Advertisment

சென்னையில் டேட்டா சென்டர்: அதானி - ஃபிளிப்கார்ட் ஒப்பந்தம் முக்கிய அம்சங்கள் என்ன?

அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு சில்லறை கிடங்கை கட்டும். அது ஃபிளிப்கார்ட்டுக்கு குத்தகைக்கு விடப்படும். மேலும், ஃபிளிப்கார்ட் தனது 3வது டேட்டா செண்ட்டரை சென்னையில் உள்ள அதானிகனெக்ஸ் வசதியில் உருவாக்கும்.

author-image
WebDesk
New Update
flipkart, flipkart adani group signed a deal, adani, ஃபிளிப்கார்ட், அதானி குழுமம், அதனானி, ஃபிளிப்கார்ட் அதானி குழுமம் ஒப்பந்தம், adani goup signed, flipkart adani group

வால்மார்ட்டுக்கு சொந்தமான ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான ஃபிளிப்கார்ட் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய கிடங்குகளில் ஒன்றைக் கட்டுவதற்கான ஒரு வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக திங்கள்கிழமை அறிவித்துள்ளன.

Advertisment

வால்மார்ட்டுக்கு சொந்தமான ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான ஃபிளிப்கார்ட் மற்றும் அகமதாபாத்தைச் சேர்ந்த அதானி குழுமம் ஒரு டேட்டா செண்ட்டரை உருவாக்குவதோடு கூடுதலாக, இந்தியாவின் மிகப்பெரிய கிடங்குகளில் ஒன்றை உருவாக்குவதற்கான வணிக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் என்ன?

அதானி குழுமத்தின் தளவாடப் பிரிவு, அதானி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட், மும்பையில் வரவிருக்கும் தளவாட மையத்தில் 5.34 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஒரு கிடங்கு மையம் அல்லது சில்லறை கிடங்கைக் கட்டும். அது ஃபிளிப்கார்ட் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்படும்.

2022-க்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த கிடங்கு, எந்த நேரத்திலும் 10 மில்லியன் யூனிட் விற்பனையாளர்களின் சரக்குகளை வைத்திருக்கும் திறனைக் கொண்டிருக்கும். மேலும், ஃபிளிப்கார்ட் தனது மூன்றாவது டேட்டா செண்ட்டரை சென்னையில் உள்ள அதானிகனெக்ஸ் வசதியில் உருவாக்கும். அதானி கனெக்எக்ஸ் என்பது அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த எட்ஜ் கனெக்ஸ் ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு கூட்டு டேட்டா செண்ட்டர் நிறுவனம் ஆகும்.

இந்த ஒப்பந்தத்தால் ஃபிளிப்கார்ட்டுக்கு பலன் என்ன?

ஒரு பெரிய கிடங்கு மையத்தில் பிளிப்கார்ட் முதலீடு செய்வது என்பது நாட்டின் ஆன்லைன் வணிக துறையில் தீவிரமடைந்து வரும் போட்டிக்குத் தயாராகி வருவதாக சில்லறை வல்லுநர்கள் நம்புகின்றனர். இது 2026 ஆம் ஆண்டில் 200 பில்லியன் டாலர் அளவுக்கு வணிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் சென்னையில் ஒரு டேட்டா செண்ட்டரை உருவாக்கும். இது வளர்ந்து வரும் தேவைகளை நிவர்த்தி செய்ய அனுமதிக்கும் என்று ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்களிடையே ஒரு போட்டி நிலவுகிறது என்பதை இந்த ஒப்பந்தம் காட்டுகிறது. “எங்கள் தளவாடங்கள் மற்றும் டேட்டா செண்ட்டர் வணிகங்களில் பரந்த கூட்டு ஒத்துழைப்பின் தனித்துவமான வணிக மாதிரியாகும். மேலும் இது ஃபிளிப்கார்ட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு சேவை செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம் … ஒரு நீண்ட கால பயனுள்ள கூட்டு ஒத்துழைப்பை நாங்கள் எதிர்நோக்குகிறோம். ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்வதிலும், நுகர்வோருக்கு முன்னுரிமை அளிப்பதற்கும், இந்தியாவின் எம்.எஸ்.எம்.இ சுற்றுச்சூழல் அமைப்பின் வளர்ச்சிக்கும் எங்களுடைய பரஸ்பர பலத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம்” என்று அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கரண் அதானி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Business Gautam Adani Flipkart
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment