Advertisment

EWS இன் வரையறையை மறுபரிசீலனை செய்தல்

EWS ஐ நிர்ணயிப்பதற்கான வருமான அளவுகோல்களை ஆய்வு செய்யும் குழு விரைவில் அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும். தற்போது இந்த அளவுகோல்கள் என்ன, உச்ச நீதிமன்றம் ஏன் அவற்றை தன்னிச்சையானது என அழைத்தது?

author-image
WebDesk
New Update
EWS இன் வரையறையை மறுபரிசீலனை செய்தல்

Shyamlal Yadav 

Advertisment

Explained: Revisiting definition of EWS: பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரை (EWS) நிர்ணயம் செய்வதற்கான வருமான அளவுகோல்களை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு, அடுத்த சில நாட்களுக்குள் அதன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் குழு அமைக்கப்பட்டது?

உச்ச நீதிமன்றம் EWS வரையறுப்பதற்கான வருமான அளவுகோல்களை கேள்விக்குட்படுத்திய பின்னர் குழு அமைக்கப்பட்டது, மேலும் வருமான அளவுகோல்களை "தன்னிச்சையானது" (நியாயமற்றது) என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. EWS (ரூ 8 லட்சம்) நிர்ணயிப்பதற்கான உச்சவரம்பு, அரசாங்கத்திற்கு வெளியே உள்ள மக்களின் குழந்தைகளுக்கான இடஒதுக்கீட்டிற்கான மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) "கிரீமி லேயர்" நிர்ணயிப்பதற்கான வரம்புக்கு சமம் என்று குறிப்பிட்டது.

நவம்பர் 25 அன்று, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்தில், அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங்களின் சேர்க்கைகளில் இடஒதுக்கீடு வழங்குவதில் EWS பிரிவின் வருமான அளவை தீர்மானிப்பதற்கான அளவுகோல்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்யும் என்று கூறினார்.

நவம்பர் 30 அன்று, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் "பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரை நிர்ணயிப்பதற்கான அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய" குழுவை அறிவித்தது. இதில் முன்னாள் நிதி செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ICSSR) உறுப்பினர் செயலாளர் வி.கே.மல்ஹோத்ரா மற்றும் இந்திய அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் சஞ்சீவ் சன்யால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த விசாரணை ஜனவரி 6ம் தேதி நடக்கிறது.

இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு வந்தது எப்படி?

முதுகலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வின் கீழ் அகில இந்திய ஒதுக்கீட்டில் EWS மற்றும் OBC இடஒதுக்கீடு குறித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனு உள்ளிட்ட பல மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ஜூலை 29 அன்று, இந்த கல்வி அமர்வைத் தொடங்கி, முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டிற்குள் EWS க்கு 10% இடஒதுக்கீட்டையும் OBC க்கு 27% இடஒதுக்கீட்டையும் செயல்படுத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யபட்டதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கும் வரை மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்கிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தற்போது, ​​ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு கீழ் உள்ளவர்கள் EWS பிரிவில் உள்ளனர். பயன்படுத்தப்பட்ட அளவுகோல்களை உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ​​​​முதலில் மத்திய அரசு தரநிலையை நியாயப்படுத்தியது, ஆனால் பின்னர் அதை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது.

வருமான அளவுகோல் எப்போது நிர்ணயிக்கப்பட்டது?

செப்டம்பரில் NEET சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்ட EWS மற்றும் OBC ஒதுக்கீட்டுக்கான அளவுகோல்கள், அரசியலமைப்பின் 103வது திருத்தத்தின் அடிப்படையில் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) ஜனவரி 31, 2019 அன்று வேலைவாய்ப்பு மற்றும் சேர்க்கைக்கு அறிவிக்கப்பட்ட அளவுகோல்களுக்கு சமமாகும். (படத்தைப் பார்க்கவும்).

publive-image

2019 அறிவிப்பின்படி, SC, ST மற்றும் OBCகளுக்கான இடஒதுக்கீடு திட்டத்தின் கீழ் வராத நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள், இடஒதுக்கீட்டின் பயனாக EWS களாக அடையாளம் காணப்படுவார்கள். இந்த அறிவிப்பு "வருமானம்" என்றால் என்ன என்பதைக் குறிப்பிடுகிறது, மேலும் சில நபர்களின் குடும்பங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட சொத்துக்களை வைத்திருந்தால் EWS பிரிவில் இருந்து விலக்கப்படும் என்றும் குறிப்பிடுகிறது.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) எஸ்.ஆர்.சின்ஹோ தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் EWS இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மார்ச் 2005 இல் அப்போதைய UPA அரசாங்கத்தால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் அறிக்கையை ஜூலை 2010 இல் சமர்ப்பித்தது. சின்ஹோ கமிஷன் பொதுப் பிரிவிற்குள் இருக்கும் அவ்வப்போது அறிவிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள (BPL) அனைத்து குடும்பங்கள் மற்றும் அனைத்து ஆதாரங்களில் இருந்தும் குடும்ப ஆண்டு வருமானம் வரி விதிக்கக்கூடிய வரம்பிற்குக் குறைவாக இருந்தால், EBC களாக (பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்) அடையாளம் காணப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

EWS க்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தற்போதைய வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமானது OBC களுக்கு அரசாங்கத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கான ஒதுக்கீட்டிற்கு சமமாக உள்ளது. அரசாங்கத்தில் OBC ஒதுக்கீட்டிற்கு, சம்பந்தப்பட்டவரின் பெற்றோரின் தரவரிசையின் அடிப்படையில் வேறுபட்ட அளவுகோல் உள்ளது. அரசாங்கத்திற்கு வெளியே உள்ளவர்களுக்கு வருமான அளவுகோல் உள்ளது, இது 2017 இல் ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

உச்சவரம்பு முடிவு செய்யப்பட்டது எப்படி?

ஆகஸ்ட் 3 அன்று, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் பிரதிமா பூமிக் மக்களவையில் எழுத்துப்பூர்வ பதிலில், "EWS பிரிவினருக்கு ஆண்டு வருமான வரம்பு ரூ. 8 லட்சம் என்பது அரசாங்கத்தின் விரிவான ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்பட்டது". என்று கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய EWS இடஒதுக்கீடு தொடர்பான கோப்பு, அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட ஜனவரி 6, 2019 தேதியிட்ட அமைச்சரவைக் குறிப்பை உள்ளடக்கியது. "வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை நிர்ணயிப்பது விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதாலும், ஒத்த வகைகளுடன் சமநிலையைப் பேணுவதற்கும், இடஒதுக்கீட்டின் பலனில் இருந்து விலக்கும் நோக்கத்திற்காக OBC களின் விஷயத்தில் பொருந்தக்கூடிய வருமானம்/சொத்துக்களின் சோதனையைப் பயன்படுத்துவது பொருத்தமானதாக இருக்கும்." இந்தக் குறிப்பின் அடிப்படையில், 2019 ஜனவரியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், EWS-க்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த முடிவு செய்யப்பட்டது.

அந்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் உள்ள நிலையில், அரசாங்கம் அவசர அவசரமாக சட்டத்தை நிறைவேற்றியது. இந்த மசோதா ஜனவரி 8, 2019 அன்று மக்களவையிலும், அடுத்த நாள் ராஜ்யசபாவிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

வருமான உச்சவரம்பு தன்னிச்சையானது என்று உச்ச நீதிமன்றம் கூறியது ஏன்?

அக்டோபர் 21 அன்று, உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது: “ஓபிசி மற்றும் EWS பிரிவினரின் கிரீமி லேயரை நிர்ணயம் செய்வதற்கான அளவுகோலில் வருமான வரம்பு ஒன்றுதான், அதாவது ரூ. 8 லட்சம். OBC பிரிவில் உள்ள கிரீமி லேயர் சமூகத்தின் சமூகப் பின்தங்கிய தன்மையைக் குறைக்கும் அளவுக்கு 'பொருளாதார ரீதியாக முன்னேறிய' சமூகத்தின் ஒரு பிரிவைத் தவிர்ப்பதற்காக அடையாளம் காணப்பட்டாலும், மற்ற சமூகத்துடன் ஒப்பிடும் போது EWS பிரிவு 'ஏழை' பிரிவைச் சேர்க்க அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே (அ) OBC வகையைப் பொறுத்தமட்டில் வருமான அளவுகோல் ஒரு வகுப்பிலிருந்து விலக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டது, அதே சமயம் EWS வகையைப் பொறுத்தவரை, அது சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டது; மற்றும் (ஆ) OBC பிரிவினர் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள், எனவே, பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுடன் ஒப்பிடுகையில், கூடுதல் தடைகள் உள்ளன. இந்தச் சூழ்நிலையில், OBC மற்றும் EWS ஆகிய இரு பிரிவினருக்கும் ஒரே வருமான வரம்பை வழங்குவது தன்னிச்சையாக இருக்குமா என்று கேள்வி எழுப்பியது.

மேலும், “சொத்து விதிவிலக்கு எந்த அடிப்படையில் வந்தது மற்றும் அந்த நோக்கத்திற்காக ஏதேனும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா?; விதிவிலக்கின் கீழ் தேவைப்படும் நகராட்சிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதா?; குடியிருப்பு பிளாட் அளவுகோல் பெருநகரம் மற்றும் பெருநகரம் அல்லாத பகுதிகளுக்கு இடையே வேறுபாடு காட்டாததற்குக் காரணம் என்ன?." என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Obc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment