பேராசையால் சரிந்த 'தோசை கிங்' சரவண பவன் ராஜகோபால்!

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் அதுவும் வீணாக முடிய ஜூலை 9ல் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

Dosa King P Rajagopal Saravana Bhavan case :  சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய வயது 72.  அந்த உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஒருவரை கடத்தி கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்தார் ராஜகோபால்.  ஆனால் அந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உறுதி செய்தது . மேலும் மார்ச் 29ம் தேதி அன்று ஜூலை 7ம் தேதிக்குள் சரணடைய வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்தது. இந்த உத்தரவை தொடர்ந்து ஜூலை 9ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால்.

I set my heart on victory – என்னும் ராஜகோபாலின் சுயசரிதை

5 வருடங்களுக்கு முன்பு அவர் எழுதிய தன்னுடைய சுயசரிதையில் “I set my heart on victory” அவருடைய வெற்றிப் பாதையை பற்றி நிறைய குறிப்பிட்டு இருந்தார்.  அவர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் ஒரு டீ மேக்கராக ஒரு சிறிய டீ கடையில் வேலை பார்த்திருக்கிறார். பின்பு மளிகை கடை ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்தார். 1981 கேகே நகரில் அவர் தன்னுடைய முதல் சரவணபவன் ஹோட்டல் ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு சிறிய மளிகை கடை ஒன்றை நடத்தி வந்தார்.

உலகெங்கும் நன்மதிப்பை பெற்ற சரவணபவன்

அவருடைய உணவகம் அதனுடைய ருசிக்காகவும் சுகாதாரமான தயாரிப்பதாகவும் பெயர் பெற்றது பின்பு அந்த உணவகம் சென்னை முழுவதும் பரவத் துவங்கியது. இந்தியா  மட்டுமின்றி சிங்கப்பூர் முதல் கனடா வரை உலகின் பல்வேறு இடங்களில் சரவணபவன் ஹோட்டல் நிறுவப்பட்டது. சரவணபவன் ஹோட்டல் உணவுக்கு எப்படி பிரபலமோ அதே போன்று அந்நிறுவனத்தின் பணியாளர்களை கவனிப்பதிலும், அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்குவதிலும் பெயர் பெற்றது.

ஆனால் இவை அனைத்தும் 2001ம் ஆண்டுக்கு முன்பு தான். தான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ராமசாமி சரவணபவன் உணவகத்தின் துணை மேலாளராக பணியாற்றி வந்தார். அவருடைய மகள் தான் ஜீவஜோதி.  ஏற்கனவே ராஜகோபாலுக்கு இருமுறை திருமணம் ஆகி இருந்தது.  அவருடைய இரண்டாவது மனைவியும் தன் பணியாளர் ஒருவரின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீவஜோதிக்கு அடிக்கடி போன் செய்வது, அன்பளிப்புகள் வாங்கி தருவது, விலை உயர்ந்த புடவை மற்றும் நகைகள் வாங்கி தருவது என்று தொடர்ந்து ராஜகோபால் உதவி செய்து வந்தார். ஜீவஜோதிக்கு திருமணம் ஆன பின்பும் இது தொடர்ந்து வந்தது.  ஒருமுறை ஜீவஜோதிக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. அப்போது ஜீவஜோதியின் கணவன் சாந்தகுமாருக்கு எச்.ஐ.வி மானிட்டரிங்க் டெஸ்ட் எடுக்க கோரி வற்புறுத்தியுள்ளார். மேலும் ஜீவஜோதியிடம் சென்று சாந்தகுமாருக்கு எய்ட்ஸ் உள்ளதென்றும், அவருடன் உறவு வைத்துக் கொள்ளாதே என்றும் கூறியும் உள்ளார் ராஜகோபால்.

ஜோசியத்தால் சரிந்த சாம்ராஜ்யம் :

ஜீவஜோதி சாந்தகுமார் என்பவரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பிலிருந்தே ஜீவஜோதியை மணந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ராஜகோபாலுக்கு இருந்து வந்தது.  ஜோசியர் ஒருவர் கூறிய காரணத்தினால் அவர் இந்த முடிவை எடுத்தார்.  ஆனால் ஜீவஜோதி ராஜகோபாலின் எண்ணங்களை நிராகரித்துவிட்டு அது 1999 ஆம் ஆண்டு சாந்தகுமாரை மணந்து கொண்டார். சாந்தகுமார் ஆரம்பத்தில் டியூஷன் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.  பின்பு சரவண பவன் ஹோட்டலில் வேலை செய்து வந்தார்.

அக்டோபர் 1, 2001ஆம் ஆண்டு ராஜகோபாலால் தங்கள் இருவர் உயிருக்கும் ஆபத்து என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து சாந்தகுமார் கடத்தப்பட்டு கொடைக்கானலில் வைத்து கொலை செய்யப்பட்டார்.  அவருடைய உடல் டைகர் சோலா காட்டில் ஒரு வாரம் கழித்து கண்டுபிடிக்கப்பட்டது.

நவம்பர் 23, 2001 அன்று ராஜகோபால் நேரில் ஆஜரானார்.  ஜூலை 15,  2003 போதுதான் அவருக்கு பெயில் கிடைத்தது.   இந்த வழக்கை திசை திருப்ப ஜீவஜோதிக்கு லஞ்சம்  வழங்க முன்வந்தார்.  6 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க முயன்றதும் மறுத்த பின்பு அவருடைய சகோதரன் ராம்குமாரை அடித்து துன்புறுத்தும் கண்டுபிடிக்கப்பட்டது.

திட்டமிட்ட கொலை செய்த காரணத்தினால் சென்னை நீதிமன்றம் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 55 லட்ச ரூபாய் அபராதமும் விதித்தது. மார்ச் மாதம் 2009 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது இந்த தீர்ப்பினை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் உயர் நீதிமன்றம் அந்த 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை ஆயுள் தண்டனையாக உயர்த்தி அறிவித்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் அதுவும் வீணாக முடிய ஜூலை 9ல் நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

மேலும் படிக்க : சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்… மரணப்படுக்கை வரை இழுத்து வந்த சாந்தகுமார் கொலை வழக்கு!

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close