Advertisment

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்கும் மாநிலங்கள் எவை? நிபந்தனைகள் என்ன?

Explained: Which states are allowing vaccinated travellers, the conditions: ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா மற்றும் சண்டிகரில் தடுப்பூசி செலுத்திய பிற மாநிலத்தவருக்கு அனுமதி

author-image
WebDesk
New Update
தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை அனுமதிக்கும் மாநிலங்கள் எவை? நிபந்தனைகள் என்ன?

குறைந்தது ஏழு இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தடுப்பூசி செலுத்திக் கொண்ட விமான பயணிகளை தங்கள் மாநிலப் பகுதிகளுக்குள் அனுமதிக்கின்றனர். முன்னர் கொரோனாவை கண்டறியும் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையில் நெகட்டிவ் என சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே இந்த மாநிலங்களின் எல்லைகளுக்குள் வரமுடியும். இருப்பினும், இந்த தளர்வுகள் அதிகமாக இல்லை மற்றும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.

Advertisment

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை எந்தெந்த மாநிலங்கள் அல்லது யூனியன் பிரதேசங்கள் அனுமதிக்கின்றன? நிபந்தனைகள் என்ன?

ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், மேகாலயா, நாகாலாந்து, ஒடிசா மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகர் ஆகியவை தடுப்பூசி போட்ட பயணிகளை ஆர்டி-பிசிஆர் சான்றிதழ் தேவையிலிருந்து விலக்க அனுமதித்துள்ளன.

இருப்பினும், ராஜஸ்தானைப் பொறுத்தவரையில், இறுதி தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே (இரண்டு அளவுகளுடன்), மற்றும் இரண்டாவது டோஸ் முடிந்த 28 நாட்களுக்குப் பிறகு ஆர்டி-பி.சி.ஆர் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள்.

பஞ்சாபைப் பொறுத்தவரை, பயணிகள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி சான்றிதழை வைத்திருக்க வேண்டும், தடுப்பூசி செலுத்திய இரண்டு வாரங்களுக்கு பின் அனுமதி அளிக்கப்படும். சண்டிகரும் இதே நிபந்தனைகளை முன் வைக்கின்றன.

ஒடிசா மற்றும் நாகாலாந்தைப் பொறுத்தவரை, பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் தேவையிலிருந்து விலக்கு அளிக்க இறுதி தடுப்பூசி சான்றிதழ் (இரண்டு அளவுகளுடன்) தேவை. மேகாலயாவைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா மற்றும் கேரளா தவிர வேறு எந்த மாநிலத்திலிருந்தும் வரும் பயணிகளுக்கும் தடுப்பூசி இறுதி சான்றிதழ் இருந்தால் ஆர்டி-பி.சி.ஆர் தேவையிலிருந்து விலக்கு அளிக்கப்படும். பல்வேறு மாநிலத் தேவைகள் பற்றிய தகவல்கள் இண்டிகோவால் தொகுக்கப்பட்டன, இது ஜூன் 13 நிலவரப்படி உள்ளது.

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் ஏதேனும் உள்ளதா?

தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு ஆர்டி-பி.சி.ஆர் தேவைகளிலிருந்து விலக்கு அளிப்பதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக அறியப்படுகிறது. ஆனால் அரசாங்க அதிகாரிகள் இந்த விதிமுறைகளிலிருந்து பயணிகளுக்கு விலக்கு அளிக்கும் முடிவு இறுதியில் அந்தந்த மாநில அரசுகளிடம் உள்ளது என்று கூறியுள்ளனர்.

உள்நாட்டு விமானச் சேவைக்கு இது எவ்வாறு உதவும்?

தொழில்துறை மீட்பு என்பது பிற காரணிகளுக்கிடையில், மக்கள் தடுப்பூசி போடுவதைப் பொறுத்தது என்று விமான அதிகாரிகள் பெரும்பாலும் சுட்டிக்காட்டியுள்ளனர். ஜூன் 7 ம் தேதி நடைபெற்ற இண்டிகோ வருவாய் அழைப்பில், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய் தத்தா கூறினார்: “கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் போக்கு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகளின் அதிகரித்த வேகத்துடன், ஜூலை தொடக்கத்தில் பயணிகளிடம் நம்பிக்கை அதிகரித்து, விமான போக்குவரத்து மேலும் வேகத்தை அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்”. ஜூன் 12 அன்று, உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் தினசரி பயணிகளின் எண்ணிக்கை மே மாதத்திலிருந்து முதல் முறையாக 1 லட்சத்தை தாண்டியது, இது பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதைக் குறிக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Corona Corona Vaccine Flight
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment