Advertisment

தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் திருப்புமுனை தாக்கத்தைக் காட்டும் கோவிஷீல்ட் ஆய்வு!

Covishield study shows breakthrough impact Tamil News ஒவ்வொரு நபரும் மூன்று குழுக்களில் (யு.வி., பி.வி மற்றும் எஃப்.வி) மாறுபட்ட காலத்திற்கு இருந்ததால், ஆபத்தில் உள்ள மக்கள் தொகை, நபர்/நாட்களில் அளவிடப்பட்டது.

author-image
WebDesk
New Update
Covishield study shows breakthrough impact Tamil News

Covishield study shows breakthrough impact Tamil News

Covishield study shows breakthrough impact Tamil News : 1.59 மில்லியன் சுகாதார மற்றும் இந்திய ஆயுதப் படைகளின் முன்னணி தொழிலாளர்கள் பற்றிய ஆய்வின் இடைக்கால முடிவுகள், உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஆய்வுகளில், கோவிஷீல்டு தடுப்பூசி போட்ட பிறகு, தொற்றுநோய் பரவுதலில் 93 சதவீதம் குறைப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட், ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகாவின் AZD-1222 பார்முலாவில்  கோவிட் -19 வைரஸான SARS-CoV-2-க்கு எதிராக இந்தியாவின் வெகுஜன நோய்த்தடுப்பு திட்டத்தில் பயன்படுத்தப்படும் முக்கிய தடுப்பூசி.

ஆய்வின் முடிவுகள் ('கோவிஷீல்ட் (AZD1222) இந்திய ஆயுதப் படைகளின் சுகாதார மற்றும் முன்னணி தொழிலாளர்களிடையே தடுப்பூசி செயல்திறன்: வின்-வின் கூட்டு ஆய்வின் இடைக்கால முடிவுகள்'), மதிப்பாய்வு செய்யப்பட்ட மருத்துவ இதழ் ஆயுதப்படை இந்தியாவின் சிறப்பு இதழில் கடந்த செவ்வாய்க் கிழமை வெளியிடப்பட்டது. இதில், நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளுக்கு எதிரான தடுப்பூசியின் வலுவான நன்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும் 'தடுப்பூசி போடுங்கள், பாதுகாப்பாக இருங்கள்' என்ற செய்தியை மீண்டும் வலியுறுத்தி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

மிகப் பெரிய ஆய்வு

"இது இதுவரை கோவிட் தடுப்பூசி செயல்திறனை மதிப்பிடும் இந்தியாவின் மிகப்பெரிய ஆய்வு" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வின் தொடர்புடைய ஆசிரியரான ஏர் சிஎம்டி சுப்ரமணியன் சங்கர், “மற்ற ஆய்வுகள், 1 மில்லியனுக்கும் குறைவான மாதிரி அளவுகளைக் கொண்டுள்ளன. ஆகவே, வின்-வின் கூட்டுறவு என்பது தடுப்பூசி செயல்திறனைப் பற்றிய உலகளாவிய மிகப்பெரிய ஆய்வுகளில் ஒன்று” என தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகள்

இந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி இந்தியா தடுப்பூசி போடத் தொடங்கிய பின்னர், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆயுதப்படைகளின் முன்னணி தொழிலாளர்கள் முதன்முதலில் தங்கள் ஜாப்களைப் பெற்றனர். மே 30 வரை 1.59 மில்லியன் பெறுநர்களின் தடுப்பூசி செயல்திறன் மதிப்பீடுகளின் இடைக்கால பகுப்பாய்வை இந்த ஆய்வு முன்வைக்கிறது.

135 நாட்களில் 1,595,630 நபர்களின் (சராசரி வயது 27.6 வயது; 99% ஆண்) தரவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. மே 30 வரை, 95.4% முழுமையாகவும் மற்றும் 82.2% ஒருமுறையும் தடுப்பூசி போடப்பட்டன”என்று ஆய்வு கூறுகிறது.

"UV (unvaccinated), PV (partially vaccinated) மற்றும் FV (fully vaccinated) பெட்டிகள் முறையே 106.6, 46.7 மற்றும் 58.7 மில்லியன் நபர்/நாட்களைக் கொண்டிருந்தன. யு.வி, பி.வி மற்றும் எஃப்.வி குழுக்களில் திருப்புமுனை வழக்குகளின் எண்ணிக்கை 10,061, 1,159 மற்றும் 2,512; இறப்புகள் முறையே 37, 16 மற்றும் 7 ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. சரிசெய்யப்பட்ட VE (vaccine effectiveness) தொற்றுநோய்களுக்கு எதிராக 91.8-94.9% பதிவாகியுள்ளது”

கோவிட் -19-ஐ கண்காணிப்பதற்காக மேம்படுத்தப்பட்ட தற்போதைய ஆயுதப்படைகளின் சுகாதார கண்காணிப்பு அமைப்பிலிருந்து anonymised தரவை இந்த ஆய்வு பயன்படுத்தியது. முதல் மற்றும் இரண்டாவது அளவுகளுடன் தினசரி தடுப்பூசிகள், கோவிட் -19-க்கு நேர்மறையான சோதனை தேதிகள் மற்றும் கோவிட் தொடர்பான இறப்புகளுக்கான தரவு இந்த அமைப்பிலிருந்தது. மாற்றப்படாத நிலையிலிருந்து ஓரளவு தடுப்பூசி போடப்பட்டு பின்னர் முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டதால், ஒவ்வொரு குழுவிலும் உள்ள எண்கள் தினசரி மாறின. ஒவ்வொரு நபரும் மூன்று குழுக்களில் (யு.வி., பி.வி மற்றும் எஃப்.வி) மாறுபட்ட காலத்திற்கு இருந்ததால், ஆபத்தில் உள்ள மக்கள் தொகை, நபர்/நாட்களில் அளவிடப்பட்டது.

க்ரூட் விகிதங்கள் மக்கள்தொகையால் நோய்த்தொற்றுகள் / இறப்புகளைப் பிரிப்பதன் மூலம் கணக்கிடப்பட்டன. மேலும், 2021 ஏப்ரல்-மே மாதங்களில் தொற்றுநோய்களின் இரண்டாவது அலையின் தாக்கத்திற்குத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இது ஜனவரி மாதத்தை விட 600-1,000 மடங்கு அதிகமாகும் என்று ஏர் சிஎம்டி சங்கர் கூறினார்.

பிற ஆய்வுகள்

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஸ்காட்லாந்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் தடுப்பூசி போடப்பட்ட 1.33 மில்லியன் மக்களை ஆய்வு செய்தது. அதன் தடுப்பூசி விளைவுகளின் முடிவுகள் ஃபைசர்-பயோஎன்டெக்கிற்கு 91 சதவீதமும், ஆக்ஸ்போர்டு-ஏசட் நிறுவனத்திற்கு 88 சதவீதமும் காட்டின.

“கோவிட் -19 காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் அபாயத்தில் கணிசமான குறைப்புகளுடன்… தடுப்பூசிகளின் முதல் அளவுகளில் பெருமளவில் வெளியேறினர்” என்று ஆய்வு முடிவுக்கு வந்தது.

வின்-வின் ஆய்வு, மற்ற கோவிஷீல்ட் தடுப்பூசி செயல்திறன் ஆய்வுகளின் முடிவுகளையும் குறிப்பிடுகிறது.

70 வயதிற்கு மேற்பட்ட 1.57 லட்சம் மக்களிடையே இங்கிலாந்தில் ஒரு கட்டுப்பாட்டு ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 43 சதவீதமும் எதிர்மறை விளைவுகள் குறைந்துள்ளன; இங்கிலாந்து, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்காவில் 18 வயதுக்கு மேற்பட்ட 11,000 நபர்களின் ஆர்.சி.டி ஆய்வில் 62% குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது; மற்றும் தென்னாப்பிரிக்காவில் 18-65 வயதுடைய 2,026 எச்.ஐ.வி-எதிர்மறை நபர்களின் ஆர்.சி.டி ஆய்வில் வைரஸின் பி .1.351 (பீட்டா) மாறுபாட்டிற்கு எதிராக 22 சதவீதம் பாதிப்பு அளவு குறைக்கப்பட்டுள்ளன.

இந்த மாத தொடக்கத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தமிழகத்தின் காவல் துறை, ஐ.சி.எம்.ஆர்-தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் மற்றும் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மெடிக்கல் கல்லூரி ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகளை அறிவித்தது. இது, ஒற்றை டோஸ் தடுப்பூசி பெற்ற பணியாளர்களுக்கு 82 சதவீத செயல்திறனைக் காட்டியது மற்றும் இரண்டு ஜப்களையும் நிர்வகிப்பவர்களில் 95 சதவீதம் சாதகமான முடிவுகளைக் காட்டுகிறது.

மகாராஷ்டிராவில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரின் கீழ் 20 அரசு கோவிட் மையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 87.5 சதவீதம் பேர் தடுப்பூசி போடப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

சவால்கள் மற்றும் வரம்புகள்

தொற்றுநோயின் இரண்டாவது அலைகளிலிருந்து நாடு பின்வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில் வின்-வின் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. "முத்தரப்பு சேவைகளுக்கு சொந்தமான ஆய்வுக் குழு நாடு முழுவதும் பரவியது. நிலப்பரப்பு மற்றும் இருப்பிடத்தின் தடைகள் தவிர, தரவுகளை ஒரு மைய வசதியுடன் ஒன்றிணைத்து தினசரி அடிப்படையில் புதுப்பிக்க வேண்டியிருந்தது” என்று ஏர் சிஎம்டி சங்கர் கூறினார்.

"ஒரு வழக்கமான கூட்டு ஆய்வு குறிப்பிடத்தக்கச் செலவை ஏற்படுத்துகிறது. ஆகவே, 1.59 மில்லியன் தனிநபர்களுடன் உருவாக்கப்பட்ட இயற்கை பரிசோதனையின் முடிவுகளைப் புதுமையாகப் பயன்படுத்த ஆயுதப்படை மருத்துவ சேவைகள் குழு முடிவு செய்தது. தினசரி அடிப்படையில் அவற்றை விரிவாகக் கண்காணிப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் தனிநபர்களை தங்கள் சொந்த ‘உள் ஒப்பீடாக’ பயன்படுத்தலாம்” என்று அவர் கூறினார். "தொற்றுநோயின் இரண்டாவது அலையின் வடிவத்தில் நோய் பரவுவதற்கான மாறும் இயக்கவியலையும் ஆராய்ச்சியாளர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது" என்றும் கூறினார்.

ஆய்வின் வரம்புகளில், "இந்திய மக்களிடமிருந்து வேறுபட்டது" என்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். "இந்த ஆய்வில் சராசரி வயது (27.6 ஆண்டுகள்) இந்திய மக்கள்தொகைக்கு ஒத்ததாக இருந்தபோதிலும், அதன் இடைவெளி மிகவும் குறுகியது. ஏனெனில், இது கிட்டத்தட்ட 50% மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை (வயது <18 வயது ~ 40% மற்றும்> 60 ஆண்டுகள் ~ 10%)” என்று மேலும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, இது “குறைந்த பட்ச நோயுற்ற நபர்களைக் கொண்ட ஆண் மாதிரிகள் நிறைந்தவை. எனவே, இந்த முடிவுகள், ஒட்டுமொத்த மக்களிடமும் பொதுமைப்படுத்தப்படாமல் போகலாம். தடுப்பூசி செயல்திறன் ஒத்ததாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்…” என்றும் தெரிவித்தார்.

கற்றுக்கொண்டவை

ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் இயக்குநர் ஜெனரலும், ஆய்வின் இணை ஆசிரியருமான சுர்க் வைஸ் அட்மிரல் ரஜத் தத்தா ஒரு அறிக்கையில், “இந்த ஆய்வு தடுப்பூசி செயல்திறனைப் பற்றிய தெளிவான செய்தியை அனுப்புகிறது… இது தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏற்படும் தயக்கத்திலிருந்து வெளிவர உதவும் ஒரு முக்கியமான பாதை" என்று கூறினார்.

கடந்த செவ்வாயன்று, நிதி ஆயோக் (உடல்நலம்) உறுப்பினர் டாக்டர் வி கே பால், "எந்தவொரு தடுப்பூசியும் தொற்றுநோய்க்கு எதிராக உத்தரவாதம் அளிக்க முடியாது என்றாலும், இது கடுமையான நோயைத் தடுக்கலாம்" என்று ஆயுதப்படை ஆய்வின் முக்கியத்துவம் குறித்துக் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Covishield
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment