Advertisment

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி; நாம் எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்ன?

. தற்போதுள்ள உற்பத்தியை அதிகரிக்க, போதுமான நிதி கிடைத்த பிறகும், தேவையான தடுப்பு மருந்துகளை உருவாக்க குறைந்தபட்சம் 2-3 மாதங்கள் ஆகும்.

author-image
WebDesk
New Update
An Expert Explains: Challenge ahead in vaccinating India

 Virander S Chauhan 

Advertisment

covid 19 second wave Challenge ahead in vaccinating India : வேறெந்த தொற்றுகளுக்கும் இல்லாத வகையில் தடுப்பூசிகளை மிகவும் அதிக அளவில் தடுப்பூசிகள் கொரோனா தொற்றுநோயை எதிர்க்க உருவாக்கப்பட்டு வருகிறது. இதுவரையில் 250 நிறுவனங்கள் தடுப்பூசிகள் தயாரிப்பில் இறங்கியுள்ளன. அதில் குறைந்தது 10 தடுப்பூசிகள் அவசர தேவைக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் குறைந்த பட்சம் இரண்டு தடுப்பூசிகள் இதற்கு முன்பு மனிதர்களிடம் பயன்படுத்தாத தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது. ஃபைசர் பையோடெக், மொடெர்னா நிறுவனங்களின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகள் மற்றும் வைரல் வெக்டார் அடிப்படையில் ஆஸ்ட்ராஜெனகா, ஸ்புட்னிக் வி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஜன்சென் மற்றும் சீனாவின் கொரோனாவாக் ஆகிய தடுப்பூசிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

பாரத் பையோடெக்கின் கோவாக்ஸின் மற்றும் சீனாவின் சினோஃபார்ம் நிறுவனத்தின் சினோவாக் போன்றவை செயல்படாத வைரஸை பயன்படுத்தி டைம்-டெஸ்ட்ட தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள் ஆகும். கடுமையான பாதிப்பு மற்றும் இறப்புகளில் இருந்து காக்கும் வகையில் இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானதாக இருந்தாலும் தொற்றில் இருந்து தப்பிக்க உதவுவதில்லை. இந்த தடுப்பூசிகள் அனைத்தும் இருமுறை எடுத்துக் கொள்ளவேண்டியவை. ஆனால் ஜான்சென் (Janssen) ஒரு முறை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டியது. வருங்காலத்தில் தடுப்பூசிகள் இந்த முறை கொண்டு அதிக அளவில் உருவாக்கப்படும்.

குறைந்தது 50 தடுப்பூசிகள் உலகின் பல்வேறு பகுதிகளில் மூன்று அல்லது நான்கு ஒப்புதல்களுடன் நெருக்கமாக உள்ளன. இந்தியாவில் சைடஸ் காடிலாவிலிருந்து டி.என்.ஏ அடிப்படையிலான தடுப்பூசி உட்பட பல தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன.

நிறைய தடுப்பூசிகள் இருந்தும் பற்றாக்குறை ஏன்?

பல தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு வருகிறது. SARS-CoV-2 போன்ற தொற்றுக்கு எதிராக செயல்திறன் மிக்க தடுப்பூசிகளை தயாரிப்பது கடினமானது அல்ல என்ற பிம்பத்தை இது உருவாக்கலாம். ஆனால் தடுப்பூசிகள் உருவாக்கம் என்பது மிகவும் சிக்கலானது மற்றும் சிறப்புமிக்க தொழிலாகும். சாதாரண நிலைகளில் ஒரு தடுப்பூசியை உருவாக்க 10 முதல் 15 ஆண்டுகள் ஆகலாம். இந்தியா உட்பட உலகெங்கிலும் பல தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்ட பின்னரும் கூட, ஏன் ஒரு பெரிய பற்றாக்குறை உள்ளது, மற்றும் இந்த தடுப்பூசிகள் ஏன் நியாயப்படுத்த முடியாத மற்றும் சமமற்ற அணுகலைக் கொண்டுள்ளது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

மேலும் படிக்க : ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எப்போது ஆக்ஸிஜன் விநியோகம் துவக்கம்?

7 பில்லியன் மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் தடுப்பூசிகளை வழங்க வேண்டும். எனவே தேவை அதிகமாக உள்ளது. எப்போதும் போல் உலகில் பணக்கார நாடுகள் நடந்து கொண்டன. 80% அதிகமாக தற்போது இருக்கும் தடுப்பூசிகள் ஏற்கனவே அவர்களால் ஒப்பந்தம் முறையில் பெறப்பட்டும் சேமிக்கப்பட்டும் உள்ளது. மீதம் இருக்கும் 20% தடுப்பூசிகள் மட்டும் தான் இதர நாடுகளுக்கு வழங்கப்படுகிறது. கோவாக்ஸ் போன்ற விசயத்தில் உலக சுகாதார அமைப்பு தலையிட்டும் வெறும் 1% ஆப்பிரிக்க மக்களுக்கு தான் தடுப்பூசிகள் சென்று சேர்ந்துள்ளது.

இதில் மற்ற சிக்கல்களும் உள்ளது. ஃபைசர், மொடர்னா மற்றும் ஜான்சென் போன்ற 3 தடுப்பூசிகள் மட்டுமே அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அனுமதி பெற்றுள்ளது. மலிவு விலையில் கிடக்கும் அஸ்ட்ரென்காவிற்கான ஒப்புதல் இன்னும் நிலுவையில் உள்ளது. ஃபைசர் 12 முதல் 16 வயதினருக்கு தடுப்பூசிகள் வழங்குவதற்கான ஒப்புதலை பெற்றுள்ளது. மொடெர்னா மற்றும் ஜான்சென் போன்ற தடுப்பூசிகள் , இந்த வயதினரிடையே பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளை முடிக்கும் நிலையில் உள்ளது. மேற்கு நாடுகள், ஏற்கனவே தங்கள் வயதுவந்த மக்களில் கணிசமான பகுதியை நோய்த்தடுப்புக்கு உட்படுத்தியுள்ளன என்பது தெளிவாகிறது. சிறு வயதினர் மற்றும் கைக்குழந்தைகளுக்கும் கூட தடுப்பூசிகள் போடும் நிலை ஏற்பட்டலாம். எனவே இது தடுப்பூசிகளை சந்தையில் அணுகுவதை மேலும் கடினமாக்கிவிடும்.

மற்றொருபக்கம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கான ஒப்பந்தத்தை பிரேசில் சமீபத்தில் மறுத்தது. சீனாவின் சினோவாக் மற்றும் சினோஃபார்ம் தடுப்பூசிகள் மேற்கு நாடுகளால் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளை பொருட்படுத்தாமல் விரைவில் செயல்திறன் மிக்க பாதுகாப்பான தடுப்பூசிகளை விரைவாக ஆராய்ந்து விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

ரெம்டெசிவிரை விநியோகிக்காத மருந்து நிறுவனங்கள்; நோட்டீஸ் அனுப்பிய கர்நாடக அரசு

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை

உலகில் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில் இந்தியா கொரோனா இரண்டாம் அலையில் சிக்கி பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. வைரஸ் மிகவும் ஆபத்தான வகைகளாக மாறக்கூடும் என்பதில் தீவிர கவலை உள்ளது, மேலும் வைரஸ் பெருக்கத்தின் சங்கிலி விரைவில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது உலகளாவிய பிரச்சினையாக மாறும். உலகெங்கிலும் உள்ள புதிய அலைகள் பிறழ்வு வைரஸ்களால் உருவாகியுள்ளது. தற்போதைய தடுப்பூசிகள் இவற்றுக்கு எதிராக பயனுள்ளதாகத் தோன்றினாலும், தொற்றுநோயைக் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் நோயெதிர்ப்பில் இருந்து மரபுபிறழ்ந்த வைரஸ்களின் உருவாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

இந்தியா, இயல்பாகவே உடையக்கூடிய சுகாதார அமைப்பைக் கொண்டு இருக்கிறது. தற்போது ஏற்பட்டுள்ள தொற்றின் தீவிரத்தால் பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளது. மருத்துவ ஆக்ஸிஜனிற்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கான திட்டத்திலும் கூட விநியோகச் சங்கிலியில் ஒரு பெரிய இடைவெளி உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கிய நாடாக இந்தியா இருக்கின்ற போதிலும் இந்திய மக்கள் தொகையில் வெறும் 13% மக்கள் மட்டுமே முதல் டோஸை பெற்றுள்ளனர். 2% மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். பல நாடுகளில் ஏற்கனவே வயது வந்தோரின் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுள்ளனர்.

தடுப்பூசி உற்பத்தியின் மையமாக இருக்கின்ற போதிலும் ஏன் இந்தியாவால், இருக்கின்ற இரண்டு தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க முடியவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். தடுப்பூசிகள் பல கூறுகளின் சிக்கலான சூத்திரங்கள் மற்றும் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களின் தடையற்ற விநியோகத்தை சார்ந்துள்ளது. மொத்த பொருட்களின் உற்பத்தி முதல் குப்பிகளில் தடுப்பூசிகளை நிரப்புவது வரை அனைத்தும் மிகவும் சிக்கலானது மற்றும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் செயல்முறையாகும். தற்போதுள்ள உற்பத்தியை அதிகரிக்க, போதுமான நிதி கிடைத்த பிறகும், தேவையான தடுப்பு மருந்துகளை உருவாக்க குறைந்தபட்சம் 2-3 மாதங்கள் ஆகும். தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டாலும், உண்மையான உற்பத்தி தொடங்குவதற்கு பல மாதங்கள் ஆகும். அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படாவிட்டால் இந்தியாவின் வயதுவந்த மக்களை உள்ளடக்கும் தடுப்பூசி இயக்கம் குறைந்த பட்சம் அடுத்த சில மாதங்களுக்கு ஒரு விநியோக சங்கிலி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஸ்புட்னிக், ஜென்சென், நோவாக்ஸ் உள்ளிட்ட மூன்று அல்லது நான்கு தடுப்பூசிகளை இந்தியா உருவாக்க உள்ளது. சில உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தடுப்பூசிகள். 2021ம் ஆண்டு இறுதிக்குள் உலகில் உள்ள பல நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை இந்தியா உற்பத்தி செய்யும்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் கூட்டு முன்மொழிவு உலக வர்த்தக அமைப்பில் மீண்டும் தாக்கல் செய்யப்படும். சமீபத்திய அறிவிப்பின் படி இந்த முன்மொழிவுற்கு அமெரிக்கா நேர்மறையாக ஆதரவு தந்துள்ளது. இந்த முன்மொழிவின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வரும் தடுப்பூசி நிறுவனங்கள் தங்களின் அறிவுசார் காப்புரிமைகளை குறைந்த காலத்திற்கு பகிரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அதிக அளவில் மலிவான விலையில் தடுப்பூசிகளை உலகெங்கும் உற்பத்தி செய்ய உதவும். இது வைரஸ் புதிய பிறழ்வுகளை உருவாக்குவதற்கு முன்பு நடைமுறைக்கு வரும். வைரஸை தோற்கடித்து இந்த பந்தயத்தில் முன்னேறுவதைத் தவிர மனிதகுலத்திற்கு வேறு வழியில்லை.

Coronavirus Vaccine
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment