Advertisment

லைஃப் மிஷன் வழக்கு: கேரள முன்னாள் உயர் அதிகாரி சிவசங்கரை மீண்டும் கைது செய்த இ.டி

அவர் மீதான அமலாக்கத்துறை இயக்குனரகம் விசாரணை காவலை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து கொச்சி சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. 2020-ல் பரபரப்பான கேரள தங்கக் கடத்தல் வழக்கின் ஒரு பகுதியாக இந்த வழக்கு வெளிவந்துள்ளது. அதைப் பறி ஒரு பார்வை.

author-image
WebDesk
New Update
kerala, life mission, case, gold smuggling case, pinarayi vijayan government, கேரளா, லைஃப் மிஷன், சிவசங்கர், தங்கக் கடத்தல் வழக்கு, kerala floods 2018, M Sivasankar, explained, express explained, current affairs

2016 முதல் ஜூலை 2020 வரை கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய முன்னாள் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி எம். சிவசங்கர், கடந்த வாரம் அமலாக்க இயக்குநரகத்தால் (இ.டி) வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறைச் சட்டத்தை (எஃப்.சி.ஆர்.ஏ) மீறியதாகவும் கேரளாவின் லைஃப் மிஷன் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறி கைது செய்யப்பட்டார்.

Advertisment

கொச்சியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்டம் (பி.எம்.எல்.ஏ) சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை அவரது இ.டி. விசாரணைக் காவலை வெள்ளிக்கிழமை வரை நீட்டித்தது. திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு அனுப்பப்பட்ட ராஜதந்திர சரக்குகள் வழியாக கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்ட 2020-ம் ஆண்டின் பரபரப்பான தங்கக் கடத்தல் வழக்கின் ஒரு பகுதியாக இந்த வழக்கு வெளிப்பட்டுள்ளது.

வெள்ள நிவாரணத்திற்காக தொண்டு நிறுவனம் வழங்கும் பணம்

கேரளாவில் உள்ள சி.பி.ஐ (எம்) அரசாங்கத்தின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான வாழ்வாதார இணைப்பு மற்றும் நிதி அதிகாரமளித்தல் லைஃப் மிஷன், ஏழைகளுக்கு குறைந்த விலையில் வீடுகளை வழங்க திட்டமிடப்பட்டது.

மாநிலத்தில் 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பேரிடருக்குப் பிறகு, செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேச மனிதாபிமான வலையமைப்பின் ஒரு பகுதியான ரெட் கிரசென்ட் என்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தை அணுகி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க ரூ.20 கோடி வழங்க முன்வந்தது. தங்கக் கடத்தல் ஊழலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், அப்போதைய துணைத் தூதரகத்தில் செயல் செயலாளராக இருந்தவர். இது தொடர்பாக சிவசங்கரிடம் விசாரணை நடத்தினார்.

லைஃப் மிஷனுக்கு போன பணம்

திருச்சூரில் உள்ள வடக்கஞ்சேரி நகராட்சியில் 140 அலகுகள் மற்றும் சுகாதார வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்ட, லைஃப் மிஷன் திட்டத்தில் ரெட் கிரசென்ட் பணத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. ஜூலை 11, 2019-ல் லைஃப் மிஷன் அதிகாரிகள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே, கேரள முதல்வர் விஜயன், சிவசங்கர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரக அதிகாரிகள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வடக்கஞ்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான அனில் அக்காரா, அப்பகுதியில் 6 பேர் மட்டுமே வெள்ளத்தில் வீடுகளை இழந்ததாகவும், இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பே அவர்கள் மறுவாழ்வு பெற்றதாகவும் கூறினார்.

லஞ்சக் குற்றச்சாட்டுகள்

யுனிடாக் பில்டர்ஸ் அண்ட் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மற்றும் சந்தோஷ் ஏப்பன் நடத்தும் சான் வென்ச்சர்ஸ் எல்.எல்.பி ஆகிய நிறுவனங்களுக்கு சுரேஷ் மற்றும் சிவசங்கர் ஆகியோரின் ஈடுபாட்டுடன் இந்த திட்டத்தை வழங்குவதில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இ.டி குற்றம் சாட்டியுள்ளது.

யூனிடாக் பில்டர்ஸ் மாநில பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட இடைத்தரகர்களுக்கு ரூ.4.5 கோடி லஞ்சம் கொடுத்ததாக இ.டி கூறியுள்ளது. சந்தோஷ் ஏப்பன் பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டார்.

கேரள லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சி.பி.ஐ விசாரணை

தங்கம் கடத்தல் வழக்கு விசாரணையின் போதுதான் லைஃப் மிஷன் திட்டத்தில் லஞ்சம் வாங்கியது குறித்து ஸ்வப்னா சுரேஷ் பேசினார். செப்டம்பர் 2020-ல், தங்கக் கடத்தல் வழக்கு வெளியாகி மூன்று மாதங்களுக்குப் பிறகு, லைஃப் மிஷன் மோசடி விவகாரமும் வெளிப்பட்டது.

பின்னர், சுங்க வரித்துறை, இ.டி மற்றும் என்.ஐ.ஏ போன்ற மத்திய அமைப்புகள் ஏற்கனவே தங்கம் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றங்களை விசாரித்து வருகின்றன. புதிய ஊழல் வெளிப்பட்டதால், மத்திய விசாரணை அமைப்புகளின் விசாரணையைத் தடுக்கும் வகையில், லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் குறித்து உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு கேரள அரசு உத்தரவிட்டது. இருப்பினும், அந்த மாத இறுதிக்குள், மத்திய அரசின் அனுமதியின்றி வெளி உதவியை ஏற்றுக்கொண்டது தொடர்பாக, இந்த வழக்கில் எஃப்.சி.ஆர்.ஏ மீறல்களுக்காக சி.பி.ஐ வ்ழக்குப் பதிவு செய்தது.

ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐ.பி.சி பிரிவு 120பி (குற்றச் சதி) ஆகியவற்றின் பல்வேறு விதிகளின் கீழ் யூனிடாக் பில்டர்ஸ் மற்றும் சான் வென்ச்சர்ஸ் எல்.எல்.பி மீது ஆரம்பத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவசங்கர், ஸ்வபனா சுரேஷ், பி.எஸ். சரித், சந்தீப் நாயர் மற்றும் சந்தோஷ் ஏப்பன் ஆகியோர் குற்றவாளிகளாக பட்டியலிடப்பட்டனர்.

சி.பி.ஐ விசாரணைக்கு கேரளா எதிர்ப்பு

இந்த விசாரணையானது மாநில அரசின் அதிகாரத்தை மீறுவது என்றும் கூட்டாட்சி அமைப்புக்கு எதிராக அமையும் என்றும் கூறி, சி.பி.ஐ வழக்கை ரத்து செய்யக் கோரி கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஜனவரி 2021-ல் இந்த மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர், சி.பி.,ஐ விசாரணைக்கு தடை கோரி கேரள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. ஆனால், பிப்ரவரி 2022-ல், உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணையைத் தொடர அனுமதித்தது.

சிபிஐ விசாரணை, மாநில லஞ்ச ஒழிப்பு விசாரணைகளில் பெரிய அளவில் முன்னேற்றமில்லை

இ.டி-யின் லைஃப் மிஷன் வழக்கு சி.பி.ஐ மற்றும் மாநில லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியவற்றின் எஃப்.ஐ.ஆர்.களில் இருந்து உருவாகிறது. ஊழல் தடுப்புச் சட்டம் மற்றும் ஐ.பி.சி 120 பி பிரிவு ஆகியவற்றின் கீழ் உள்ள குற்றங்கள் பணமோசடி தடுப்புச் சட்டம், 2022-ன் அட்டவணையின் பகுதி A-ன் கீழ் திட்டமிடப்பட்ட குற்றங்கள் என்ற அடிப்படையில் இ.டி. இந்த விவகாரத்தை பணமோசடி என்ற சூதாட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.

சிவசங்கர் மீது மற்றொரு இ.டி வழக்கு

ஸ்வப்னா சுரேஷுக்கு தங்கக் கடத்தல் பேரத்தின் மூலம் 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்ட உதவிய குற்றச்சாட்டின் பேரில், 2020 அக்டோபரிலும் சிவசங்கரை இ.டி கைது செய்தது.

சுரேஷுடன் கூட்டு வங்கி லாக்கரை திறக்க பட்டய கணக்காளர் வேணுகோபால் ஐயரை சிவசங்கர் தூண்டியதாக இ.டி குற்றம் சாட்டியது. இந்த லாக்கரில் உள்ள பணத்தை சிவசங்கர் கண்காணித்து வந்தார். மேலும், இந்த கணக்கில் உள்ள ஒவ்வொரு பரிவர்த்தனை குறித்தும் சி.ஏ அவருக்குத் தெரியப்படுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், கறுப்புப் பணத்தில் ஒரு பகுதியை வெளிநாட்டுப் பணமாக மாற்றி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கடத்த ஸ்வப்னாவுக்கு சிவசங்கர் உதவியதாகக் கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை ஆதரிப்பதற்காக, கொச்சியில் உள்ள பி.எம்.எல்.ஏ நீதிமன்றத்தில் கடந்த வாரம் சிவசங்கர் மற்றும் சுரேஷ் இடையேயான வாட்ஸ்அப் உரையாடல்களை இ.டி தாக்கல் செய்தது.

சிவசங்கர் மற்றும் சுரேஷ் ஆகியோர் யூனிடாக் பில்டர்ஸிடமிருந்து லஞ்சம் பெற்றதாகவும் இ.டி குற்றம் சாட்டியது. இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக வேலையை இழந்த பிறகு சுரேஷ் பொருளாதார ரீதியாக நன்றாக இல்லை என்றும், அவருக்கு உதவ தன்னால் முடிந்தவரை முயற்சி செய்ததாகவும், அவருக்கு வேலை கிடைத்ததாகவும் சிவசங்கர் விசாரணை நிறுவனங்களிடம் கூறினார்.

டாலர் கடத்தல் வழக்கு

இரண்டு இ.டி வழக்குகளைத் தவிர, ஐக்கிய அரபு எமிரேட் துணைத் தூதரகத்தின் முன்னாள் நிதித் தலைவரால் கூறப்படும் ரூ. 1.30 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கடத்தியதாக சிவசங்கர் மற்றொரு சுங்க வழக்கை எதிர்கொள்கிறார். இ.டி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிவசங்கர் ஜனவரி 2021-ல் கைது செய்யப்பட்டதை சுங்கத்துறை பதிவு செய்தது.

தங்கக் கடத்தல் வழக்கு, எங்கிருந்து தொடங்கியது

ஜூலை 5, 2020-ல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக சரக்குகளில் இருந்து 30 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதன் மூலம் தங்கக் கடத்தல் ஊழல் அம்பலமானது. ஸ்வப்னா மற்றும் பிறரை உள்ளடக்கியதாக கூறப்படும் இந்த மோசடி மூலம், அதுவரை ஒரு வருடத்தில் 21 முறை தூதரக சரக்குகளுக்குள் 168 கிலோ தங்கம் கடத்தப்பட்டதாக சுங்கத்துறை கண்டறிந்துள்ளது. சுங்கத்துறை, என்.ஐ.ஏ, இ.டி மற்றும் சி.பி.ஐ ஆகிய அனைத்தும் ஊழலின் பல்வேறு அம்சங்களைப் பார்த்து வழக்குப் பதிவு செய்தன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Kerala Cbi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment