Advertisment

எலோன் மஸ்க் வலியுறுத்தும் பேச்சு சுதந்திரம் இந்தியாவில் எடுபடுமா?

டொனால்ட் டிரம்ப் மீதான தடை நீக்கம் என்பது பலரும் எதிர்பார்க்கும் ஒரு மாற்றமாக இருக்கிறது. எலான் மஸ்க் ட்விட்டரின் அல்காரிதம்மை மற்றவர்களும் அணுகும் விதமாக வெளிப்படையாக வைப்பதாகவும், தளத்தில் வலம் வரும் பயனர்களை பின்தொடர்வதாகவும் உறுதியளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Elon Musk, Twitter, Twitter free speech, Elon Musk Twitter changes, எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், பேச்சு சுதந்திரம், இந்தியா, Elon Musk buys twitter, Elon Musk Twitter, Twitter Takeover, Twitter Elon Musk, Musk Twitter takeover, Elon Musk Twitter takeover

யாராலும் கணிக்க முடியாத கருத்துக்களுக்காகவும் அசாத்தியமான அரசியலுக்காகவும் பெயர் பெற்ற உலகின் மிகப் பெரிய பணக்காரர், இப்போது ட்விட்டரின் உரிமையாளராக இருப்பதால், இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளின் விருப்பமான மைக்ரோ பிளாக்கிங் தளமான டிவிட்டர் இனி எப்படி இருக்கும் - பிரதமர் நரேந்திர மோடி, அவரது ஒட்டுமொத்த அமைச்சரவை மற்றும் பெரும்பாலான முதல்வர்கள் உட்பட - அவர்களின் தளம் ஏதாவது மாறுமா?

Advertisment

எலான் மஸ்க் தன்னை ஒரு ‘முழுமையான பேச்சு சுதந்திரவாதி’ என்று அழைத்துக்கொள்கிறார். மேலும், அதை ட்விட்டருக்கான தனது நிகழ்ச்சி நிரலின் மையமாக மாற்றியுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வெற்றிகரமாக வாங்கிய பிறகு, ‘பேச்சு சுதந்திரம்’ செயல்படும் ஜனநாயகத்தின் அடித்தளம் என்றும் ட்விட்டர் என்பது மனிதகுலத்தின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் டிஜிட்டல் நகர சதுக்கம் என்றும் எலான் மஸ்க் கூறினார்.

ட்விட்டரில் உள்ளடக்க மதிப்பீட்டாளர்கள் அடிக்கடி தலையிடுவதாகவும், அவர்கள் மிகவும் கடினமான முறையில் தலையிடுவதாகவும் எலான் மஸ்க் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளார் மேலும் “அவரது மோசமான விமர்சகர்கள்கூட ட்விட்டரில் இருப்பார்கள் என நம்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார். ஏனென்றால், அதுதான் பேச்சு சுதந்திரம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமெரிக்காவில் இருப்பதைப் போல இல்லாமல், இந்தியாவில், ட்விட்டர் உரிமைகள் போட்டியாளர்களின் நிரந்தர போர்க்களமாக இருக்கும், பேச்சு சுதந்திரம் ஒரு முழுமையான உரிமை அல்ல. 1951 இல் அரசியலமைப்பின் முதல் திருத்ததமான 19(1)(a) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட பேச்சுரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமையின் மீது நியாயமான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தியது.

“இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாட்டின் பாதுகாப்பு, வெளி நாடுகளுடன் நட்புறவு, பொது ஒழுங்கு, கண்ணியம் அல்லது ஒழுக்கம் அல்லது நீதிமன்ற அவமதிப்பு, அவதூறு அல்லது குற்றத்தைத் தூண்டுதல் ஆகியவற்றுக்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த நியாயமான கட்டுப்பாடுகள், பின்னர் உச்ச நீதிமன்றத்தால் உறுதிசெய்யப்பட்டது. எலான் மஸ்க்கின் அதிகபட்ச பேச்சு சுதந்திர இலட்சியம் தவறாகப் பயன்படுத்தப்படக்கூடும். இந்திய அரசாங்கம், சமூக ஊடக தளங்களில் வழங்கப்படும் உள்ளடக்கம் நாட்டின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 69(ஏ) இன் கீழ், ஒரு பயனர் அரசியலமைப்பின் கீழ் கட்டுப்படுத்தப்பட்ட உள்ளடக்கத்தைப் பகிர்ந்து கொண்டால், ட்விட்டர் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் அவை குறித்த ஆட்சேபனை அறிவிப்புகளை வெளியிடலாம், பின்னர் அதை அந்த நிறுவனங்கள் நீக்க வேண்டும்.

சமூக ஊடக தளங்களை ஜனநாயக நாடுகளில் செழிக்க அனுமதித்த ஒரு முக்கிய கோட்பாடான இடைத்தொடர்பாளர் என்ற அந்தஸ்தை அவைகள் இழக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான அவற்றின் விடாமுயற்சி சட்டப்படி உள்ளது.

ஒரு சமூக ஊடக நிறுவனம் அதன் இடைத்தொடர்பாளர் என்ற அந்தஸ்தை இழந்தால், அதன் தளத்தில் வெளியிடப்படும் மூன்றாம் தரப்பு பேச்சுக்கு நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியும், மேலும் வழக்குகளுக்கு நிறுவனத்தை அழைக்கலாம்.

ஒரு அனுமானமாக, ட்விட்டர் அரசாங்கத்தின் தடை உத்தரவுகளுக்கு எதிராக ஒரு நிலைப்பாட்டை எடுக்கத் தேர்வுசெய்தால், இந்தியாவை தளமாகக் கொண்ட அதன் தலைமை பொறுப்பு அதிகாரி சிக்கலில் சிக்கக்கூடும். கடந்த ஆண்டு, ட்விட்டரின் அப்போதைய இந்தியத் தலைவர் மணீஷ் மகேஸ்வரி, ட்விட்டரில் தவறான தகவல்களைப் பரப்பும் வீடியோ வைரலானதை அடுத்து, உ.பி காவல்துறையினரால் விளக்கம் கேட்க அழைக்கப்பட்டார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட ஐடி (தகவல் தொழில்நுட்ப) விதிகளின்படி, சமூக ஊடக தளங்கள் ஒரு பொறுப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும், அதன் பொறுப்பு விதிகளில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து விதிகளையும் நிறுவனம் பின்பற்றுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஒரு நிறுவனம் அதைச் செய்யத் தவறினால், விதிகளின்படி, அதன் தலைமை பொறுப்பு அதிகாரி “தொடர்புடைய எந்தவொரு மூன்றாம் தரப்பு தகவல், டேட்டா அல்லது தகவல்தொடர்பு இணைப்பு தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளையும் செய்யத் தவறினால், இடைத்தொடர்பாளரால் பெறப்பட்ட தகவல் தடை செய்யப்படும். அத்தகைய இடைத்தொடர்பாளர் தனது கடமைகளை நிறைவேற்றும்போது அது விடாமுயற்சியைக் கடைப்பிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்” அதாவது, சமூக ஊடக இடைத்தொடர்பாளர் ட்விட்டர் தனது உரிய விடாமுயற்சியைச் செய்யத் தவறினால், அந்த நபர் சிறையில் அடைக்கப்படலாம்.

ஆகஸ்ட் 2021-இல், ட்விட்டர் நிறுவனம், ஐடி விதிகள், 2021 க்கு இணங்க, தலைமை பொறுப்பு அதிகாரி மற்றும் குடியுரிமை குறைதீர்வு அதிகாரி மற்றும் நோடல் தொடர்பு அதிகாரி பதவிகளுக்கு நிரந்தர நபர்களை நியமித்துள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

ஜூலை மாதம், ட்விட்டர் நிறுவனம், மூன்றாம் தரப்பு ஒப்பந்ததாரர் மூலம் ஒரு தற்காலிக பணியாளரை அந்த பதவிக்கு நியமித்ததாக நீதிமன்றத்தில் கூறியது.

டொனால்ட் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்கலாம், அவருக்கு மிகவும் சக்திவாய்ந்த ஒரு ஊடகத்தை திரும்பக் கொடுக்கலாம்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, டோனால்ட் டிரம்ப் பெரிய அளவில் ஏற்றுக்கொண்ட பேஸ்புக், ட்விட்டர், ஸ்னாப்சாட், ஸ்பாட்டிஃபை, ட்விட்ச் போன்ற ஊடகங்களில் இருந்து, ஜனவரி 6, 2021 அன்று வாஷிங்டன் டிசியில் உள்ள கேபிடல் மீதான தாக்குதலுக்குப் பிறகு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை தங்கள் தளங்களில் இருந்து வெளியேற்றினர்.

இது டிரம்ப் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் மீதான தொழில்நுட்ப நிறுவனங்களின் கொள்கையை ஒரே இரவில் மாற்றியமைத்தது. அவரைத் தடை செய்வதில், கடந்த நான்கு ஆண்டுகளாக அதிபர் தனது தளங்களில் பொய்களையும் வெறுப்பையும் பரப்ப அனுமதித்ததற்காக சமூக ஊடக நிறுவனங்களுக்கு எதிராக வலுக்கட்டாய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழும் கோரிக்கைகளுக்கு ட்விட்டர் தெளிவாக பதிலளித்தது.

ட்விட்டரில் தனது இறுதி மணிநேரத்தில், 1996 கம்யூனிகேஷன்ஸ் டீசென்சி சட்டப் பிரிவு 230ஐத் தாக்கினார். டிரம்ப் இப்படி தாக்குவது முதல் முறை அல்ல, இது இணைய தளங்களை மூன்றாம் தரப்பினரின் உள்ளடக்கத்தை வெளியிடவும், அவர்கள் சொல்வதற்கு சட்டப்பூர்வமாக பொறுப்பேற்காமல் அவற்றை நிர்வகிக்கவும் அனுமதிக்கிறது. சுதந்திரமான பேச்சுரிமையை தடை செய்ததற்காக, அதை ரத்து செய்வதாக அதிபர் டிரப் முன்பு அச்சுறுத்தினார்.

டொனால்ட் ட்ரம்ப் ட்விட்டருக்குத் திரும்புவது பற்றிய கேள்விக்கு எலான் மஸ்க் பதிலளிக்கவில்லை - ட்விட்டர் தளத்தில் அல்லது வேறு இடங்களில் அவரது 84.5 மில்லியன் பின்தொடர்பவர்களிடம் - பேச்சு சுதந்திரம் குறித்த முன்னாள் அதிபரின் தொடர்ச்சியான அறிக்கைகள் மீண்டும் சேர்க்கப்படுமா என்பது வலது மற்றும் இடது ஆகிய இரண்டு அரசியல் தரப்பிலும் எதிர்பார்ப்பை தூண்டியது. 2024-இல் வெள்ளை மாளிகையை மீண்டும் வெல்வதற்கான அவருடைய முயற்சிக்கு அவர் தனது விருப்பமான தளத்தை பயன்படுத்தலாம்.

ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, டிரம்ப் தனது ஸ்டார்ட் அப் சமூக ஊடக நிறுவனமான ட்ரூத் சோஷியலை ஒரு மாற்று தளமாக மாற்ற முயன்றார். ஆனால், அந்த முயற்சி பெரும்பாலும் தோல்வியடைந்தது. பதிவுக்காக, டிரம்ப் ஒரு நேர்காணலில், அவர் ட்விட்டரில் மீண்டும் வரமாட்டார் என்று கூறினார்.

ட்விட்டர் அதன் அல்காரிதத்தைத் அனைவரும் அணுகும் விதமாக வெளிப்படையாக வைக்க வேண்டும் என்று எலான் மஸ்க் பரிந்துரைத்துள்ளார். ஆனால், அதைச் செய்வதை விட சொல்வது எளிது.

சமீபத்தில் ஒரு டி.இ.டி மாநாட்டின் நேரடி ஒளிபரப்பில், பேசிய எலான் மஸ்க், ட்விட்டரின் அல்காரிதம் ஒரு வெளிப்படையான மாதிரியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறினார். இதனால், இந்த தளத்தின் பயனர்கள் எந்த ட்வீட்கள் விளம்பரப்படுத்தப்படுகின்றன மற்றும் மறைக்கப்படுகின்றன என்பதை ட்விட்டர் தீர்மானிக்கும் குறியீட்டைப் பயனர்களின் டைம்லைனில் பார்க்க முடியும்.

எலான் மஸ்க், மார்ச் 24ம் தேதி ஒரு ட்விட்டர் வாக்கெடுப்பை நடத்தினார், “ட்விட்டர் அல்காரிதம் வெளிப்படையாக இருக்க வேண்டுமா” என்று கேட்டார். இதில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளில் 82.7 சதவீதம் பேர் ‘ஆம்’ வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ட்விட்டரின் மென்பொருளில் இத்தகைய மாற்றங்களைச் செய்வது, இந்த தளத்தில் பதிவிடப்பட்ட உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் கணினி புரோகிராம்கள் வகிக்கும் பங்கை வெளிப்படுத்தும். ட்விட்டரின் அல்காரிதம் தங்களுக்கு எதிராக ஒரு சார்புடையது என்று மேற்கு நாடுகளில் உள்ள பழமைவாதிகள் பலமுறை புகார் கூறியுள்ளனர். மேலும், “திரைக்குப் பின்னால் கையாளுதல்” என எதுவும் நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதில் எலான் மஸ்க்கின் உறுதிப்பாட்டை பாராட்டுகிறார்கள்.

இருப்பினும், எலான் மஸ்க் இந்த சிக்கலை மிகைப்படுத்தக் கூடும், என்று ‘தி வாஷிங்டன் போஸ்ட்டில்’ வெளியான ஒரு கட்டுரை கூறியது, “சமூக ஊடக நிறுவனங்கள் வளர்ந்து வருவதால், அவர்களின் பரிந்துரை இயந்திரங்களை இயக்கும் மென்பொருள் மிகவும் பரந்ததாகவும் சிக்கலானதாகவும் வளர்ந்துள்ளது. அதை பகுப்பாய்வு செய்வதற்கு டேட்டா ஃபயர் ஹோஸ்களை அணுகல் தேவைப்படும். பெரும்பாலான மக்கள் அதை பகுப்பாய்வு செய்ய போதுமான சக்திவாய்ந்த கணினியை அணுக மாட்டார்கள்.” என்று கூறியுள்ளது.

டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சிபாரிசு என்ஜின்களை இயக்கும் அல்காரிதம்களை ஆய்வு செய்யும் நிக் சீவர், ‘அல்காரிதம் ஒரு விஷயம் அல்ல’ என்றும், ‘ட்விட்டரில் உள்ளவர்களும் தங்கள் அல்காரிதம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்புகிறார்கள்’ என்றும் அந்தக் கட்டுரை மேற்கோள் காட்டியது.

சீவரின் கருத்துப்படி, ‘தி போஸ்ட்’ பத்திர்கையில் குறிப்பிட்டுள்ளபடி, அமைப்புகள் மிகவும் சிக்கலானவை, அவற்றின் மென்பொருள் ஒரு பயனருக்கு ஏன் ஒரு பதிவை மற்றொரு பதிவைக் காட்டுகிறது என்பதை தொழில்நுட்ப நிறுவனங்களே அடிக்கடி அறிந்துகொள்வது கடினம் என்று கூறியுள்ளது.

போட்டியாளர்களை தோற்கடிக்க விரும்பும் எலான் மஸ்க்; இது ஒரு நல்ல விஷயம் என்று பெரும்பாலானோர் ஒப்புக்கொள்கிறார்கள்.

எலான் மஸ்க் ட்விட்டரை வாங்க முன்வருவதற்கு முன்பு, அவர் தற்போது ட்விட்டர் இயங்கும் விதத்தில் சமூக ஊடக தளம் எவ்வளவு பொருத்தமானது என்பது குறித்து சந்தேகம் தெரிவித்தார்.

ஏப்ரல் 9 ஆம் தேதி, “அதிகமாகப் பின்தொடரும் முதல் 10 ட்விட்டர் கணக்குகளின் பட்டியல் ட்விட்டரில் வெளியிடப்பட்ட பிறகு, எலான் மஸ்க் ட்வீட் செய்தார், ‘இந்த 'டாப்’ கணக்குகளில் பெரும்பாலானவர்கள் அரிதாகவே ட்வீட் செய்கின்றனர். மிகக் குறைந்த உள்ளடக்கத்தை வெளியிடுகின்றனர். ட்விட்டர் இறந்துவிட்டதா? என்று கேட்டிருந்தார்.

இந்த பட்டியலில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா 131.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் முதலிடத்திலும், பாப் நட்சத்திரங்கள் ஜஸ்டின் பீபர் (114.3 மில்லியன்), கேட்டி பெர்ரி (108.8 மில்லியன்), மற்றும் ரிஹானா (105.9 மில்லியன்) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். ஆனால், அதில் எலான் மஸ்க்கும் இருந்தார். அதே போல், பிரதமர் மோடியும் தனது தனிப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளை சிறப்பாகப் பயன்படுத்துகிறார்.

ஏப்ரல் 22 ஆம் தேதி எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட்டில், “நம்முடைய ட்விட்டர் முயற்சி வெற்றியடைந்தால், நாம் ஸ்பேம் பாட் (போலி பயனர்களை) தோற்கடிப்போம் அல்லது முயற்சி செய்து தோல்வியடைவோம்” ஸ்பேம் பாட்களை தோற்கடித்து, அனைத்து மனிதர்களையும் அங்கீகரிப்பதன் மூலம் ட்விட்டரை எப்போதையும் விட சிறப்பாக உருவாக்க விரும்புவதாக அவர் கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Twitter Elon Musk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment