாளருமான பேராசிரியர் அருணலோக் சக்ரபர்த்தி, அவர் தலைவராக இருக்கும் பூஞ்சை தொற்று ஆய்வு மன்றத்தின் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்கிறார். CAM தொடர்பான தவறான எண்ணங்கள் மற்றும் பராஸ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டி.ஆர்.ராஜேஷ் கெராவும் கூறுகிறார்.

மியூகோர் மைகோசிஸ் தொற்று அறிகுறிகள் என்ன?

கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெறும் நோயாளிகள், குணமடைந்த நோயாளிகளுக்கு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டால் மூக்கடைப்பு மூக்கின் வழியே கறுப்பாகவோ, ரத்தமாகவோ திரவம் வெளியேறுவது, கன்ன எலும்புகளில் வலி, உணர்வின்மை, வீக்கம் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு மூக்கிற்கும், மேல்வாய்க்கும் இடைப்பட்ட பகுதி கறுப்பாக மாறும். சிலருக்கு பல் வலி அதிகமாக இருக்கும். மங்கலாக இரட்டையாக தெரிவது, மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிடவையும் கூட இதன் அறிகுறிதான். நுரையீரல் மியூகர்மைகோசிஸ் காய்ச்சல், இருமல், மார்பு வலி, பிளேரல் எஃப்யூஷன், ஹீமோப்டிசிஸ் மற்றும் சுவாச அறிகுறிகளின் மோசமடைதல் போன்ற பாதிப்புகளும் அறிகுறிகள் தான்.

கியூட்டானியஸ் மியூகர் மைகோசிஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கொப்புளங்கள் அல்லது தோலில் புண்கள் ஏற்படுவதை காட்டுகிறது. வலி, கொப்புளங்களைச் சுற்றியுள்ள வீக்கம் போன்றவை மற்ற அறிகுறிகளாகும்.

நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு ஏற்படும் பூஞ்சை தொற்று உடல் முழுவதும் பரவி பல உறுப்புகளை செயலிழக்க செய்து இறப்பு ஏற்படுத்துகிறது.

மியூகோர் மைகோசிஸ் சிகிச்சை என்ன?

மியுகர் மைகோசிஸ் என்பது ஒரு மருத்துவ அவசர நிலை. உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும்.

தொற்று நோய் நிபுணர், நுண்ணுயிரியலாளர், ஹிஸ்டோபோதாலஜிஸ்ட், நரம்பியல் நிபுணர், ஈ.என்.டி நிபுணர், கண் மருத்துவர், பல் மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க வல்லுநர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் அணுகுமுறை அவசியம் . இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முக்கியம். ஸ்டெராய்டு எடுத்துக்கொள்வதை படிப்படியாக குறைக்க வேண்டும்.

பாதிப்பிலிருந்து எப்படி பாதுகாத்து கொள்வது?

கொரோனா பாதித்து இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பாதிப்பு அதிக அளவில் ஏற்படுவதால் அதை கட்டுப்படுத்துவது அவசிமான ஒன்றாக உள்ளது. சிஸ்டமிக் ஸ்டெராய்டுகளை ஹைபோக்ஸீமியா நோயாளிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். ஒரு அறையில் ஆக்சிஜன் செறிவு சரியாக உள்ள நோயாளிகளுக்கு ஓரல் ஸ்டிராய்டு முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றன. சிஸ்டமிக் ஸ்டிராய்டு எடுத்துக்கொள்பவர்கள் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும். ஸ்டீராய்டு சிகிச்சையின் அளவு மற்றும் காலம் 5-10 நாட்களுக்கு டெக்ஸாமெதாசோனுக்கு (0.1 mg / kg / day) என்ற அளவில் இருக்க வேண்டும். முகக்கவசம் அணிவது பூஞ்சை தொற்று வெளிப்பாடை குறைக்கிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களை தவிர்க்கவேண்டும். நோயாளிகளை குணமடைந்து வெளியே செல்லும்போது பூஞ்சை பாதிப்பு ஆரம்ப அறிகுறிகள்(முக வலி, மூக்கடைப்பு, மார்பு வலி, சுவாசக் கோளாறு) பற்றிய ஆலோசனை வழங்கலாம் ​​

கோவிட் நோயாளிகளை தவிர வேறு யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும்?

சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாத நபர்கள் , உறுப்பு மாற்று சிகிச்சை செய்த கொண்டவர்கள் , HIV நோயாளிகள், புற்றுநோய் பாதித்தவர்கள் மற்றும் ஸ்டெராய்டுகள் உள்ளிட்ட நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்ளும் நபர்கள் உட்பட நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். உடலின் எந்தப் பகுதியிலும் கருப்பு புண்கள் ஏற்பட்டாலும் பூஞ்சை பாதிப்பு உண்டாகும்.

கோவிட் இணைந்த மியூகோர்மைகோசிஸ் பற்றிய தவறான தகவல் என்ன?

மியூகோரல்ஸ் கருப்பு பூஞ்சை அல்ல. கருப்பு பூஞ்சைகள் செல் சுவரில் மெலனின் கொண்ட பூஞ்சைகளின் வேறுபட்ட வகை. மியூகோர் மைகோசிஸ் தொற்று இல்லை. இது ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுவதில்லை. ஆக்ஸிஜனேற்றம், ஈரப்பதமூட்டி மற்றும் நீர் ஆகியவற்றால் மியூகோர் மைகோசிஸ் பரவுவதில்லை. உட்புற மற்றும் வெளிப்புற சுற்றுச்சூழலில் பூஞ்சைகள் உள்ளன. காற்று வழியாக பூஞ்சை சுவாசக்குழாயில் நுழைகின்றன. சிகிச்சையின் போது ஆம்போடெரிசின் பி மெதுவாக அதிகரிக்காது. ஒரு நாளைக்கு முழு டோஸ் நாள் முதல் நாளில் கொடுக்கப்பட வேண்டும். Voriconazole, fluconazole, echinocandins ஆகியவை மியூகோர்ல்ஸ் எதிராக பயனுள்ளதாக இல்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Corona Virus Corona Second Wave
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment