Advertisment

எந்த மாநிலம் அதிக பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறது தெரியுமா?

which state produces more plastic waste? ஆஸ்திரேலியாவின் நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வை இந்த ஆண்டு உலக வனவிலங்கு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக ஒருவர் ஒவ்வொரு வாரமும் 5 கிராம் பிளாஸ்டிக் உட்கொள்வதாக ஆய்வு முடிவு கூறுகிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Central Pollution Control Board, CPCB report, plastic pollutes, plastic produced is waste, A study by the University of Newcastle, Australia, பிளாஸ்டி மாசு, பிளாஸ்டிக் கழிவு, உத்தரப் பிரதேசம், Uttar Pradesh generated 2.06 lakh tonnes of plastics, Gujarat generated 2.6 lakh tonnes of plastics,

Central Pollution Control Board, CPCB report, plastic pollutes, plastic produced is waste, A study by the University of Newcastle, Australia, பிளாஸ்டி மாசு, பிளாஸ்டிக் கழிவு, உத்தரப் பிரதேசம், Uttar Pradesh generated 2.06 lakh tonnes of plastics, Gujarat generated 2.6 lakh tonnes of plastics,

which state produces more plastic waste? ஆஸ்திரேலியாவின் நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வை உலக வனவிலங்கு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக ஒருவர் ஒவ்வொரு வாரமும் 5 கிராம் பிளாஸ்டிக் உட்கொள்வதாக கூறுகிறது.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், இந்தியாவை ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதிலிருந்து விடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

பிளாஸ்டிக்கால் ஏற்படும் சுற்றுச்சூழல் தீங்குகளை பல ஆண்டுகளாக சர்வதேச ஆராய்ச்சி மற்றும் அரசாங்க அறிக்கைகள் தெரிவித்துவருகின்றன.

உலகளவில், உற்பத்தி செய்யப்படும் அனைத்து பிளாஸ்டிக்குகளும் 75% கழிவுதான். இதில் 87% சுற்றுச்சூழலில் கசிந்து விடுகின்றன. ஆஸ்திரேலியாவின் நியூகேஸ்டில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வை இந்த ஆண்டு உலக வனவிலங்கு அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதில், சராசரியாக ஒருவர் ஒவ்வொரு வாரமும் 5 கிராம் பிளாஸ்டிக் உட்கொள்வதாக ஆய்வு முடிவு கூறுகிறது. பிளாஸ்டிக் கழிவுகளில் மூன்றில் ஒரு பங்கு இயற்கை வளங்களில் கலக்கின்றன. குறிப்பாக நீர் நிலைகளில். இதுதான் பிளாஸ்டிக் உட்கொள்ளளின் மிகப்பெரிய வழியாக இருக்கிறது என்று அறிக்கை கூறுகிறது. இதில் குழாய் நீரின் மாதிரியில் காணப்படும் பிளாஸ்டிக் இழைகளின் அடிப்படையில் உலகளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் மாதிரிகள் செய்யப்பட்ட குழாய் நீரில் 82.4 சதவீதத்தில் 500 மில்லிக்கு நான்கு பிளாஸ்டிக் இழைகளைக் கொண்டுள்ளது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை கடைபிடிப்பதை மதிப்பிட்ட, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (சிபிசிபி) கடந்த 2017-18 ஆம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டது. இதன் விதிகள் 2018 ஆம் ஆண்டில் திருத்தப்பட்டன. 2017-18 அறிக்கையின்படி, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே தங்கள் ஆண்டு அறிக்கைகளை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளன. இந்த 14 மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் ஆண்டுக்கு 2.06 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இம்மாநிலம் 133 பதிவு செய்யப்பட்ட பிளாஸ்டி உற்பத்தி மற்றும் மறுசுழற்சி அலகுகளைக் கொண்டுள்ளது. அதே போல, அது 16 பதிவு செய்யப்படாத அலகுகளைக் கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் ஆண்டுக்கு 2.6 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கிறது. இம்மாநிலம், 882 பதிவு செய்யப்பட்ட பிளாஸ்டி உற்பத்தி மற்றும் மறுசுழற்சி அலகுகளைக் கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் பதிவு செய்யப்படாத அலகுகள் ஏதும் இல்லை.

Air Pollution
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment