Advertisment

ரஷ்ய எண்ணெய்-க்கு தடை: இந்தியா, அமெரிக்காவுக்கு என்ன பாதிப்பு?

14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை; ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதித்த பிடன்; இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பாவுக்கான பாதிப்புகள் என்னென்ன?

author-image
WebDesk
New Update
ரஷ்ய எண்ணெய்-க்கு தடை: இந்தியா, அமெரிக்காவுக்கு என்ன பாதிப்பு?

Karunjit Singh

Advertisment

Explained: Biden’s ban on Russian oil imports, impact on US, Europe and India: "ரஷ்யாவின் பொருளாதாரத்தின் இதயத்தைத்" தாக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறிய முயற்சியாக, ரஷ்யாவின் அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் எரிசக்தி இறக்குமதிகளையும் அமெரிக்கா செவ்வாயன்று தடை செய்துள்ளது. இதேபோல், 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக நிறுத்தும் திட்டத்தை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

இந்த தடை எதைக் குறிக்கிறது?

இந்த தடை ரஷ்ய கச்சா எண்ணெய், சில பெட்ரோலிய பொருட்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகியவற்றை புதிதாக வாங்குவதைத் தடுக்கிறது, மேலும் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள கொள்முதல்களின் விநியோகத்தை நிறுத்துகிறது, என்று பிடன் நிர்வாகத்தின் ஒரு மூத்த அதிகாரி கூறினார்.

ரஷ்யாவின் எரிசக்தி துறையில் அமெரிக்காவின் புதிய முதலீடுகளும் இந்த தடையின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், ரஷ்ய கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் மற்ற நாடுகளின் திறனை இந்த தடை பாதிக்காது. இறக்குமதி தடை குறித்த தனது அறிவிப்பின் போது, ​​அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன், ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து இறக்குமதி தடை முடிவு செய்யப்பட்டாலும், அமெரிக்கா அவர்களை எதிர்பார்க்கவில்லை அல்லது இறக்குமதி தடையில் சேருமாறு கேட்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

மேலும், “எங்கள் வலுவான உள்நாட்டு எரிசக்தி உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்பு காரணமாக அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுக்க முடிகிறது. எங்களுடைய அனைத்து நட்பு நாடுகளும் கூட்டணி நாடுகளும் தற்போது எங்களுடன் (இந்த தடையில்) சேரும் நிலையில் இல்லை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், ”என்றும் பிடன் கூறினார்.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்ய எண்ணெயை எவ்வளவு நம்பியுள்ளன?

அமெரிக்கா உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளர் மற்றும் கச்சா எண்ணெய் நிகர ஏற்றுமதியாளர். 2021 ஆம் ஆண்டில், ரஷ்ய கச்சா எண்ணெய் அமெரிக்க எண்ணெய் இறக்குமதியில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்டிருந்தது, ஆனால் ஐரோப்பாவின் எண்ணெய் இறக்குமதியில் ரஷ்ய கச்சா எண்ணெய்யின் அளவு சுமார் 30 சதவீதம் ஆகும்.

ஐரோப்பிய நாடுகள் இயற்கை எரிவாயு இறக்குமதிக்கு குறிப்பாக ரஷ்யாவை நம்பியுள்ளன. 2021 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து 155 பில்லியன் கன மீட்டர் இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்தது, இது ஐரோப்பிய ஒன்றிய எரிவாயு இறக்குமதியில் 45% மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த எரிவாயு நுகர்வில் கிட்டத்தட்ட 40% ஆகும்.

இந்த தடை உத்தரவு கச்சா எண்ணெய் விலையை எப்படி பாதிக்கும்?

ஏற்கனவே 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருந்தாலும், ரஷ்ய கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் வரை, பெரிய பாதிப்பு இருக்காது என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் உக்ரைன் மீது இராணுவ தாக்குதல்களை அறிவித்ததில் இருந்து 34 சதவீதம் அதிகரித்து, புதன்கிழமை (காலை 10.30 மணி IST) ப்ரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு $130.8 என்ற விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.

"எண்ணெய் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நேர்த்தியான சமநிலையான உலகளாவிய பண்டமாகும். விநியோகம் சார்ந்த எந்தவொரு இடையூறும் விலையில் சமமற்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ரஷ்ய கச்சா சப்ளைகள் தொடரும் வரை, இந்த தடை அமெரிக்காவிடமிருந்து வரும் ஒரு அடையாள நடவடிக்கையாகும்,” என்று டெலாய்ட் இந்தியாவின் பங்குதாரரான தேபாசிஷ் மிஸ்ரா கூறினார்.

இதையும் படியுங்கள்: மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் விமானப் போக்குவரத்துத் தொழிலை எவ்வாறு பாதித்தன?

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் ரஷ்ய கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ஏற்கனவே ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய கச்சா எண்ணெய் விற்பனையாளர்கள் வாங்குபவர்களைக் கண்டுபிடிக்க சிரமப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர், வாங்குபவர்களில் பலர் ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதால் நற்பெயருக்கு ஏற்படும் சேதம் குறித்து கவலைப்படுகிறார்கள், இப்போது பொருளாதாரத் தடைகள் காரணமாக கச்சா எண்ணெய் அதிக தள்ளுபடியில் வழங்கப்படுகிறது.

அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை இந்திய நுகர்வோரை எவ்வாறு பாதிக்கப் போகிறது?

நவம்பர் தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) மாற்றியமைக்காததால், இந்திய நுகர்வோர்கள் எரிபொருள் விலை உயர்விலிருந்து நான்கு மாத கால அவகாசத்தை அனுபவித்து வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையில் கூர்மையான உயர்வு ஏற்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் சர்வதேச அளவுகோல்களுக்கு ஏற்ப விலைகளைக் கொண்டு வருவதையும் இழப்பை ஈடுகட்டுவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பதால், இந்திய நுகர்வோர்கள் இந்த வாரம் முதல் எரிபொருள் விலையில் நிலையான அதிகரிப்பைக் காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

OMC மார்க்கெட்டிங் மார்ஜின்கள் மாறாமல் இருக்க கச்சா எண்ணெய் விலையில் ஒவ்வொரு டாலருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 52 பைசா உயர்த்தப்பட வேண்டும். கடந்த நவம்பரில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டதில் இருந்து கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு சுமார் 50 டாலர்கள் உயர்ந்துள்ளது.

தேசிய தலைநகரில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.95.41 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.86.67 ஆகவும் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Petrol Diesel Rate Ukraine Russia America Crude Oil Prices
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment