Advertisment

குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேலை தேர்வு செய்ய காரணம் என்ன?

2017ம் ஆண்டு படேல் தன்னுடைய முதல் சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸை சேர்ந்த ஷசிகாந்த் படேலை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

author-image
WebDesk
New Update
குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேலை தேர்வு செய்ய காரணம் என்ன?

Parimal A Dabhi 

Advertisment

Bhupendra Patel : விஜய் ரூபானிக்கு அடுத்தபடியாக பூபேந்திர படேலை குஜராத் மாநில முதல்வராக அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது பாஜக. திங்கள் கிழமை அன்று குஜராத்தின் 17வது முதல்வராக பதவியேற்றார் படேல். மற்றவர்களை பின் தள்ளி படேலை முதல்வராக தேர்வு செய்ததற்கான ஐந்து காரணங்கள் என்ன?

பூபேந்திர படேல் ஒரு பட்டீதார்

பாஜகவின் முக்கிய வாக்கு வங்கியாக நிலவி வருகிறது பட்டீதார் சமூகம். கடந்த சில ஆண்டுகளாக அந்த கட்சியில் இருந்து இந்த சமூகத்தினர் விலகிச் செல்வதாக தெரிந்தது. பிப்ரவரியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இது பிரதிபலித்தது. பாஜக கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றாலும் ஆம் ஆத்மி கட்சியின் மாநில கட்சித் தலைவரான சி.ஆர். பாட்டிலின் பிறந்த ஊரான சூரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அமைந்தது. இதற்கு பாஜகவிற்கு எதிரான பட்டீதார் வாக்குகள் மிக முக்கிய காரணமாக அமைந்தன.

கடந்த ஆண்டு பாஜக முதல்வர் கேஷூபாய் படேலின் மறைவு அந்த இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கியது. ஏனெனில் அவர் 2012இல் பாஜகவிற்கு எதிராக போராட்டத்தில் குதித்தார். இளைய பட்டீதார் சமூகத்தினர், அடுத்த முதல்வர் பட்டீதார் சமூகத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்தனர்.

மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்குப் பிறகு சமீபத்திய ஜன் ஆசிர்வாத் யாத்திரை, மத்திய அமைச்சர்கள் மற்றும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் மத்திய அரசு ஓ.பி.சிகளுக்கு அளித்த கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை பாராட்டியது, பட்டீதார்களிடம் இருந்து பாஜக மேலும் விலகி செல்வதாக தோன்றியது.

ஹர்தீக் படேல் தலைமையில் இட ஒதுக்கீடு கோரி 2015ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது, பழமையான, விவசாயிகளை அதிகம் கொண்ட, குஜராத் செல்வந்தர்கள் சமூகத்தில் ஒரு அங்கமான பட்டீதார் சமூகம் அரசியல் அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.

அந்த பட்டீதார் சமூகத்தில் பெரும்பாலானோர் தொழிலபதிர்களாக இருக்கின்ற போதும், அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய தேவையை அந்த போராட்டம் உணர்த்தியது. அவர்களின் குழந்தைகளுக்கு உயர்க்கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்கக் கூடிய ஒதுக்கீடு குறித்து அந்த சமூகம் உணர்ந்து கொண்டது.

அடுத்த ஆண்டு குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பட்டீதார் முகத்தை வைத்து தேர்தல் நடத்துவது அவசியமாகியது. பட்டீதார் சமூகத்தை சேர்ந்த ஐந்தாவது முதல்வர் பூபேந்திர படேல் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் ஆனந்திபென் படேல், கேசுபாய் படேல், பாபுபாய் படேல் மற்றும் சிமன்பாய் படேல் ஆகியோர் இதற்கு முன்பு முதல்வர்களாக பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அனந்திபென் படேல் வெளியேற்றம்

ஓபிசி அந்தஸ்து கோரி போராட்டத்தை பட்டீதார்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்து வெளியேறும் சூழல் உருவானது. 2016ம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநில தேர்தல்களுக்கு முன்பு, உனாவில் தலித்களை பொதுவெளியில் கசையால் அடித்தது தேசிய அளவில் பேசுபொருளாக மாறியது. மேலும் கட்சியில் மாற்றத்தை அது உருவாக்கியது.

இருப்பினும் 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 182 தொகுதிகளில் வெறும் 99 இடங்களில் மட்டுமே வெற்றியை பெற்றது. 1995ம் ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் இது மோசமான ஒரு தேர்தல் முடிவாகும். கேசுபாய் 2001 இல் இதேபோன்ற தற்செயலான வெளியேற்றம் குறிப்பாக சௌராஷ்ட்ராவில் உள்ள பட்டீதார்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது மஹாகுஜராத் ஜனதா கட்சியை கோர்தான் ஜடாஃபியா தலையில் உருவாக்க காரணமாக அமைந்தது. மேலும் 2012ம் ஆண்டு கேசுபாய் தலைமையிலான குஜராத் பரிவர்தன் கட்சியை உருவாக்க காரணமாக அமைந்தது. அந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் GPP இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் அபார வெற்றி, இருந்தபோதிலும், பட்டீதார் வாக்குகள் கலைந்தது தெளிவாகத் தெரிந்தது. பூபேந்திரர் அனந்திபென் குழுவை சேர்ந்தவர். படேல் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட அறிவிப்பு பிரதமர் மோடியிடம் இருந்து வருவது, பட்டிதார் சமூகத்தை சேர்ந்தவர் மீண்டும் முதல்வராக வருவதை குறிக்கிறது. சமூக, மத மற்றும் சமுதாய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்தும் பட்டீதார்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதை உறுதி செய்யும்.

சர்ச்சையற்ற முடிவு

தற்போது அகமதாபாத் மாநகராட்சி எல்லையின் ஒரு பகுதியாக இருக்கும் மேம்நகர் நாகர்பாலிகாவில் இருந்து 1990களில் வெற்றி பெற்ற படேல், குஜராத்தின் வணிக தலைநகரான அகமதாபாத்தில் இருந்து வரும் முதல் முதல்வர் ஆவார். அகமதாபாத்தில் அமைந்துள்ள தரியாப்பூரில் பட்டாசு விற்கும் கடையை நடத்திக் கொண்டிருந்தார் பூபேந்திர படேல். பாஜக கோட்டையான காட்லோடியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2010ம் ஆண்டு நடைபெற்ற அகமதாபாத் மாநகராட்சி தேர்தல் இவர் போட்டியிட்ட முதல் பெரிய தேர்தலாகும். அதில் வெற்றி பெற்ற அவர் நிலைக்குழு தலைவராக தேர்வும் செய்யப்பட்டார்.

2017ம் ஆண்டு படேல் தன்னுடைய முதல் சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸை சேர்ந்த ஷசிகாந்த் படேலை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா வைத்திருக்கும் படேல் கடந்த 25 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார், எனவே அவருடைய நியமனமானது சக்தி வாய்ந்த கட்டுமான பிரிவினரால் ஏற்றுக் கொள்ளப்படும். . அவரது பொது வாழ்க்கை சர்ச்சை இல்லாமல் இருந்தது மற்றும் மக்கள் அவரை லட்சியமற்றவர் என்று விமர்சனம் செய்கின்றனர்

அனந்திபென் மற்றும் அமித் ஷாவின் சமன்பாட்டை சமநிலை ஆக்கியவர்

உத்தரபிரதேச ஆளுநர் அனந்திபென் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் மோடியின் மிக நெருங்கிய நம்பிக்கையாளர்களாக கருதப்படுகின்றனர். அதே நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ளமாட்டார்கள் என்றும் அறியப்பட்டவர்கள். ரூபானி 2016ம் ஆண்டு அமித் ஷாவின் முத்திரையோடு முதல்வர் பொறுப்பை பெற்றவர். அனந்திபென் 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிர்வாகப் பதவிகள் இல்லை என்ற விதிமுறையின் அடிப்படையில் கட்சியில் இருந்து ஓய்வு பெற்றார்.

வாக்கு வங்கியை அதிகரிக்க, காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் இணையும் நபர்களுக்கு உயரிய பொறுப்புகள் வழங்கப்படுவதை மூத்த பாஜக உறுப்பினர்கள் வெறுக்கின்றனர். 2017ம் ஆண்டில் இருந்து இந்த போக்கு நடைமுறையில் உள்ளது. அமித் ஷாவின் நம்பிக்கையாளர்களுக்கு அவர் முதல் கூட்டுறவு அமைச்சராக பொறுப்பு வகிப்பது மகிழ்ச்சி அளித்தது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்க உதவிய ஒரு சக்திவாய்ந்த துறை மற்றும் இப்போது பாஜகவுடன் உள்ளது, அனந்திபெனின் விசுவாசிகளுக்கு இதேபோல் வெகுமதி அளிக்கப்பட வேண்டும்.

அனந்திபென்னின் மருமகனான ஜெயிஷ் படேல், சபர்மதி ஹரிஜன் ஆஷ்ரம அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவர் ஆவார். இது மத்திய கலாச்சார அமைச்சகத்தால் நிதியளிக்கப்பட்ட மறு அபிவிருத்தி திட்டத்தின் ஒரு பகுதியாக முன்மொழியப்பட்ட நிலத்தின் பெரும் பகுதியை இந்த அறக்கட்டளை வைத்துள்ளது. அவரது காந்திநகர் மக்களவைத் தொகுதியின் முக்கியப் பொறுப்புகளைக் கையாண்ட ஒருவரான படேல் முதல்வராக நியமிக்கப்பட்டதற்கு ஷா ஒப்புதல் அளித்ததாக வட்டாரங்கள் கூறுகின்றன. படேலின் காட்லோடியா சட்டமன்றத் தொகுதி காந்திநகர் மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

2022 குஜராத் தேர்தல்

பாஜக மற்றொரு இடைத்தேர்தலை சந்திப்பதற்கு பதிலாக ஒரு எம்.எல்.ஏவை முதல்வராக அறிவித்துள்ளது. பிரதமரின் இல்லமாகவும், இப்போது மத்திய அரசில் பல சக்திவாய்ந்த அமைச்சர்கள் இருப்பதாலும், அடுத்த ஆண்டு குஜராத்தில் சட்டமன்றத் தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானதாகும். சூரத் மற்றும் அகமதாபாத் மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி பெற்ற AAP மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இட்டெஹாதுல் முஸ்லீம் (AIMIM) போன்ற கட்சிகளுக்கான இடங்கள் உருவாக்கப்பட்டு குஜராத்தில் தேர்தல் நிலப்பரப்பு ஏற்கனவே மாறிக்கொண்டிருந்தது. பலவீனமான மற்றும் துண்டு துண்டான காங்கிரஸ் இந்த சக்திகளை பலப்படுத்தியது. 1995 ஆம் ஆண்டு முதல் குஜராத்தை ஆளும் பாஜக சங்கர்சின் வகேலாவின் கலகம் பிஜேபி அல்லாத காங்கிரஸ் ஆதரவு அரசாங்கத்திற்கு வழிவகுத்த ஒரு குறுகிய காலத்தைத் தவிர, ஆட்சிக்கு எதிரான போராட்டமும் அது போராட வேண்டிய வலுவான காரணியாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Gujarat
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment