Advertisment

உத்தரகாண்ட் இயற்கை சீற்றம் : ஆராய்ச்சியை துவங்குகிறது விஞ்ஞானிகள் குழு!

விஞ்ஞானிகள் உறுதியாக நம்புவது என்னவென்றால் இது போன்ற நிகழ்வு பனிப்பாறைகள் உடைவால் ஏற்படவில்லை என்பது தான்

author-image
WebDesk
New Update
உத்தரகாண்ட் இயற்கை சீற்றம் : ஆராய்ச்சியை துவங்குகிறது விஞ்ஞானிகள் குழு!

 Amitabh Sinha 

Advertisment

Glacial lake burst or avalanche? Scientists to leave for Uttarakhand disaster site today : 2013ம் ஆண்டு நடைபெற்ற பேரழிவின் அச்சத்தை மீண்டும் திங்கள் கிழமை அதிகாலை சமோலியில் ஏற்படுத்திய அதிகப்படியான நீர்வரத்திற்கான காரணம் என்ன என்பதை இன்னும் ஆராய்ச்சியாளர்களால் உறுதியாக கூற இயலவில்லை. பனிஏரி உடைந்ததா, அளவுக்கு அதிகமான மழைப்பொழிவா, அல்லது பனிச்சரிவா, காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட பிரச்சனையா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

ஞாயிற்றுக்கிழமை மாலை, அதிக அளவிலான வெள்ளம் மற்றும் பேரழிவு குறைய துவங்கியது. இந்த சீற்றம் உருவாக காரணமாக இருந்தது என்ன என்பதை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் சமோலியின் வடக்கில் அமைந்திருக்கும் உயரமான மலைகளை நோக்கி பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்த நிகழ்விற்கு பனி ஏரியின் உடைப்பு தான் காரணமா ( GLOF, or glacial lake outburst flood) என்பதை அவர்கள் அறிந்து வர இந்த பயணம் மேற்கொள்ள உள்ளனர். இது பனிஏரியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கீழ் நோக்கி வெள்ளமாக பெருக்கெடுத்தா என்பதை அவர்கள் அறிந்து வர உள்ளனர்.

பனிப்பாறைகள் பின்வாங்குவதால் பனி ஏரிகள் உருவாகும்.  இது போன்ற ஏரிகளை ப்ரோக்ளேசியல் ஏரிகள் என்று அழைப்போம். பாறைகள் மற்றும் வண்டல்மண் மட்டுமே இதன் கரைகள் அமைந்திருக்கும். இந்த கரைகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஓடைகள் மற்றும் ஆறுகளில் ஏற்படும். வருகின்ற வழியில் உள்ள பாறைகள், மணல் போன்றவற்றை அடித்துக் கொண்டு வரும் போது கீழ் பகுதியில் இது மாபெரும் வெள்ளப்பெருக்கை உருவாக்குகிறது.

இந்த நிகழ்வுகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் அதன் தாக்கம், அந்த ப்ரோக்ளாசியல் ஏரி இருக்கும் இடம் மற்றும் அதன் சீஇற்றம் ஆகியவற்றை பொறுத்தே அமையும். இந்த சீற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. தற்போது ஏற்பட்ட நிகழ்வில், அங்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பனிச்சரிவு ஏற்பட்டது காரணம் என்று கூறப்படுகிறது.

GLOF தான் காரணம் என்று உணரப்படும் போது சில கேள்விகள் இதனை சுற்றி எழுகிறது. அங்கு இது போன்ற ஏரிகள் ஏதும் இருப்பதாக இதுவரை எங்களுக்கு தெரியவில்லை. பனிப்புயல் சாதாரணமானது தான். ஒன்று தான் ஏற்பட்டது. ஆனால் அது நீர்வரத்தின் அதிகரிப்பிற்கு காரணமாக அமைந்துவிடாது. அந்த நீருக்கும் மூலம் என்று ஏதாவது இருக்க வேண்டும். நமக்கு அந்த நீர் எங்கிருந்து வந்தது என்பதுதான் தெரியவில்லை என்று பேராசிரியர் எச்.சி. நைன்வால் அறிவித்துள்ளார். அவர் உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹேமாவதி நந்தன் பஹூகுனா கர்ஹ்வால் பல்கலைகழகத்தில் பனிமலைகள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

“We would have to visit the area to find out what exactly happened. Till then, we can only speculate,” he said. Argha Banerjee, a glaciologist who works at the Indian Institute of Science Education and Research (IISER), Pune, said it was possible that a glacier lake was present in the area but not known to scientists.

சரியாக என்ன நடந்தது என்பதை அறிய நாங்கள் அங்கு செல்ல வேண்டும். அது வரை நாம் யூகங்களை மட்டுமே முன் வைக்க முடியும் என்றும் அவர் கூறினார்.  ஐ.ஐ.எஸ்.இ.ஆர், புனேவில் க்ளாசியோலிஸ்ட்டாக பணியாற்றும் அர்கா பானர்ஜி இங்கே பனி ஏரி இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆனால் அது ஆராய்ச்சியாளர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.

இது போன்று நூற்றுக்கணக்கான ஏரிகள் இங்கு முழுவதும் அமைந்துள்ளது. அனைத்தையும் நாம் அறிந்திருப்போம். ஆனால் ஒரு சில விட்டுப்போயிருக்கலாம். இந்த நிகழ்விற்கு பிறகே நான் சாட்டிலைட் படங்களை பார்த்தேன். அந்த பகுதியில் எந்த பனி ஏரிகளும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் அதிக ரெசலியூசன் கொண்ட புகைப்படங்களை நாம் பார்த்தால் நாம் ஒரு வேலை அந்த ஏரியை கண்டறியலாம் என்று பானர்ஜீ கூறினார். மேலும் பனிப்பாறைகளுக்குள் ஏரிகள் உருவாகும் வாய்ப்புகளும் உள்ளன. அதனை நம்மால் செயற்கைகோள் வழங்கும் படங்கள் கொண்டு அறிய இயலாது. அங்கு எந்தவிதமான பனி ஏரிகளும் இல்லை என்றால் ஞாயற்றுக் கிழமை நிகழ்வு ஒரு ஆச்சரியம் தான்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஏன் ஆச்சரியம் என்றால் அளவுக்கு அதிகமான நீர். இது ஒன்றும் அப்படியான மழை பெய்வதற்கான காலமும் அல்ல. இது போன்ற நேரங்களில் மழை என்பது அரிதான நிகழ்வு தான். தற்போதைக்கு பனி ஏரியில் உடைப்பு என்றே கருத முடியும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் பிரிவு பேராசிரியர் ஏ.பி. திம்ரி கூறியுள்ளார்.

இதர காரணங்களுக்கும் வாய்ப்புகள் என்று பானர்ஜி கூறுகிறார். பனிச்சரிவு அல்லது நிலச்சரிவு ஆறு அல்லது ஓடைகளின் ஓட்டத்தை தடை செய்திருக்கலாம். அதன் விளைவாக உரு தற்காலிக அணை போன்று உருவாகியிருக்கலாம். தண்ணீரால் உருவாகும் அழுத்தம் அதிகமாக இருந்திருக்கும் பட்சத்தில் அதனால் அந்த தற்காலிக அணை உடைந்து நீர் வெளியேற்றப்பட்டிருக்கலாம். அந்த இடத்திற்கு போனால் மட்டுமே அதன் காரணங்களை அறிய முடியும். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு மேல் ஆகலாம் என்று அவர் கூறினார்.

publive-image

டேராடூனை மையமாக கொண்டு செயல்படும் வாடியா இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜி நிறுவனம் இரண்டு ஆராய்ச்சியாளர்கள் குழுவை திங்கள் கிழமை அங்கே அனுப்ப உள்ளது என்று அதன் இயக்குநர் காலசந்த் செய்ன் கூறினார். 2013ம் ஆண்டு பேரழிவிற்கு காரணமக இருந்த பலவீனமான சுற்றுச்சூழல் அமைப்பில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் மற்றும் காலநிலை மாற்றங்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

தற்போதைக்கு கட்டுமானம் மற்றும் பெரிய அணைகளின் இருப்பிற்கும் இந்த நிகழ்விற்கு நேரடியாக எந்த தொடர்பு இல்லை. ஆனால் காலநிலை மாற்றம் என்ற ஒன்றை நாம் அப்படியே புறந்தள்ளிவிட இயலாது. இமயமலைப்பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் குறைந்து வருகிறது என்பதை நாம் அறிவோம். அவை அனைத்தும் சில ப்ரோக்ளாசியல் ஏரிகளுக்கு வழி வகை செய்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். விஞ்ஞானிகள் உறுதியாக நம்புவது என்னவென்றால் இது போன்ற நிகழ்வு பனிப்பாறைகள் உடைவால் ஏற்படவில்லை என்பது தான். துருவப்பகுதியில் இருப்பது போல் பனிப்பாறைகள் உடைவதில்லை. சில துண்டுகள் மட்டுமே பாறையின் நுணியில் இருந்து உடையும். அதுவும் இது போன்ற மிகப்பெரிய வெள்ளப்பெருக்கிற்கு வழி வகுக்காது என்பது குறிப்ப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment