Advertisment

எதை நோக்கி நகர்கிறது தானியங்கி கார்கள் தொழில்நுட்பம் ?

தி ஸ்டான்ஃபோர்ட் கார்ட் (The Stanford Cart) - 1961ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. அதில் அருகில் இருக்கும் தடைகளை கண்காணிக்க கேமரக்கள் பொருத்தப்பட்டிருந்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Driverless Self Driving Cars Automobile Technology

Driverless Self Driving Cars Automobile Technology

Anil Sasi

Advertisment

Driverless Self Driving Cars Automobile Technology  : பொதுவாக ட்ரைவர்  இல்லாத, செல்ஃப் ட்ரைவிங் கார்கள் அதிக அளவில் தற்போது சந்தைபடுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நாள் வரை டிஜிட்டல் ஃபோட்டோகிராபி, விர்ச்சுவல் ரியாலிட்டி, டீப் வெப் மற்றும் இணைய சேவைகள் போன்றே செல்ஃப் ட்ரைவிங் கார்களும் மிகப் பெரிய தொழில்நுப்ட வெற்றியாக கொண்டாடப்படுகிறது.

ஈரான் மற்றும் ஆப்கானில் அமெரிக்கா போர் தொடுத்த காலங்களில் இந்த தொழில்நுப்டத்திற்கான தேவை உருவானது. Defense Advanced Research Projects Agency எனப்படும் ரிசர்ச் ஏஜென்ஸியின் 2000-ம் ஆண்டின் ஏற்பாடு தான் இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் செல்ஃப்லெஸ் கார்களின் முன்னோடி.

Driverless Self Driving Cars Automobile Technology

தி ஸ்டான்ஃபோர்ட் கார்ட் (The Stanford Cart) - 1961ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டது. அதில் அருகில் இருக்கும் தடைகளை கண்காணிக்க கேமரக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பின்னாளில் கார்னெஜி மெல்லோன் ஆராய்ச்ச்சியாளர்கள் நாவ்லாப் 5 ( NavLab 5) என்ற காரின் மூலம் அமெரிக்கா முழுவதும் வலம் வந்தனர்.

விண்ட்ஷீல்டில் மாட்டியிருக்கும் கேமராக்கள் பாதையை கவனித்து வர, ஃப்யூல் பெடல் மற்றும் ப்ரேக்குகள் போன்றவற்றை மனிதர்கள் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் இந்த டெக்னாலஜி உருவாக்கப்பட்டது.

பிறகு 2004ம் ஆண்டு 140 மைல்கள் தொலைவை கடக்க மோஜவே பாலைவனத்தில் ஓட்டிச் செல்லும் வகையில் ஒரு ரோபோ காரை குறித்த ஆய்வில் இறங்கியது DARPA. மீண்டும் கார்னெஜி மெல்லோன் பல்கலைக்கழகம் ஸண்ட் ஸ்டோர்ம் என்ற காரை கண்டுபிடித்தது. அதில் கேமராக்கள், ரேடார்கள், ஸ்கேனர்கள் பொருத்தப்பட்டது. 1000 பௌண்ட் எடை கொண்ட, முழுக்க முழுக்க எல்க்ட்ரானிக் சாதனங்களால் நிரப்பட்ட அந்த கார் 7 மைல் தொலைவே பயணித்தது.

மேலும் படிக்க : கோடை காலத்தில் உருவாகும் புயல்கள் இதர புயல்களை விட சக்தி வாய்ந்தவை ! ஏன் என்று அறிந்து கொள்ள க்ளிக்  செய்யவும்

2007ம் ஆண்டு பாதுகாப்பு துறை வைத்த போட்டி ஒன்றில் சி.எம்.யூவின்வ் பாஸ், ஸ்டான்ஃபோர்ட்ஸ்-இன் ஜூனியர், மrரும் விர்ஜினியா டெக் நிறுவனத்தின் ஓடின் ஆகிய கார்கள் இதில் வெற்றி பெற்றன. இந்த மூன்றுக்குமான பட்ஜெட் 30 மில்லியன் டாலர்கள் மட்டுமே. ஆரம்பத்தில் ராணுவ தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்ட இந்த வகை வாகனங்கள் தற்போது மக்களின் பயன்பாட்டிற்கு வர துவங்கியுள்ளது.

கமெர்ஷியல் தேவைக்காக ஆட்டோ ட்ரைவிங் கார்கள்

சாதாரண கார்களை விட ஆயிரம் மடங்கு கமர்ஷியல் வேலியூக்களைப் பெற்றது இந்த கார்கள். சுமார் 100 பில்லியன் டாலர்கள் இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யப்பட்டது. Jefferies Research LLC சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில், கூகுள் நிறுவனத்தின் ஆல்பபெட் இன்க் நிறுவனம் 250 பில்லியன் டாலர்களை இந்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருப்பதாக கூறியுள்ளது.

இதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள்

முதல்வகை ரேடார்கள், சோனார்கள், கேமராக்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, வாகனத்தைச் சுற்றிலும் உள்ள தடைகள், அருகே வரும் கார்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.

மற்றொரு வகை லிடார் ஆகும். லைட் எனெர்ஜியை பயன்படுத்தி உருவாக்கப்படும் லிடார் சிக்னல்கள் மூலமாக தொலைவுகள், தடைகள் ஆகியவற்றை உணர்ந்து அதற்கேற்ற வகையில் வாகனங்களை இயக்கும் முறையாகும்.

இதற்கு அதிகப்படியான டேட்டா ப்ரோசசிங் மற்றும் கம்ப்யூடெசனல் பவர் தேவைப்படுகிறது. ஆனால் ட்ராஃபிக் அதிகமாக இருக்கும் சாலைகளில் மிகவும் பொருந்தி போகக்கூடிய ஒன்றாகும். லிடார் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது.

மிகச்சிறந்த கார்களை உருவாக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் தற்போது, லிடார் தொழில்நுப்டத்தில் இருந்து கார்களை உருவாக்கும் திட்டத்தை கைவிடுவதாக கூறிவிட்டார். அதிக விலை உடையதாகவும், எடை கொண்டதாகவும் அவை இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே கேமராக்கள், ரேடார்கள், அல்ட்ராசோனிக் சென்சார்கள் கொண்ட கார்களை மட்டுமே முழு மூச்சில் தயாரிக்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஜி.எம், உபெர், வெய்மோ போன்ற நிறுவனங்கள் லிடார் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகின்றன. சமீபத்தில் வெய்மோ உபெர் மீது "தங்களின் தொழில்நுட்பத்தை திருடியதாக" குற்றம் சுமத்தியுள்ளது.

வெய்மோ (Waymo)

2018ம் ஆண்டு டிசம்பரில் வெய்மோ 1 என்ற காரை அரிஜோனாவில் வெளியிட்டது. அதனுடன் , செல்ஃப் ட்ரைவிங்கிற்கான ஆப்பினையும் வெளியிட்டுள்ளது. புறநகர் பகுதியில் வாழும் 500 குடும்பத்தினர் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர்

ஃபோர்ட் நிறுவனம் 2021ம் ஆண்டு தன்னுடைய முதல் காரினை வெளியிட உள்ளது. அடுத்த இரண்டு வருடங்களில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் 1000 கணக்கான கார்களை வெளியிடும் திட்டத்தில் உள்ளது.  ஜெனரல் மோட்டர்ஸ் இந்த வருட இறுதிக்குள் தன்னுடைய முதல் ஆட்டோமேட்டிக் கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது

டெஸ்லா

அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் முழுக்க முழுக்க தானாக இயங்கும் காரினை வெளியிடும் திட்டத்தை கொண்டுள்ளது டெஸ்லா... ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு ஸ்டீரிங் வீலினை தொடாமல் வெற்றிகரமாக ஓட்டிக்காட்டுவேன் என்று டெஸ்லா தலைவர் எலோன் மஸ்க் கூறினார்

வால்வோ

200 ஸ்வீடன் நாட்டு வாடிக்கையாளர்களுக்கு 2021ம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்த காரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் உள்ளது வால்வோ. இண்டெலிசெல்ஃப் என்ற பெயருடன், உயிரிழப்புகள் இல்லாத கார்சேவையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வருகிறது.

கடந்த வருடம், உபெர் செல்ஃப் கார் அரிஜோனாவில் நடந்து சென்றவர் மீது ஏறியதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இதனைத் தொடர்ந்து கார்மேக்கர்கள், பாதுகாப்பு குறித்து சிறப்பு கவனங்கள் செலுத்தி வருகின்றனர்.

Technology
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment