Advertisment

காருக்குள் முகக் கவசம்: ஏன் கட்டாயம்? என்ன தண்டனை?

பொது இடங்களில் அனுமதிக்கப்படாத எந்தவொரு செயலும், தனி நபர்  வாகனத்துக்குள் இயல்பாக தடைபடுகிறது.

author-image
WebDesk
New Update
காருக்குள் முகக் கவசம்: ஏன் கட்டாயம்? என்ன தண்டனை?

ஒருவர் தனக்கு சொந்தமான காரில் பயணிக்கும் போது, முகக்கவச உறை அணியாதிருந்தால் அபராதத் தொகை ரூ .500 விதிக்கப்படும் என்று பல்வேறு மாநில அரசுகளும் தங்கள் கோவிட்- 19 வழிமுறைகளில் தெரிவித்தன. பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்று கார் ஓட்டுனர்களிடம் காவல்துறை அபாராதத் தொகை வசூலித்து வருவது குறித்து சில விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

Advertisment

பொது இடங்களில் மட்டுமே முகக்கவசங்கள் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிகின்றனர். இருப்பினும், இந்த சர்ச்சைக்குரிய விதிக்கான சட்ட வடிவம் 2019 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிலிருந்து வருகிறது.

விதி என்ன கூறுகிறது?

கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்க, பஞ்சாப், குஜராத் போன்ற பல மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகமும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் முகக்கவச உறை அணிந்து முகத்தை மூடிக் கொள்வது கட்டாயம் என்ற வழிமுறைகளை வெளியிட்டன.

இத்தகைய வழிமுறைகளை மீறுபவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்ட பிரிவு 188 ன் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது. இச்சட்டப் பிரிவு, அரசு ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவுக்கு கீழ்ப்படியாதது தொடர்பானவை. இதன் கீழ், ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

தனி மனிதருக்கு சொந்தமான காரை எவ்வாறு பொது இடமாக கருத முடியும்?

ஜூலை 1, 2019 அன்று, பொது சாலையில் உள்ள தனிநபர் வாகனம் "பொது இடம்" என்ற வரையறைக்குள் வரும் என்று சத்வீந்தர் சிங்  vs பீகார் மாநிலம் என்ற வழக்கின் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் பல மாநிலங்கள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அமர்வு ,"பொது சாலையில் உள்ள ஒரு  தனிநபர் வாகனத்தை பொது இடமாக வரையறுக்கலாம் என்று  கருத்து தெரிவித்தது. மேலும், பொது இடங்களில் அனுமதிக்கப்படாத எந்தவொரு செயலும், தனி நபர்  வாகனத்துக்குள் இயல்பாக தடைபடுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல் , ஆபாச நடவடிக்கைகள்  பொது சாலைஉயில் உள்ள தனிநபருக்கு சொந்தமான  வாகனத்திற்குள் நடைபெற்றால் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

என்ன வழக்கு?

2018  வருட  பாட்னா உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை  உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

ஜார்கண்டில் இருந்து பீகாருக்கு சென்று கொண்டிருந்த மனுதாரர்களின் காரை,  பீகார் எல்லையோர மாவட்டமான நவாதா- வில் போலீசார் வாகன சோதனை செய்தனர். காரில் எந்த மதுபான பாட்டில்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், ஆல்கஹால் மூச்சு பரிசோதனையில் அவர்கள் மது அருந்தியிருப்பது கண்டறியப்பட்டது.

குற்றத்தை விசாரித்த மாவட்ட நீதிபதி, அவர்களை கைது செய்து 2 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் ,  பாட்னா உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்தது.

பொது இடங்களில் மது அருந்துவது  குற்றம் என்று பீகாரின் மதுவிலக்குச் சட்டம் கூறுவதால்,குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயணிக்கும் கார் ஒரு பொது இடமாக அமைகிறது என்றும், கார் ஒரு பொது இடத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

அடிப்படை உரிமை ரீதியாகவோ அல்லது வேறு விதமாகவோ பொது  மக்களுக்கு அணுகல் உள்ள எந்தவொரு இடமும், பொதுமக்கள்  சென்று வந்த அனைத்து இடங்களும், அரசு மற்றும் தனியார் போக்குவரத்துக்கான எந்தவொரு திறந்தவெளியும் 'பொது இடங்களாக' வரையறுக்கப்படும் என்று பீகார் மதுவிலக்கச் சட்டம் தெரிவிக்கிறது.

"தனியார் வாகனத்தை அணுகவதை பொதுமக்கள் தங்கள் உரிமையாக கொள்ள  முடியாது என்பது உண்மைதான். இருப்பினும், பொது சாலையில்  உள்ள ஒரு தனியார் வாகனத்தை பொதுமக்கள் அணுக நிச்சயமாக வாய்ப்பு உள்ளது" என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment