Advertisment

பினராய் விஜயனின் செல்வாக்கையே நிறுவும் சி.பி.எம். வேட்பாளர் பட்டியல்

சுல்தான் பத்தேரியில் விஸ்வநாதனும், குன்னத்துநாடு தொகுதியில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மகன் பி.வி. ஸ்ரீநிஜனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
பினராய் விஜயனின் செல்வாக்கையே நிறுவும் சி.பி.எம். வேட்பாளர் பட்டியல்


Advertisment

புதிய தலைவர்களுடன் களம் இறங்கும் இடதுசாரி முன்னணி

 Shaju Philip

Kerala assembly elections 2021 : சட்டசபையில் தொடர்ந்து இரண்டு முறை எம்.எல்.ஏக்களாக பதவி வகித்தவர்களுக்கு போட்டியிட இம்முறை வாய்ப்பு கிடையாது என்ற முடிவு சில முக்கியத் தலைவர்களுக்கு இம்முறை போட்டியிடும் வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சராசரி வயது விகிதம் அதிகமாகவே உள்ளது. 83 வேட்பாளர்களில் 57 நபர்கள் 50 வயதிற்கு மேட்பட்டவர்கள். அதில் 24 நபர்கள் 60ஐ தாண்டியவர்கள். 30 வயதிற்கும் குறைவானவர்கள் நான்கு நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள். பெரிய தலைமுறை மாற்றம் அல்ல என்றாலும் இந்த முடிவு சி.பி.எம். புதிய தலைவர்களை தேர்தல் அரசியலுக்கு கொண்டு வர அனுமதிக்கிறது. மேலும் இது வாக்களர்களுக்கு, தனிநபர்களை காட்டிலும் கட்சி பெரிது என்ற பிம்பத்தை காட்டுகிறது.

பினராயியின் முத்திரை

சி.பி.எம். கட்சி மாற்றும் அரசின் மீது முதல்வரின் கட்டுப்பாடு இருப்பதை இந்த பட்டியல் மீண்டும் உறுதி செய்கிறது. இரண்டு முறைக்கும் மேலாக பதவி வகித்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வழங்கப்படாது என்று கூறியதற்கு எதிராக எந்தவிதமான எதிர்ப்பு குரல்களும் பதிவாகவில்லை. இது இடதுசாரி முன்னணி ரு சட்டமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சரைக் காட்டிலும் பினராய் அரசாங்கத்தின் முன்முயற்சிகளுக்கு ஒரு ஆணையைத் தேடும். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியுற்ற அவருடைய மருமகனும், டி.ஒய்.எஃப்.ஐ. அனைத்து இந்திய தலைவருமான ரியாஸ் கோழிக்கோட்டின் பெய்ப்பூரில் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்த வேட்பாளர்கள் மாற்றம், இடதுசாரி முன்னணி மற்றும் ஐக்கிய முன்னணிகளுக்கு இடையே நிலவும், ஆளும் கட்சிக்கான எதிர்ப்பு மனநிலையை சமாளிக்க உதவுகிறது.

அரசியல் பாதிப்பு

புது முகங்களை களம் இறக்குவது மூலம் பயனடைந்தால், அது இந்த களாத்தையே மாற்றும் சக்தியாக இருக்கும்.உயரத்திற்கு வர விரும்பும் திறமையான இளைய தலைவர்களை உருவாக்குவது சி.பி.ஐக்கு மட்டும் பலனளிக்காது. மாறாக மற்ற கட்சிகளும் இதையே பின் தொடர வேண்டும் என்ற அழுத்தம் தரும். குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்கு.

ஏன் சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கிறது?

சிபிஎம் சுயேட்சை வேட்பாளர்களை ஆதரிக்கிறது, அவர்களில் ஏழு பேர் முஸ்லிம்கள். அதிக முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களான மலப்புரம் அல்லது கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள். சி.பி.எம் தலைவர்கள் நேரடியாக ஐ.யு.எம்.எல் வரவழைக்க முடியவில்லை என்பதை இது காட்டுகிறது.

பெண்கள் மற்றும் ஐக்கிய முன்னணியில் இருந்து வெளியேறியவர்கள்

சி.பி.எம். அறிவித்திருக்கும் பட்டியலில் 12 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். எட்டு பெண்கள் முதன்முறையாக களம் இறங்குகின்றனர். சி.பி.எம். மாநில செயலாளர் ஏ. விஜயராகவனின் மனைவி ஆர். பிந்துவும் அதில் ஒருவர். காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்த எம்.எஸ். விஸ்வநாதன் ஆகியோரும் தற்போது சி.பி.எம். கட்சியில் இருந்து போட்டியிடுகின்றனர். சுல்தான் பத்தேரியில் விஸ்வநாதனும், குன்னத்துநாடு தொகுதியில் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் மகன் பி.வி. ஸ்ரீநிஜனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Kerala Kerala Assembly Elections 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment