Advertisment

5ஜி சேவை விமான போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

5G நெட்வொர்க் காரணமாக சில முக்கியமான விமானக் கருவிகள் செயலிழக்கச் செய்யக்கூடும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
5ஜி சேவை விமான போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா?

அமெரிக்காவில் AT&T மற்றும் Verizon நிறுவனங்கள் 5ஜி சேவையை பயன்படுத்துவதன் காரணமாக, விமான போக்குவரத்து சேவையில் கடும் நெருக்கடி ஏற்படலாம் என அமெரிக்காவின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எச்சரித்துள்ளார்.

Advertisment

இன்று(ஜனவரி 19) புதன்கிழமை தொடங்கவிருக்கும் புதிய சி பேண்ட் 5ஜி சேவையானது கணிசமான எண்ணிக்கையிலான விமானங்களைப் பயன்படுத்த முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

சர்ச்சை குறித்து முழு தொகுப்பு இதோ

அமெரிக்கா, 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் C பேண்ட் எனப்படும் ஸ்பெக்ட்ரமில் 3.7-3.98 GHz வரம்பில் சுமார் $80 பில்லியனுக்கு மிட் ரேஞ்ச் 5G அலைவரிசையை மொபைல் போன் நிறுவனங்களுக்கு ஏலம் எடுத்தது.

என்ன பிரச்சனை?

அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA), தற்போதைய 5G தொழில்நுட்பமானது, தரையிலிருந்து எவ்வளவு தூரம் மேலே பயணிக்கிறது என்பதை அளவிடும் ஆல்டிமீட்டர்கள் போன்ற கருவிகளில் இடையூறு ஏற்படுத்தலாம் என்று எச்சரித்துள்ளது.

அல்டிமீட்டர்கள் 4.2-4.4 ஜிகாஹெர்ட்ஸ் வரம்பில் இயங்குகின்றன. இது, ஏலம் விடப்பட்ட ஸ்பெக்ட்ரமிற்கு மிக அருகில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உயரம் அளவிடுவது மட்டுமின்றி, ஆல்டிமீட்டர் ரீட்அவுட்கள் தானியங்கி தரையிறக்கங்களை எளிதாக்குவதற்கும், wind shear எனப்படும் ஆபத்தான நீரோட்டங்களைக் கண்டறிய உதவுவதற்கும் பயன்படுத்தப்படுகின்றன.

யுனைடெட் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்காட் கிர்பி கூறுகையில், " கடந்த மாதம் FAA இன் 5G உத்தரவுகள் சுமார் 40 பெரிய அமெரிக்க விமான நிலையங்களில் ரேடியோ அல்டிமீட்டர்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது.

புதிய 5ஜி உத்தரவுகள் தினசரி விமானங்களில் 4 சதவீதம் வரை இடையூறு விளைவிக்கும் என்று அமெரிக்க விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இப்பிரச்சினை தீர்க்காவிட்டால், அமெரிக்காவின் முக்கிய விமான நிலையங்களில் மோசமான வானிலை, மேக மூட்டம் அல்லது கடுமையான புகைமூட்டம் போன்ற சமயத்தில், காட்சி அணுகுமுறையை மட்டுமே மேற்கொள்ள முடியும்" என்றார்.

ஸ்பெக்ட்ரமில் என்ன வித்தியாசம்?

அலைவரிசையில் ஸ்பெக்ட்ரம் அளவு அதிகமாக இருந்தால், அதன் சேவை அதிவேகமாக இருக்கும். 5ஜியின் முழு வேகத்தை பெற, செல்போன் நிறுவனங்கள் அதிகளவிலான ஸ்பெக்டர்ம் அளவில் செயல்பட விரும்புகிறார்கள்.

ஏலத்தில் விடப்பட்ட சில C பேண்ட் ஸ்பெக்ட்ரம் செயற்கைக்கோள் வானொலிக்கு பயன்படுத்தப்பட்டது, அதை, 5Gக்கு உபயோகித்தால் அதிக போக்குவரத்து இடையூறு இருக்கலாம்.

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சொல்வது என்ன?

AT&T மற்றும் Verizon நிறுவனங்கள் கூற்றுபடி, விமானப் போக்குவரத்து இடையூறு சிக்கல்கள் இல்லாமல் சுமார் 40 நாடுகளில் C பேண்ட் 5G பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இடையூறு அபாயங்களைக் குறைப்பதற்காக, பிரான்சில் பயன்படுத்தப்பட்டதைப் போலவே, அமெரிக்காவில் உள்ள 50 விமான நிலையங்களைச் சுற்றியுள்ள buffer zones-களில் ஆறு மாதங்களுக்கு ஒப்புக்கொண்டனர்.

மற்ற நாடுகளில் ஏன் பிரச்சனை ஆகவில்லை?

2019 இல் ஐரோப்பிய ஒன்றியம் 3.4-3.8 GHz அளவில் மிட் ரேஞ்ச் 5G அலைவரிசைக்கான தரநிலைகளை அமைத்துள்ளது. இது அமெரிக்காவில் வெளியிடப்படும் சேவையை விட குறைவான ஸ்பெக்ட்ரம் ஆகும். அலைவரிசையானது ஐரோப்பாவில் ஏலம் விடப்பட்டு, அதிலிருக்கும் 27 உறுப்பு நாடுகளில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் பயன்பாட்டில் உள்ளது.

31 மாநிலங்களை மேற்பார்வையிடும் ஐரோப்பிய யூனியன் ஏவியேஷன் சேஃப்டி ஏஜென்சி (EASA) கூற்றுப்படி, இப்பிரச்சனை அமெரிக்கா வான்வழிக்கு மட்டும் தான். ஐரோப்பாவில் பாதுகாப்பற்ற குறுக்கீடுகளின் ஆபத்து எதுவும் கண்டறியப்படவில்லை என தெரிவித்தது.

FAA அதிகாரிகள் கூறுகையில்,பிரான்ஸ் பயன்படுத்தும் ஸ்பெக்ட்ரம் (3.6-3.8 GHz) அமெரிக்காவில் அல்டிமீட்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் ஸ்பெக்ட்ரம் (4.2-4.4 GHz)லிருந்து வேறுபடுகிறது. பிரான்ஸின் 5ஜி அலைவரிசை வேகம், அமெரிக்காவில் அங்கீகரிக்கப்பட்டதை விட மிகக் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர்.

தென் கொரியாவில், 5G மொபைல் தொடர்பு ஸ்பெக்ட்ரம் 3.42-3.7 GHz அலைவரிசை ஆகும். ஏப்ரல் 2019 இல் 5G வணிகமயமாக்கப்பட்டதிலிருந்து ரேடியோ அலையில் குறுக்கீடு எதுவும் இல்லை. தற்போது, 5G மொபைல் கம்யூனிகேஷன் வயர்லெஸ் நிலையங்கள் விமான நிலையங்களுக்கு அருகில் செயல்படுகின்றன, ஆனால் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளது.

அமெரிக்க வயர்லெஸ் வர்த்தகக் குழுவான CTIA, ஐரோப்பா மற்றும் ஆசியா முழுவதிலும் உள்ள கிட்டத்தட்ட 40 நாடுகளில் உள்ள வயர்லெஸ் கேரியர்கள் இப்போது 5Gக்கு C பேண்ட்டைப் பயன்படுத்துகின்றன. சர்வதேச அளவில் நியமிக்கப்பட்ட அதே 4.2-4.4 GHz பேண்டில் செயல்படும் ரேடியோ அல்டிமீட்டர்களில் எந்த பாதிப்பும் இல்லை என அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

America Flight Airlines
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment