Advertisment

5G அலைக்கற்றை ஏலம் நிறைவு... 4 நிறுவனங்கள்.. அள்ளிய ஜியோ... முழு விவரம் உள்ளே!

7 நாட்களாக நடைபெற்ற 5G அலைக்கற்றை ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு நிறைவடைந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
5G அலைக்கற்றை ஏலம் நிறைவு...  4 நிறுவனங்கள்.. அள்ளிய ஜியோ... முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் 5ஜி சேவை வழங்குவதற்கான அலைக்கற்றை ஏலம் கடந்த ஜூலை 26 ஆம் தேதி இணையதளம் வாயிலாக தொடங்கியது. 7 நாட்களாக 40 சுற்றுகளாக நடைபெற்ற ஏலம் கடந்த திங்கட்கிழமை நிறைவடைந்தது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. மொத்தம் ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது.

Advertisment

ஜியோ நிறுவனம் அதிகபட்சமாக ரூ.88 ஆயிரம் கோடிக்கு ஏலம் எடுத்தது. பிரீமியம் 700 MHz அலைவரிசையை ஜியோ ஏலம் எடுத்துள்ளது. குறைந்தபட்சமாக அதானி குழும நிறுவனம் 212 கோடிக்கு ஏலம் எடுத்தது.

எதிர்பார்த்ததை விட அதிக விலைக்கு ஏலம்

மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ரூ.1 லட்சம் கோடிக்கு ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரூ.1.50 லட்சம் கோடிக்கு 5G அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

அடுத்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் 5G சேவை எல்லா பகுதிகளிலும் நல்ல கவரேஜ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து பகுதிகளுக்கும் சேவை வழங்கும்படி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களிடமிருந்து முதலாம் ஆண்டு தவணையாக ரூ.13,365 கோடி அரசு பெறும் எனத் தெரிவித்தார்.

&t=10s

700 MHz வாங்க போட்டி

700 MHz (மெகா ஹெர்ட்ஸ்) வாங்க நிறுவனங்களிடையே போட்டி நிலவியது. ஆரம்பத்தில் இந்த அலைவரிசை ஏலம் எடுக்கப்படாது என அரசு நினைத்தது. ஆனால் இரண்டாவது பெரிய தொகைக்கு இந்த அலைவரிசை ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2016 மற்றும் 2021 ஏலத்தில் இந்த அலைவரிசை அதிக விலை காரணமாக ஏலம் எடுக்கப்பட வில்லை.

700 MHz அலைவரிசை அனைத்து பகுதிகளிலும் கவரேஜ் கிடைக்க பொருத்தமானதாக உள்ளது. டேட்டா பயன்பாடு, நுகர்வோர் சேவைகளுக்கு ஏற்றதாக உள்ளது. ரூ.39,270 கோடிக்கு அலைவரிசை ஏலம் எடுக்கப்பட்டது. இது இரண்டாவது பெரிய தொகையாகும்.

3,300 MHz அலைவரிசை அதிகபட்சமாக ரூ.80,590 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. அமைச்சர் வைஷ்ணவ் கூறுகையில், "உலகளவில் 5ஜி சேவை 700 MHz அலைக்கற்றில் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. விரிவான கவரேஜ் கொடுக்கிறது. 6-10 கிமீ தூரம் வரை கவரேஜ் கிடைக்கிறது.

800 MHz - 2500 GHz (ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றை ஏலம் எடுத்த நிறுவனங்கள் தங்களின் 4ஜி சேவையை மேலும் அதிகரிக்கவும், 4ஜி நெட்வொர்க் நெரிசல் ஏற்படத் தொடங்கிய பகுதிகளில் சீர் செய்யவும் இதை வாங்கியுள்ளனர்" என்றார்.

ஏலத்தில் 4 நிறுவனங்கள்: முதலிடத்தில் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ அதிகப்பட்டசமாக ரூ. 88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. துறை சார்ந்த நிபுணர்களின் கணிப்புக்கு ஏற்ப, 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை மொத்தம் 24.7 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசையாகப் பெற்றது.

700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையை வாங்கிய ஒரே நிறுவனம் ஜியோ மட்டுமே. ஜியோவின் நேரடி போட்டியாளரான ஏர்டெல், 700 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசையில் எதுவும் வாங்கவில்லை. ஏர்டெல் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் 26 ஜிகாஹெர்ட்ஸ் என ரூ.43,084 கோடி ஏலம் எடுத்தது.

வோடஃபோன் ஐடியா ரூ.18,799 கோடி ஏலம் எடுத்தது. 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை ஏலம் எடுத்தது. இறுதியாக அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வர்க் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளை மட்டும் ரூ.212 கோடிக்கு ஏலம் எடுத்தது.

முன்னதாக, அதானி நிறுவனம் விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி போன்ற வணிக பயன்பாடு மேற்பாட்டிற்கு மட்டுமே ஏலத்தில் பங்கேற்பதாக தெரிவித்தது. வாடிக்கையாளர் சேவைக்கு இல்லை எனத் தெரிவித்தது.

ஏலம் எடுக்க நிறுவனங்களிடம் போட்டி

ஒரே ஒரு ஸ்பெக்ட்ரம் பேண்ட், 1800 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றை மட்டும் அடிப்படை விலையில் இருந்து அதிகம் ஏலம் எடுக்கப்பட்டது. மற்ற அனைத்தும் அடிப்படை விலையில் ஏலம் எடுக்கப்பட்டது.

அடுத்து என்ன?

ஏலம் நிறைவடைந்த நிலையில், அலைக்கற்றைகளை நிறுவனங்களுக்கு ஆகஸ்ட்10க்குள் ஒதுக்கப்படும். செப்டம்பர் மாதத்தில் 5ஜி சேவை வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment