Advertisment

2006- 2011 ஆட்சி செயல்பாடு: தேர்தல் களத்தில் திமுக எதிர்கொள்ளும் கேள்விகள்

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், 2006-11ம் ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் வன்முறை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இருந்ததாக ஒரு அச்சம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK, Karunanidhi Stalin, mk stalin, tamil nadu assembly elections 2021, திமுக, கருணாநிதி, ஸ்டாலின், முக ஸ்டாலின், முக அழகிரி, திமுக தலைவர்கள், mk alagiri, dmk leaders

தமிழ்நாட்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், 2006-11ம் ஆண்டில் திமுக ஆட்சியின் கீழ் வன்முறை மற்றும் அதிகார துஷ்பிரயோகம் இருந்ததாக ஒரு அச்சம் தொடர்ந்து எழுப்பப்படுகிறது.

Advertisment

சம்பவங்கள்

திமுக தலைவர்கள் மீது பரவலான வன்முறை மற்றும் நில அபகரிப்பு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. தொடர்ந்து இந்த மாதிரியான செய்திகளில் மிக முக்கியமான தலைவர்களில் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.அழகிரி இருந்தார். அவரை அடுத்து, சேலத்தில் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், ஈரோட்டில் என்.கே.கே.பி. ராஜா ஆகியோர் மேற்கு தமிழகத்தில் நில அபகரிப்பு மோசடி நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டனர்.

2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட டஜன் கணக்கான திமுக தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அப்படி கைது செய்யப்பட்டவர்களில், திமுகவைச் சேர்ந்த முன்னாள் சுரங்கம் மற்றும் கனிம வள அமைச்சர் கே.பொன்முடியும் ஒருவர். அவர் 2007ம் ஆண்டு முதல் அவருடைய மகன் மற்றும் உறவினர்கள் பெயரில் சுரங்க உரிமம் பெற்றார். கட்டணம் செலுத்தாமல் செம்மண்ணை அள்ளியதில் அவருடைய பங்குக்காக குற்றம் சாட்டப்பட்டது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் மற்றும் வெல்லகோவில் சுவாமிநாதன் ஆகியோர் நில அபகரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர். மற்றொரு முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டவிரோத கிரானைட் குவாரிக்காக கைது செய்யப்பட்டார். திமுக ஆட்சியின்போது ஒரு கொலையை மூடிமறைத்ததில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமாச்சந்திரன் குற்றம்சாட்டப்பட்டார். மேலும், மிரட்டல் குற்றச்சாட்டில் சுவாமிநாதனும் கைது செய்யப்பட்டார். மற்றொரு, திமுக தலைவர் கே.பி.பி.சாமி ஒரு மீனவர் கொலை செய்யப்பட்டதற்காக கைது செய்யப்பட்டார். அதே நேரத்தில், முன்னாள் திமுக அமைச்சர் பொங்களூர் பழனிசாமியின் மகன் நில அபகரிப்புக்காக கைது செய்யப்பட்டார்.



திருக்கோவிலூரைச் சேர்ந்த க.பொன்முடி, திருவண்ணாமலையைச் சேர்ந்த எ.வ.வேலு ( இவர்களின் இடங்களில் மார்ச் 25ம் தற்செயலாக வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டு ரூ.3.5 கோடி கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது) ஸ்டாலின் முகாமில் தொடர்ந்து இருந்துவருகின்றனர். திருச்சியைச் சேர்ந்த கே.என்.நேரு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டார்.



திமுக ஆட்சிக் காலத்தில் பல அதிகார மையங்கள் இருந்தன. கருணநிதி மற்றும் அவரிடம் நேரடியாக புகார் தெரிவிக்கும் தலைவர்கல் குழு, தவிர, அழகிரி, மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் 3வது மனைவியும் கனிமொயின் தாயும் இருந்தனர்.

குறுநில மன்னர்கள்

திமுக தொண்டர்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு கட்சியாக இருப்பதால், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள்கூட மிகவும் சக்திவாய்ந்தவர்களாக வளர்கிறார்கள். இது திமுகவை வேட்டையாட வந்தது. அந்த நேரத்தில் அது மாநிலத்தில் மட்டுமல்ல, அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸின் மூலமாக மத்தியில் யு.பி.ஏ அரசாங்காத்தில் பங்கு வகித்தது.

கட்சியில் நடந்த சம்பவங்கள் குறித்து உள் கூட்டங்களில் கருணாநிதியை வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் போன்ற தலைவர்கள் கேள்வி எழுப்பிய சம்பவங்கள் நடந்தன. தேர்தலில் வேட்பாளர்கள் நேர்காணலின்போது, ​​கட்சியில் சக்திவாய்ந்தவர்களின் குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்கள் கிடைக்காது என்று முதல்வர் உறுதியளித்தபோது. ​ஆறுமுகம் பின்வாங்கினார்: “அப்படி என்றால், ஸ்டாலின் போட்டியிடவில்லையா தலைவரே?” என்றார்.

மதுரையின் கிங்

அழகிரி அவரது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார். அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, சக்தி வாய்ந்த பி.ஆர்.பி கிரானைட் தொழில அதிபர் பழனிசாமி, பொட்டு சுரேஷ் (பின்னாளில் ரவுடிகள் மோதலில் கொல்லப்பட்டார்.), அட்டாக் பாண்டி (இவர் தற்போது சிறையில் இருக்கிறார்) இவர்கள்தான் மதுரையை இயக்கினார்கள் என்று நம்பப்படுகிறது. 2010ம் ஆண்டு மதுரை பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா, “மதுரை அழகிரி மற்றும் அவருடைய தந்தையின் தனிப்பட்ட சொத்தா?” என்று கேள்வி எழுப்பினார்.

இந்த நேரத்தில், கருணாநிதி அரசாங்கத்தின் மிகப்பெரிய கறைகளில் ஒன்று, 2007 மே மாதம் மதுரைக்கு அருகிலுள்ள தினகரன் மற்றும் சன் டிவி நெட்வொர்க் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இது அழகிரியின் குண்டர்களால் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல், ஸ்டாலினுக்கு சாதகமாக கருணாநிதியின் உறவினர் முரசோலி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான பத்திரிகை எடுத்த அரசியல் சர்வே முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து நடந்தது.

ஏற்கனவே தனது 80களில் இருந்த கருணாநிதி பெரும்பாலும் கட்சிக்காரர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் இயலாதவராகத் தோன்றினார். முதல்வர் சட்டமன்றத்தில் இருந்தபோது, ​​தினகரன் அலுவலக தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் அது குறித்து அவர் எச்சரித்ததாக ஒரு அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். “அவர் செய்தியைப் படித்தார். சில விநாடிகள் சும்மா இருந்தார். பின்னர், திடீரென இலக்கண திருத்தங்களுடன் செய்திக் குறிப்பை திருப்பி அனுப்பினர். எந்த அறிவுறுத்தலும் இல்லை.” என்று கூறினார்.

இப்போது, ​​அழகிரி ஓரங்கட்டப்படுவதோடு மட்டுமல்லாமல், அவரது விசுவாசிகள் சிலர் அதிமுகவில் சேர்ந்துள்ளனர். இதற்கிடையில், தினகரன் மற்றும் சன் டிவி தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 2019ல் ஆயுள் தண்டனை விதித்தது.

ஸ்டாலினின் சுமை

திமுக தலைவர் கருணாநிதியின் நிழலில் நீண்ட ஆண்டுகள் கழித்தார். மேலும், அந்த வன்முறைக் காலத்தின் பின் விளைவுகள் மற்றும் 2 ஜி மோசடி குற்றச்சாட்டுகளை அழிப்பதற்கான இறுதிக் காலத்தின் பெரும்பகுதி அதே அளவுக்கு கழித்தார். திமுக தலைவர் ஆ.ராசா மற்றும் ஸ்டாலினின் சகோதரி கனிமொழி ஆகியோரையும் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் பார்த்தார். கருணாநிதி இறந்ததிலிருந்து, ஸ்டாலின் கட்சியின் பல ‘குறுநில மன்னர்களின்’ பிரிவுகளை தூய்மைப்படுத்தும் பயிற்சியில் கழித்தார். பழைய தலைவர்களின் பிடியைத் தணிக்க மாவட்டங்களில் முக்கிய பதவிகளை இளம் மற்றும் புதிய தலைவர்களிடம் ஒப்படைத்துள்ளார்.

ஒரு மூத்த திமுக தலைவர் அவருக்கு ஒரு பெரிய பாராட்டுதல்களை அளித்தார், “அவர் (ஸ்டாலின்) ஏற்கனவே ஜெயலலிதா போல கட்சியை நடத்தத் தொடங்கிவிட்டார்… யாரிடமிருந்தும் எந்தவிதமான மீறல்களும் மன்னிக்கப்படாது. எந்தவொரு தலைவரும் ஊடகங்களுடன் பேசவோ அல்லது கட்சியை பகிரங்கமாக ஆதரிக்கவோ ஊக்குவிக்கப்படுவதில்லை.” என்று கூறினார்.

Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment