Advertisment

இலங்கை கடற்படைக்கும், இந்திய மீனவர்களுக்கும் மோதல் போக்கு ஏன்?

Fishermen issue in TamilNadu politics : ஏறக்குறைய, 30 ஆண்டுகால ஈழப்போரில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மிகக் குறைவு

author-image
WebDesk
New Update
இலங்கை கடற்படைக்கும், இந்திய மீனவர்களுக்கும் மோதல் போக்கு ஏன்?

Arun Janardhanan

Advertisment

Conflict between Lankan navy and Indian fishermen?: காணாமல் போன நான்கு மீனவர்கள் இலங்கையில் கரை ஒதுங்கிய சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் 200க்கும் மேற்பட்ட மீனவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் இந்திய மீனவர்களுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான நீண்டகால மோதல் போக்கை வெளிபடுத்துகிறது.

அதிக எண்ணிகையிலான தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் நாட்டம் செலுத்துவதும், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மன்னார் வளைகுடாவில் மீன்வளங்கள் குறைந்து வருவதும் மோதலுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

அண்மையில் என்ன நடந்தது?

புதுக்கோட்டை மாவட்டம், மணல்மேல்குடி வட்டம், கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து  மீன் பிடிக்க கடந்த 18ம் தேதி மட்டும் 200 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும் மட்டும் மறுநாள் கடற்கரைக்கு திரும்பவில்லை. இதற்கிடையே, இலங்கையில் மீட்கப்பட்ட உடல்கள் காணாமல் போன நான்கு மீனவர்களின் உடல்கள் என்றும், இலங்கை கடற்படையின் தாக்குதலால் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
உடல்களை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும், அவர்களின் குடும்பதாருக்கு ரூ .15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், அரசுப் பணி வழங்கிட வேண்டும், இலங்கை கடற்படை மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை மீனவ சமூக மக்கள் முன்வைகின்றனர்.

மோதல் போக்கின் அடிப்படை காரணங்கள் என்ன? 

ராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றிய கரைப்பகுதி மீனவர்கள், இலங்கையில் கடல் வளங்களுக்கு புகழ்பெற்ற தலைமன்னார் மற்றும் கச்சதீவு கடற்கரை பகுதிகளை நோக்கி பயணிப்பது வழக்கம். இந்த கடல் பிராந்தியத்தில் மீன் வளங்கள் அதிகமாக இருந்த காரணத்தினால், கடந்த மூன்று தசாப்தங்களாக மீன்பிடி தொழிலில் இறங்கும் மீனவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் போது, அதன் கடற்கரைப் பகுதியை அணுகுவது எளிதாக இருந்த காரணமும் இத்தகைய சூழலுக்கு வழி வகுத்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு அதிக ஆர்வம் காட்டியதன் விளைவாக, அதன் வடக்கு மாகாண கடல் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பை  தீவிரப்படுத்தப்படவில்லை. இதன் காரணமாக, இந்திய விசைப்படகுகள் தொடர்ந்து இலங்கை கடற்பகுதிக்குள் மீன் பிடிக்கத் தொடங்கினர். ஏறக்குறைய, 30 ஆண்டுகால ஈழப்போரில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் மிகக் குறைவு. வன்முறைப் போராட்டங்கள், ஆயுத தாக்குதல்கள் காரணமாக  இலங்கையில் உள்ள ஏழை தமிழ் மீனவர்கள் மீன் பிடித்தொழிலில் பின்வாங்கியதும் கூட இந்திய விசைப்படகு மீனவர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கி கொடுத்தது.  இலங்கை கடற்படையும், விடுதலைப் புலிகளும் தங்களுடன் எவ்வாறு நட்பு பாராட்டினார்கள்    என்பதையும், ஆழ்கடலில் எதிரிகளின் நடமாட்டம் குறித்து தாங்கள் எவ்வாறு  உலவளியாகிய பயன்படுத்தப்பட்டோம் என்பதையும் ராமேஸ்வர மீனவர்கள் அவ்வப்போது நினைவு கூறுகின்றனர்.

2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அதன்பிறகு தான், இலங்கை கடற்பகுதிக்குள் நுழையும் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் சம்பவம் அதிகரிக்கத் தொடங்கியது.

இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய மீனவர்கள் நுழைகின்றனர் என்ற குற்றச்சாட்டு  முன்வைக்கப்பட்டாலும், பல நூற்றாண்டுகளாக தமிழக  மீனவர்கள் மீன்பிடித்து வந்த கச்சத்தீவு உரிமை  தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

1974 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கை இடையே உள்ள பாக் நீரிணையில் அமைந்துள்ள, இந்தியாவுக்கு உரிமையான கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியது. தமிழக அரசிடம் கலந்து ஆலோசிக்காமல் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மற்றும் இலங்கை பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்காவும் கையொப்பமிட்டு 8, சூலை 1974 ஆண்டு முதல் செயலுக்கு வந்தது கச்சத்தீவு ஒப்பந்தம்.

கச்சத்தீவு ஒப்பந்தப்படி, இந்திய மீனவர்கள் கச்சத்தீவில் மீன்பிடி வலைகளை உலர்த்திக் கொள்ளலாம் என்றும் அங்குள்ள புனித்அந்தோணியார் கோயில் திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்கலாம் என்ற இரண்டு உரிமைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இது பாரம்பரிய மீன்பிடி உரிமையை உறுதிப்படுத்தவில்லை.

அதிகரிக்கும் இயந்திரப் படகுகளின் பயன்பாடு ?  

இலங்கையில் உள்ள மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் இருந்து செல்லும் மீனவர்கள் தீவிர மீன்பிடி கருவி கொண்ட இயந்திரப் படகுகளை பயன்படுத்துகின்றனர்.

ஒவ்வொரு விசைப்படகும் மீன் வளங்களைத் தேடி 18 கி.மீ தூரம் தலைமன்னார் மற்றும் கச்சத்தீவு கடற்பகுதியை  நோக்கி பயணிக்கிறது. இலங்கை கடல் வளங்கள் சுருங்கி வருவதாலும், கட்டுப்பாடுகள் அதிகரித்து வருவதாலும்  அண்மை காலங்களில் மீனபிடி தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. ஒவ்வொரு பயணத்தின் போதும், விசைப்படகு ஒன்றிற்கு சுமார் 40,000 ரூபாய் வரை  செலவாகும். பிடிப்பைப் பொறுத்து லாபத்தின் மதிப்பு  5,000 முதல் 30,000 வரை மாறுபடும். லாபத்தை அதிகரிக்க  ராமேஸ்வரம் மற்றும் அதனைச் சுற்றிய கடற்கரை பகுதி  மீனவர்கள் ஏராளமானோர் இயந்திரப் படகுகளை  வாங்கும் போக்கு அதிகரித்தது. ஆனால், போருக்குப் பிந்தைய காலத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரங்கள் தடம் புரண்டன. உண்மையில், தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க இயந்திரப் படகுகளை ஒரு குறிப்பிட்டத் தொகை கொடுத்து அரசாங்கம் திரும்ப வாங்க வேண்டும் என்று பல ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

தமிழ் அரசியலில் மீனவர்கள் பிரச்சினை :

கடந்த 10 ஆண்டுகளாக மீனவர்களின் பிரச்னை தமிழக அரசியலில் தலையாய பிரச்னையாக எழுப்பபடுகிறது.  பிராந்தியக் கட்சிகள், குறிப்பாக அதிமுக, மீனவர்கள் பிரச்சனைகளில் முந்தைய காங்கரஸ் மற்றும் தற்போதைய பாஜக ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.

2014 ல், மோடி பதவியேற்ற முதல் மூன்று மாதங்களில், பிரதமர் அலுவலகத்துக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா எழுதிய 25 கடிதங்களில், 12  தமிழக மீனவர்கள் பிரச்சினையைப் பற்றியது.

இந்த கடிதம் குறித்து, இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது வலைத்தளத்தில் "நரேந்திர மோடிக்கு ஜெயலலிதாவின் காதல் கடிதங்கள் எவ்வளவு அர்த்தமுள்ளவை?" என்ற தலைப்பில் எதிர்வினை  கட்டுரை ஒன்றை வெளியிட்டது. கட்டுரையில்,“தனது தந்திரங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும்  நடனமாட நரேந்திர மோடி கைப்பாவை அல்ல என்பதை விரைவில் அவர் அறிந்து கொள்வார்” என்று சுட்டிக் கட்டப்பட்டது. இந்த கட்டுரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புஅலையை  உருவாகியது.  இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தனது கருத்துக்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

Srilanka Fishermen
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment