Advertisment

2 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்… முடிவில்லா கொரோனா வைரஸ்

தடுப்பூசி பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாதிப்புக்கு சிகிச்சையளிப்பதிலும் புதிய முறைகள் அறிமுகமாகியுள்ளன. அதே சமயம், வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது. ஒமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும், மிகுந்த எச்சரிக்கையுடன் சிகிச்சையளிக்கப்பட வேண்டும்.

author-image
WebDesk
New Update
2 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்… முடிவில்லா கொரோனா வைரஸ்

கொரோனா தொற்றின் கோரத் தாண்டவம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தும் முடிந்தப்பாடில்லை. மனிதர்களின் உயிரை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது. குறிப்பாக, அச்சம், பதட்டம், பொருளாதார வீழ்ச்சி, கற்றல் திறன் போன்றவற்றை உருவாக்கியுள்ளது. இந்த தொற்று, நீண்ட கால தாக்கங்கள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கொரோனாவை தடுத்திட கடந்த ஓராண்டுக்குள் ஏரளாமான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. ஆனால், ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று தொடர்ந்து உருமாற்றம் அடைந்து ஆல்பா, பீட்டா, காமா என புதிய வைரஸ்கள் தோன்றிய வண்ணமே உள்ளது. கொரோனா உருமாற்றம் அடையுமா என்ற பயத்தில் மக்கள் இருந்தபோதுதான், அதிக தீவிரத்தன்மை கொண்ட கொரோனாவின் உருமாற்றம் டெல்டா, உலக நாடுகளில் பரவ தொடங்கியது. மூச்சு திணறல் ஏற்படுத்தி கொத்து கொத்தாக மக்களின் உயிரை பறித்த டெல்டாவை கட்டுப்படுத்திவிட்டோம் என மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில் தான், அதைவிட அதிவேக பரவல் கொண்ட ஒமிக்ரான் கொரோனா கால் பதித்தது. தென்னாப்பிரிக்காவில் முதலில் தென்பட்ட ஒமிக்ரான், அதிவேகமாக ஐரோப்பா, அமெரிக்காவில் ஊடுருவி, அனைத்து நாடுகளுக்கும் பரவ தொடங்கியது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தொற்றுநோயின் மற்றொரு பெரிய எழுச்சியை தற்போது சந்திக்கிறோம். வைரஸைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொண்டோம்? தொற்றுநோயை சமாளிக்க தயாராக உள்ளோமா?

தடுப்பூசிகள்

வைரஸை தடுத்திட ஒரு ஆண்டிற்குள் தடுப்பூசியை வெற்றிகரமாக தயாரித்தது, அறிவியல் வரலாற்றில் முக்கிய சாதனையாகும். உலகளவில் 20 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. சுமார் 9.3 பில்லியன் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது உலகிலேயே இதுவரை இல்லாத மிகப்பெரிய தடுப்பூசி இயக்கமாகும். ஆனால் இந்த சாதனை நவீன உலகில் உள்ள இருண்ட பக்கங்களையும் வெளிகொண்டுவந்துள்ளது. பல பணக்கார நாடுகளில் மக்கள்தொகையில் 80% க்கும் அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி பெற்றிருந்தாலும், சில ஏழை நாடுகளில் 80% க்கும் அதிகமான மக்கள் தடுப்பூசி போடப்படாமல் உள்ளனர்.

பாதிப்பு விதிகம் அதிகரிப்பு, தடுப்பூசி பாதுகாப்பு குறைப்பாடு, மோசமான சுகாதார உட்கட்டமைப்பு ஆகியவை, வைரஸ் அதிகளவில் உருவாற்றம் அடைந்து ஏழை நாடுகளில் கண்டறியப்படாமல் சுதந்திரமாக உள்ளது.

குழந்தைகள் தடுப்பூசி

குழந்தைகளுக்கு தடுப்பூசிக்கு செலுத்துவது நீண்டகாலம் விவாதிக்கவேண்டிய விஷயம் கிடையாது. தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானவை என நிரூபிக்கப்பட்டு உலகளவில் கட்டுப்பாட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 2021 நடுபாதியிலே தடுப்பூசி நிறுவனங்கள் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகள் உட்பட அனைத்து குழுக்களின் குழந்தைகளிலும் பாதுகாப்பான வீரியம் மற்றும் செயல்திறன் சோதனைகளைத் தொடங்கின.

மேற்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமின்றி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல நாடுகளிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது நோய்த்தடுப்பு திட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியுள்ளது.

கியூபா ஏற்கனவே இரண்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசியை செலுத்தி வருகிறது. சீனாவில், மூன்று வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா பொறுத்தவரை, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கும் பள்ளிகளைத் திறப்பதற்கும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியமாகும்.

பூஸ்டர் விவாதம்

ஒமிக்ரான் எழுச்சியடைந்த சமயத்தில், முழுமையாக டோஸ் செலுத்தியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவையா என்ற விவாதமும் அதிகரித்தது. ஆனால், இது புதிய விவாதம் அல்ல. தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதுமே, பல தடுப்பூசி உற்பத்தியாளர்கள் ஏப்ரல்-மே 2021 இல் மிக்ஸ் அண்ட் மேட்ச் பூஸ்டர் சோதனைகளைத் தொடங்கின. ஏனென்றால், தடுப்பூசிகளால் உருவான ஆன்டிபாடி அளவுகள், 6 முதல் 9 மாதங்களில் குறைவதை பல ஆய்வக முடிவுகள் காட்டின. இது, அவர்கள் தொற்றால் பாதிப்படைய வழிவகுக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

டெல்டா மற்றும் ஒமிக்ரான் போன்ற வைரஸ் மாறுபாடுகள் தடுப்பூசி போடப்பட்ட நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி பாதிப்பை ஏற்படுத்தினாலும், தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் கடுமையான நோய் மற்றும் இறப்புக்கு எதிராக செயல்படுவது குறிப்பிடத்தக்கது

2021 ஆகஸ்டில், உலகளவில் தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்படாத நிலையில், உலக சுகாசார அமைப்பின் அட்வைஸூக்கு எதிராக பல பணக்கார நாடுகளில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது.

தற்போது, தொற்றுநோய் மிகப்பெரிய எழுச்சியை எட்டியதை தொடர்ந்து, தடுப்பூசிகள் எளிதில் கிடைக்கக்கூடிய நாடுகளில் பூஸ்டர் டோஸ்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோவிட்-19 தடுப்பூசியில் முன்னணியில் உள்ள இஸ்ரேல், முன்னணி சுகாதாரப் பணியாளர்களுக்கு நான்காவது டோஸ் பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா சமீபத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பூஸ்டர்களுக்கான ஃபைசர் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.

பல நாடுகளில் பூஸ்டர் டோஸ்கள் இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவும் பூஸ்டர் தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

உருமாறும் வைரஸ்

ஒமிக்ரான் தொற்றின் அறிகுறியும், பாதிப்பும் லேசானது முதல் மிதமானது என பல தரவுகள் கூறுகின்றன. அதே சமயம், ஒமிக்ரானின் அதிவேக பரவல், பல நாடுகளில் சுகாதார கட்டமைப்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஒமிக்ரான் சாதாரண சளி போன்றுதான் எனவும் விட்டுவிட முடியாது. எதற்கும், தொற்றுநோயின் மிகத் தீவிரமான அலையைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். வைரஸூன் பல உருமாற்றங்கள், கொரோனா போர் முடிவுக்கு வரவில்லை என்பதை காட்டுகிறது.

தற்போதைய நிலை

தடுப்பூசி கிடைப்பதில் உள்ள உலகளாவிய சமத்துவமின்மை பிரச்சினையானது, பாதுகாப்பான, செலவு குறைந்த, நிலையான மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்ய எளிதான பல புதிய புரத அடிப்படையிலான தடுப்பூசிகள் கிடைப்பதன் மூலம் விரைவில் தீர்க்கப்படலாம்.

இந்தியாவில் உள்ள இரண்டு நிறுவனங்கள் விரைவில் மில்லியன் கணக்கான தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதால், இடைவெளியைக் குறைப்பதில் இந்தியா முக்கியப் பங்காற்ற முடியும்.

இவை பூஸ்டர் தடுப்பூசிகளாகவும் சிறந்த தேர்வாக இருக்க வேண்டும், குறிப்பாக இந்தியாவில் பெரியவர்களுக்கான தடுப்பூசி திட்டத்தின் முக்கிய அம்சமான கோவிஷீல்ட் போன்ற வைரஸ் வெக்டார்-அடிப்படையிலான தடுப்பூசிகள் போடுவதை ஆதரிக்கிறது.

தொடர்ந்து, மோல்னுபிரிவிர் (மெர்க்) மற்றும் பாக்ஸ்லோவிட் (ஃபைசர்) ஆகிய இரண்டு புதிய சிகிச்சை மாத்திரைகளின் ஒப்புதல், கடுமையான நோய் மற்றும் இறப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற கூடுதல் கருவியாக இருக்கும்.

இந்த வாய்வழி சிகிச்சைகள் ஏழை நாடுகளில் எளிதில் மலிவு விலையில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.. இந்திய மருந்து நிறுவனங்கள் இந்த மருந்துகளை உரிய உரிமத்தின் கீழ் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளன.

தற்போது, பலருக்கும் மனதில் இருக்கும் ஒரே கேள்வி கொரோனா மீண்டும் உருமாற்றம் அடையுமா என்பது தான். அனைத்து வைரஸ்களிலும் உருமாற்றம் அடையும் பிறழ்வுகள் இயல்பாகவே உள்ளன. சுற்றுச்சுழலில் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும் பட்சத்தில், வைரஸ் உருமாற்றம் அடைகிறது.

ஆரம்ப மூன்று வகைகளில், ஆல்பா மிகவும் பரவக்கூடியதாக இருந்தது, அதே நேரத்தில் பீட்டா மற்றும் காமா ஆகியவை வாங்கிய நோய் எதிர்ப்பு சக்தியை ஓரளவு தவிர்க்க்கூடிய நிலையில் இருந்தது.

ஒமிக்ரான், டெல்டாவை விட அதிகமாக பரவக்கூடியது என்றாலும், அதிர்ஷ்டவசமாக மிகவும் லேசான நோயையும், குறைவான அளவிலே மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் காட்டுகிறது. இந்த நிலைமை நீடித்தால், ஒமிக்ரான் அதிவேக பரவல் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தினாலும், சில உயிர்களை இழக்க நேரிடும் என்றாலும், பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

தடுப்பூசி மற்றும் கோவிட் வழிகாட்டு நெறிமுறை உட்பட வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் முறையாக தொடர வேண்டும்.

உலகின் பெரும் பகுதியினர் தடுப்பூசி போடப்படாமல் இருந்தால், தொற்றுநோயைத் தடுப்பதற்கான மனித முயற்சிகளை எதிர்கொள்வதற்கு வைரஸூக்கு எளிதான வாய்ப்பு கிடைத்திடும்.

தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து அறிவியல் கருவிகள் வளங்கள் நிறைந்த நாடுகளில் மட்டுமல்லாது, உலகில் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன என்பதை உறுதிப்படுத்துவது மனித கைகளில் தான் உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 Vaccine Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment