Advertisment

பள்ளிக் கட்டணம் முதல் இன்சூரன்ஸ் பிரிமியம் வரை ஐ.டி கண்காணிப்பில் : புதிய அறிவிப்பு பின்னணி

இந்நாட்டில் வரி கட்டும் நபர்கள் மிகவும் குறைவு தான். ஆனால் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 கோடி வரை அதிகரித்துள்ளது.

author-image
WebDesk
New Update
பள்ளிக் கட்டணம் முதல் இன்சூரன்ஸ் பிரிமியம் வரை ஐ.டி கண்காணிப்பில் : புதிய அறிவிப்பு பின்னணி

 Aanchal Magazine

Advertisment

Explained: What expanded list of transaction under new tax regime means : அறிக்கையாக்க தக்க நிதி பரிவர்த்தனைகள் அனைத்தையும் எஸ்.எஃப்.டிக்கு கீழ் விரிவுப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் உணவக கட்டணம் ரூ. 20 ஆயிரம், ஆயுள் காப்பீடு திட்டம் ரூ. 50 ஆயிரம், மருத்துவ காப்பீட்டு ப்ரீமியம் ரூ. 20 ஆயிரம், 1 லட்சத்திற்கும் மேல் கல்லூரி மற்றும் பள்ளி கட்டணம் செலுத்தும் நபர்களின் பண பரிவர்த்தனைகள் அனைத்தும் வருமான வரித்துறையினரால் கண்காணிக்கப்படும்.  ஒளிமறைவற்ற வரி விதிப்பு - நேர்மையாக வரி செலுத்துவோருக்கு கௌரவம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரே நாளில் இந்த அறிவிப்பை பிரதமர் அறிவித்துள்ளார்.

எந்தெந்த பரிவர்த்தனைகள் இதன் கீழ் இணைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது?

ஆண்டுக்கு கல்வி கட்டணம் (டொனேசன் உட்பட) ரூ. 1 லட்சம்

உணவக கட்டணம் ரூ. 20,000

நகைகள், வெள்ளை பொருட்கள், மார்பிள்கள், ஓவியங்கள் ஆகியவற்றை ரூ. 1 லட்சத்திற்கு வாங்குதல்

வாழ்நாள் காப்பீட்டு திட்டம் ரூ. 50,000

ஆண்டுக்கு சொத்து வரி ரூ. 20,000

ஆண்டுக்கு மின்சார கட்டணம் ரூ. 1 லட்சத்திற்கு மேல்

மருத்துவ காப்பீட்டு திட்டம் ஆண்டுக்கு மேல் ரூ. 20, 000

கரண்ட் அக்கௌண்ட்டில் ரூ. 50 லட்சத்திற்கும் மேல் டெபாசிட் மற்றும் கிரெட்டிட்

நான்-கரண்ட் கணக்கில் ரூ. 25 லட்சத்திற்கும் மேல் பற்று / செலவு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிசினஸ் க்ளாஸ் விமான போக்குவரத்து

பரிவர்த்தனை/டிமெட் கணக்குகள் மற்றும் வங்கி லாக்கர்கள்

30 லட்சத்திற்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்பவர்கள், வீட்டு வாடகை ரூ. 40,000க்கும் மேல் செலுத்தும் நபர்கள் மற்றும் ரூ. 50 லட்சம் ஆண்டு வருமானம் பெரும் அனைவரும் கட்டயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும் என்ற ப்ரோபசலையும் முன் வைத்திருக்கிறது மத்திய அரசு.

தற்போது நடைமுறையில் இருக்கும் பரிவர்த்தனை முறைகள் (Reportable transactions)

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் எஸ்.எஃப்.டியில் பதிவிடப்பட்ட அதிகப்படியான பண பரிவர்த்தனை முறைகளை வரி அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ளும்.  ஜூலை மாதம், அரசு திருத்தப்பட்ட படிவம் 26AS-ஐ அறிமுகம் செய்தது. இந்த மதிப்பீட்டு ஆண்டிலிருந்து எஸ்.எஃப்.டி.களிடமிருந்து அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் தகவல்களும் இடம் பெற்றிருந்தன, இப்போது வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்யும் போது வரி செலுத்துவோருக்கு இவை இனி நேரடியாகத் தெரியும். வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தங்கள் SFTகளில், ஒரு வருடத்தில் ரூ .10 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை உள்ளடக்கிய பரிவர்த்தனைகளின் விவரங்களை பதிவு செய்கின்றன. மேலும் ரூ. 1 லட்சத்திற்கு மேல் ஒருவர் மற்றொருவருக்கு பணபரிவர்த்தனை மேற்கொண்ஆலும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் பில் செலுத்தினாலோ அதனையும் பதிவு செய்யும்

மேலும், பத்திர / கடனீடுகள், பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், ஒரு நிதியாண்டில் ரூ .10 லட்சத்துக்கு மேல் பங்குகளை வாங்குதல், ரூ .30 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட அசையா சொத்துக்களை ஒரு நபர் வாங்குவது அல்லது விற்பனை ஆகியவையும் எஸ்.எஃப்.டி.களில் பதிவு செய்யப்படுகிறது.

இந்த நடவடிக்கைகள் வரி தளத்தை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டவை என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் வரி செலுத்துபவர்கள் இதனை வரித்துறையினருக்கு மேம்படுத்தப்பட்ட தகவல்களை வழங்கும் ஒன்றாக தான் கருதுகிறார்கள். இவை செயல்பாட்டிற்கு வரும் போது, ஃபார்ம் 26ஏஎஸ்-லும் மாற்றத்தை கொண்டு வரும். அதில் வரி விலக்கு, வசூல், பான் கார்டுகள் மூலம் முன்கூட்டியே வரி கட்டுவது ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த மாற்றம் தன்னார்வ முறையில் இயங்க பொறுப்புகளை உருவாக்கும்.

பிரதமர் மோடி வியாழக்கிழமை பேசிய போது, இந்நாட்டில் வரி கட்டும் நபர்கள் மிகவும் குறைவு தான். ஆனால் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 2.5 கோடி வரை அதிகரித்துள்ளது. 1.5 கோடி மக்கள் மட்டுமே இந்தியாவில் வருமான வரி கட்டுகின்றனர். எனவே மக்கள் முன் வந்து வருமான வரி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Income Tax
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment