Advertisment

திமிங்கலங்கள், டால்பின்கள் வாழ்வுமுறை கொரோனாவில் இருந்து நம்மை காக்கும்!

டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் நம்மிடம் இல்லாத பல்வேறு இயற்கை பாதுகாப்பினை பெற்றுள்ளது. அதனால் தான் விரைவில் ஹைபோக்ஸியாவிற்கு ஆளாகின்றோம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
திமிங்கலங்கள், டால்பின்கள்  வாழ்வுமுறை கொரோனாவில் இருந்து நம்மை காக்கும்!

From dolphins and whales, new insights on Covid-19  கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்படும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று அவர்கள் ரத்தத்தில் இருக்கும் ஆக்ஸிஜன் அளவு குறைவது தான். ஆக்ஸிஜன் குறையும் போது நிறைய திசுக்களை அவர்கள் இழக்கும் சூழல் உருவாகிறது. கடலில் வாழும் பாலூட்டிகளான டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் அதிக ஆக்ஸிஜன் அளவுகள் கொண்ட மட்டங்களில் வாழ்கின்றன. அவை அந்த சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்கிறது.

Advertisment

கம்பாராட்டிவ் பையோ கெமிஸ்ட்ரி மற்றும் பிசியோலஜியில் (Comparative Biochemistry and Physiology) வெளியான கட்டுரையில் ஆராய்ச்சியாளர் டெர்ரி வில்லியம்ஸ் (கலிஃபோர்னியா - சாண்டா கர்ஸ் பல்கலைகழகம்) எவ்வாறு கடல்வாழ் உயிரினங்கள் மூலமாக கொரோனாவின் தாக்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்று எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக வில்லியம்ஸ் கடல்வாழ் உயிரினங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார். பல்வேறு நெருக்கடியான காலகட்டங்களில் இந்த விலங்குகள் கடலுக்கு அடியில் எவ்வாறு தங்களின் மூச்சை நீண்ட நேரத்திற்கு பிடித்து வைத்துக் கொள்கிறது என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆராய்ச்சி கட்டுரையை டெர்ரியுடன் இணைந்து டெக்ஸாசின் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ரண்டல் டாவிஸ் எழுதியுள்ளார்.

ஒரே நேரத்தில் பல மணி நேரம் தஙகளின் மூச்சை பிடித்து வைத்துக் கொள்ளும் இந்த விலங்குகள் தங்களை காப்பாற்றிக் கொண்டு தங்களின் உடல் உறுப்புகள் செயல்படுவதை அனுமதிக்கும் வகையில் தகவமைப்பை பெற்றுள்ளன. இது போன்ற தகவமைப்புகள் மனிதர்கள் மத்தியில் குறைவாகவே உள்ளன. இதனால் தான் வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுதல் அவசியம் ஆகிறது.

ஆக்ஸிஜனை இழந்த திசுக்கள் விரைவில் சேதம் அடைகிறது. அதனை மீட்பதும் கடினம். இதனால் நீண்ட காலத்திற்கு விளைவுகளை கொரோனா தொற்றுக்கு பிறகு மக்கள் பெறுவதை நாம் தற்போது அறிந்து வருகின்றோம் என்று வில்லியம்ஸ் கூறியுள்ளார். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை மற்றும் இதயத்தின் உணர்திறன் பாதிக்கப்படும். கடல் பாலூட்டிகள் இவற்றையும் பிற முக்கியமான உறுப்புகளையும் பாதுகாக்க பல்வேறு வழிமுறைகளை கொண்டுள்ளன.

கடல் பாலூட்டிகள் அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறன் கொண்டவை. சில கடல் பாலூட்டிகள் டைவ்ஸின் போது தங்கள் மண்ணீரலை சுருங்குகின்றன, இது ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த அணுக்களை புழக்கத்தில் விடுகிறது. சிவப்பு இரத்த அணுக்களின் அதிக செறிவுகளின் விளைவாக ஏற்படும் இரத்தக் கட்டிகளைத் தவிர்க்க, பல கடல் பாலூட்டி இனங்கள் மற்ற பாலூட்டிகளில் காணப்படும் உறைதல் பொறிமுறையைக் கொண்டிருக்கவில்லை.

இதயம் மற்றும் எலும்பு தசைகளில் மைக்ளோபின் மற்றும் மூளையில் நியூரோக்ளோபின் மற்றும் சைடோக்ளோபின் போன்ற அதிக அளவு ஆக்ஸிஜனை எடுத்து செல்லும் புரதங்கள் கடல் பாலூட்டிகளில் அதிகமாக உள்ளது.

குறைவான ஆக்ஸிஜன் இருக்கும் நிலையை தாங்கவும், ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரத்த திசுக்களை மீண்டும் பயன்படுத்தவும் பல்வேறு தகவமைப்புகளை பெற்றுள்ளது இந்த கடல்பாலூட்டிகள். மனிதர்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு பிறகு ஆக்ஸிஜனேற்றப்பட்ட மறுபயன்பாடு கூடுதல் திசு சேதாரத்திற்கு வழி வகுக்கிறது.

வில்லியம்ஸ் கூற்றுப்படி கடல் பாலூட்டிகள் ஆக்ஸிஜன் இழந்த திசுக்களுக்கு சேதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை புரிந்து கொள்ள இயலும். "ஆக்ஸிஜன் பாதையை நிறுத்துவதில் பல மாற்றங்கள் உள்ளன, இந்த கோவிட் நோயாளிகளில் இதுதான் நாங்கள் காண்கிறோம் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

நம் இதயம் மற்றும் மூளையானது வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரக்கூடியது. சேதம் அடைந்தால் மீண்டும் மாற்ற முடியாது. டால்பின்கள் மற்றும் திமிங்கலங்கள் நம்மிடம் இல்லாத பல்வேறு இயற்கை பாதுகாப்பினை பெற்றுள்ளது. அதனால் தான் விரைவில் ஹைபோக்ஸியாவிற்கு ஆளாகின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment