Advertisment

கோவிட் -19 தடுப்பூசி செயல்திறன், பூஸ்டர் ஷாட்கள் புதிய ஆய்வுகள் சொல்வது என்ன?

Covid vaccine efficacy new studies booster shots Tamil News மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு பூஸ்டர் ஷாட்களை பரிந்துரைத்துள்ளது

author-image
WebDesk
New Update
Covid vaccine efficacy new studies booster shots Tamil News

Covid vaccine efficacy new studies booster shots Tamil News

Covid vaccine efficacy new studies booster shots Tamil News : அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்ட மூன்று புதிய ஆய்வுகள், SARS-CoV-2-க்கு எதிராக ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்பு, காலப்போக்கில் குறைந்து வருவதாகக் கூறுகிறது. இறுதியில் அனைவருக்கும் பூஸ்டர் ஷாட்களின் தேவை குறித்து நிபுணர்களிடையே விவாதத்தைத் தூண்டுகிறது. அப்படியிருந்தும், இந்த தடுப்பூசிகள் பெரும்பாலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிராகப் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

Advertisment

புதிய ஆய்வுகளின் முக்கியத்துவம்

உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகரித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த ஆய்வுகள் வெளியிடப்பட்டன.

மாடர்னா அல்லது ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் மூன்றாவது டோஸ் எடுக்கலாம் என்று எஃப்.டி.ஏ பரிந்துரைக்கிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஒற்றை டோஸ் தடுப்பூசியின் பயனாளிகள் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை. ஆனால், இந்த தடுப்பூசி பெறுபவர்களுக்கு பூஸ்டர் ஷாட்கள் தேவைப்படலாம்.

இஸ்ரேல், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் ஏற்கனவே பூஸ்டர் ஷாட்களின் நிர்வாகத்தை வெளியிடுவதற்கான திட்டங்களை வகுத்துள்ளன.

இதற்கிடையில், குறைந்த மற்றும் அதிக வருமானம் கொண்ட நாடுகளில் தடுப்பூசி அளவுகளில் உள்ள ஏற்றத்தாழ்வு காரணமாக ஆகஸ்ட் மாதத்தில் உலக சுகாதார நிறுவனம் கோவிட் -19 பூஸ்டர்களுக்கு தடை விதித்துள்ளது. உலக தடுப்பூசி விநியோகத்தின் பெரும் பகுதியை ஏற்கெனவே பயன்படுத்திய நாடுகள் அதை அதிகமாகப் பயன்படுத்த முடியாது என்று WHO-ன் இயக்குநர்-ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் முன்பு வலியுறுத்தினார்.

ஆய்வுகள் என்ன கண்டுபிடித்துள்ளன?

ஆய்வுகளில் ஒன்று, மே 3 மற்றும் ஜூலை 25-க்கு இடையில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், நியூயார்க்கில் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு எதிரான ஒட்டுமொத்த வயது-சரிசெய்யப்பட்ட தடுப்பூசி செயல்திறன் ஒப்பீட்டளவில் நிலையானது (91.9-95.3 சதவிகிதம்) என்றும் அனைத்து வயதினருக்கும் தொற்றுக்கு எதிரான ஒட்டுமொத்த தடுப்பூசி செயல்திறன் நியூயார்க்கில் உள்ள பெரியவர்களின் குழுக்கள் 91.7 சதவீதத்திலிருந்து 79.8 சதவீதமாகக் குறைக்கப்பட்டது என்று கண்டறியப்பட்டது.

இந்த முடிவுகள் அமெரிக்காவில் டெல்டா மாறுபாட்டின் சுழற்சி அதிகமாக இருந்த காலத்திலிருந்து கணிக்கப்பட்டது. தொற்றுநோய்களுக்கு எதிராகத் தடுப்பூசிகளின் செயல்திறன் குறைவதற்கு ஒரு காரணம் டெல்டா மாறுபாட்டோடு தொடர்புடைய, அதிகரித்த வைரஸ் சுமை காரணமாக இருக்கலாம்.

மார்ச் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், எம்ஆர்என்ஏ தடுப்பூசிகளில் இரண்டு அளவுகளைப் பெற்ற 1,129 நோயாளிகளில், ஆறு மாதங்களுக்குப் பிறகு கோவிட் -19 மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில், தடுப்பூசி செயல்திறனில் குறைவு காணப்படவில்லை. இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திய 2-12 வாரங்களுக்குப் பிறகு 86 சதவிகிதம் மற்றும் 13-24 வாரங்களில் 84 சதவிகிதம் தடுப்பூசியின் செயல்திறன் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. கடுமையான கோவிட் -19-க்கு ஆபத்து உள்ள குழுக்களிடையே தடுப்பூசி செயல்திறன் நீடித்தது.

"எம்ஆர்என்ஏ கோவிட் -19 தடுப்பூசிகள் மூலம் தடுப்பூசி போட்ட 24 வாரங்கள் வரை கடுமையான கோவிட் -19-க்கு எதிரான பாதுகாப்பு நீடித்தது" என்று ஆய்வு கூறுகிறது.

மற்றொரு ஆய்வில் இரண்டு டோஸ் எம்ஆர்என்ஏ தடுப்பூசிகள் மார்ச்-மே மாதங்களுக்கு இடையில் நர்சிங் ஹோம் குடியிருப்பாளர்களிடையே தொற்றுநோய்க்கு எதிராக, 74.7 சதவிகிதம் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஆய்வு ஜூன்-ஜூலை மாதங்களில், டெல்டா மாறுபாடு அதிகமாக இருந்தபோது, ​​தடுப்பூசி செயல்திறன் 53.1 சதவீதமாகக் குறைந்தது. "கோவிட் -19 தடுப்பூசியின் கூடுதல் டோஸ், நர்சிங் ஹோம் மற்றும் நீண்ட கால பராமரிப்பு வசதி குடியிருப்பாளர்களுக்கு, பாதுகாப்பு நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்குப் பரிசீலிக்கப்படலாம்" என்று இந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவில் பூஸ்டர் ஷாட்களை யார் பெற முடியும்?

இப்போதைக்கு, சிடிசி மிதமான அல்லது கடுமையான நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு பூஸ்டர் ஷாட்களை பரிந்துரைத்துள்ளது. ஏனெனில், அவர்கள் கோவிட் -19-லிருந்து தீவிரமான, நீண்டகால நோய்களுக்கு அதிக ஆபத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது.

ஏனென்றால்,  நோயெதிர்ப்பு குறைபாடு இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது இரண்டு-டோஸ் விதிமுறைக்குப் பிறகு பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு கொண்ட நபர்கள் கோவிட் -19-க்கு எதிராக ஒரே அளவிலான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியாது. எனவே, இப்போதைக்கு, அமெரிக்காவில் நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள், தடுப்பூசியின் மூன்றாவது டோஸை, இரண்டாவது டோஸ் வழங்கிய 28 நாட்களுக்குப் பிறகு பெறலாம்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment