Advertisment

காலநிலை மாற்றத்தால் பாதிப்பிற்கு உள்ளாகும் பனி ஏரிகள்; அபாயங்களும் தீர்வுகளும்!

. உள்ளூர் சூழலுக்கு ஏற்ற வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இதுபோன்ற ஒரு பயிற்சி உத்தரகண்டில் மட்டுமல்ல, முழு இமயமலைப் பகுதியிலும் செய்யப்பட வேண்டும்.

author-image
WebDesk
New Update
Glacial lakes risks solutions

Amitabh Sinha

Advertisment

ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட உத்தரகாண்ட் வெள்ளம் மிகப்பெரிய அபாயத்தை அடிக் கோடிட்டு காட்டியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த பனிப்பாறை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான டிபி தோப்பல் உடன் நடைபெற்ற உரையாடலின் முக்கிய விவகாரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.  இமயமலையில் இருக்கும் பனிப்பாறைகள் தொடர்பாக பல ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து வரும் இவர் டேராடூனில் மையமாக கொண்டு செயல்பட்டு வரும் வடியா இன்ஸ்ட்யூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி கல்வி நிறுவனத்துடன் பணியாற்றி வந்தார்.

இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட காரணம் என்ன?

பனிப்புயல் காரணமாக இந்த மோசமான இயற்கை பேரழிவு நடைபெற்று இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் மிக அதிக அளவிலான பனிப்பொழிவு இந்தப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு காலநிலை முற்றிலுமாக மாறி கொஞ்சம் வெதுவெதுப்பான சூழல் உருவாகியது. இது பனியின் உருக்கத்திற்கு காரணமாக அமைந்திருக்கலாம். பின்னர் அதுவே புயலாக உருப்பெற்று இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மாறியிருக்கலாம்.

இது போன்ற நேரத்தில் பனிப்புயல் ஏற்படுவது வழக்கம் இல்லையே?

இல்லை. இத்தகைய நிகழ்வுகள் உயர்ந்த மலைப் பகுதிகளில் நடைபெறுகின்றன. அவை எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தாது. இதுபோன்று நிகழ்வில் என்ன நடைபெறுகிறது என்றால்,  பனிப்பொழிவுக்கு பிறகு திடீரென ஏற்படும் வெப்ப நிலை மாற்றத்தால் மேற்பரப்பில் விழுந்திருக்கும் புதிய பனி உருக துவங்கும்.  சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருப்பதால் கொஞ்சம் கொஞ்சமாக நழுவ ஆரம்பிக்கும்.  இப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் பெரும்பாலானவை கற்கள், மண், பாறைகள் போன்ற கொண்டிருக்கிறது.  எனவே பனி நழுவும் போது அவற்றையும் எடுத்துக் கீழே வருகிறது. இறுதியில் இவை மிகவும் வலுவாகி வரும் வழியில் அனைத்தையும் அரித்துக்கொண்டு கீழே வருகிறது.  ஆராய்ச்சியாளர்கள் குழு அந்த இடத்திற்கு விரைவில் சென்றுவிடுவார்கள். பின் தான் அங்கே என்ன நடந்தது என்று தெரிய வரும். ஆனால் அங்கு செல்வது தான் பிரச்சனை. அந்த பகுதிகள் அனைத்தும் அணுக முடியாத பகுதிகளாகும். அவர்கள் அங்கே சென்றுவிட்டால் மதிப்பீடு செய்வது எளிதாகிவிடும்.

publive-image

இத்தகைய சம்பவங்களால் ஏற்படும் அச்சுறுத்தல் எவ்வளவு பெரியது?

உத்தரகாண்டில் மட்டும் மொத்தமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனிப்பாறைகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது குறைந்து வருகிறது. பெரும்பாலானவை குப்பைகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் பின்வாங்கும் போது பனி உருக ஆரம்பிக்கும். ஆனால் குப்பைகள் அப்படியே இருந்து விடுகின்றன. இந்த குப்பைகள் ஏரிகள் அதிகமாக உருவாக உதவுகின்றன. பல ஆண்டுகளாக இந்த ஏரிகள் உருவாகும் அதிர்வெண் அதிகரித்துள்ளது. இருப்பினும் பனி ஏரி வெடித்து ஏற்படும் வெள்ளம் உத்தரகாண்ட்டில்  (GLOF (glacial lake outburst flood)  குறைவாகவே உள்ளது. சிக்கிமில் இருப்பதுபோல உத்தரகாண்டில் . GLOF (glacial lake outburst flood)  எண்ணிக்கையில் அதிகமாக இல்லை ஏனென்றால் உத்தரகாண்ட் மிகவும் செங்குத்தான சரிவுகளை கொண்டுள்ளது. மேலும் தண்ணீர் தன் போக்கில் செல்ல ஒரு வழியை எப்படியும் கண்டுபிடித்து விடுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

ஆனால் உத்தரகாண்ட்டில் 1200க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய ஏரிகள் உள்ளன. அவை அனைத்தும் அளவில் பெரிதாகிக் கொண்டே வருகிறது. இது போன்ற பேரழிவு ஏற்படுவதற்கு அவை வழி வகுக்கலாம். இந்த ஏரிகளை கண்காணிப்பது மிகவும் முக்கியமானது. மேலும் எவையெல்லாம் அளவில் பெரிதாகி வருகிறது, சிறிதாகி வருகிறது என்பதையும் அளவிட வேண்டும். இந்த அபாய மதிப்பீடு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் இதற்கான திட்டங்களையும் உடனே துவங்க வேண்டும்.

இந்த திட்டம் ஏன் நடைபெறவில்லை?

வேலை நடைபெறவில்லை என்று கூறமாட்டேன். நிறைய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பலர் களத்தில் பணியாற்றி வருகின்றனர். தரவுகளையும் சேகரித்து வருகின்றனர். முக்கிய பிரச்சனை ஒருங்கிணைப்பு மற்றும் கவனம் இல்லாதது தான். பனிப்பாறை வல்லுநர்கள், புவியியலாளர்கள், நீர்நிலை வல்லுநர்கள், கணித மாதிரிகள், ரிமோட் சென்சிங் செய்யும் நபர்கள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் பலர் உள்ளனர். பல அறிவியல் குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒத்திசைவான வெளியீடு ஏதும் வரவில்லை. ஏராளமான தரவுகள் உருவாக்கப்படுகின்றன, ஆனால் அவை நல்ல முறையில் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இப்போதும் கூட அந்த இடங்களுக்கு 8 முதல் 10 குழுக்கள் வரை செல்கின்றன. ஆனால் ஏன் அவ்வளவு குழுக்கள் தேவை. ஒரு குழுவில் அனைத்துவிதமான வல்லுநர்களும் இருந்தால் போதுமானதே. அனைவரும் சென்று தரவுகளை சேகரிப்பார்கள், திரும்பி வந்து அறிக்கைகள் எழுதுவார்கள், பின்னர் அவர்களின் கண்டுபிடிப்புகளை வெளியிடுவார்கள். அடுத்த சம்பவம் நடக்கும் வரை அனைத்தையும் நாம் மறந்துவிடுவோம். அனைத்து ஆராய்ச்சிகள் மற்றும் செயல்பாடுகளை கவனிக்க தேசிய நிறுவனம் ஒன்று இங்கே தேவை என்று நினைக்கின்றேன்.

publive-image

காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய செயல் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இமயமலை சுற்றுச்சூழல் அமைப்பின் நோக்கம் மற்றும் இமயமலை பனிப்பாறைக்கான தேசிய மையத்தை அமைக்கும் திட்டம் பற்றி உங்களின் கருத்து என்ன?

இந்த திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது. அரசாங்கத்தில் இருக்கும் யாரோ ஒருவர் இந்த திட்டம் தேவையில்லை என்று நினைத்துள்ளனர். இது ஏன் தேவையில்லை என்று எனக்கு தெரியவில்லை. வ்வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் இமயமலை புவியியல் (டெஹ்ராடூனில்) மையம் கூட தற்போது இந்த நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஹிமாலயன் எக்கோசிஸ்டம் மிஷன் நான் கூறும் நடவடிக்கைகளில் இறங்க தயாராக இல்லை.

இந்த வேலைக்கென்றே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு நிறுவனம் இருக்க வேண்டும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பூமி அறிவியல் அமைச்சகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், இஸ்ரோ மற்றும் பிற இடங்களில் கூட பல அறிக்கைகள் மற்றும் தகவல்கள் உள்ளன. யாராவது இந்த அறிக்கைகளை ஒன்றிணைக்க வேண்டும், ஒரு தரவுத்தளத்தை உருவாக்க வேண்டும், அப்போது தான் ஒரு வருடத்திற்குள், செயல்பாட்டு விஷயங்களில் நாம் கவனம் செலுத்த ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.

இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் என்ன?

இந்த வகையான சம்பவங்கள் முற்றிலுமாக தடுக்கப்பட இயலாது. ஆனால் அழிவை ஏற்படுத்தும்

அவற்றின் வேகத்தை மட்டுப்படுத்த முடியும். சிக்கிமில் இருக்கும் லோனார் ஏரி இந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாகும். சமீபத்தில், ஆராய்ச்சியாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்ட விகிதத்தில் இந்த ஏரியின் நீரை அருகில் இருக்கும் ஆற்றுக்கு கடத்த வழி ஒன்றை கண்டறிந்தனர். தற்போது அங்கு வெள்ளம் இல்லை. ஏரியால் தாங்கிக் கொள்ள இயலாத அளவுக்கான அழுத்தமும் இல்லை. இது போன்ற முயற்சிகளை நாம் உத்தரகாண்டில் பயன்படுத்தலாம். ஆனால் இதனையே 1000க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு செயல்படுத்த முடியாது. அதிக அளவு ஆபத்தை ஏற்படுத்தும் ஏரிகளை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும். உள்ளூர் சூழலுக்கு ஏற்ற வகையில் தீர்வுகள் எட்டப்பட வேண்டும். இதுபோன்ற ஒரு பயிற்சி உத்தரகண்டில் மட்டுமல்ல, முழு இமயமலைப் பகுதியிலும் செய்யப்பட வேண்டும்.

நீர்மின் அணைகளால் பாதிப்பு ஏற்பட்டிருக்குமா?

இந்த பகுதியில் சேமிப்பு அணைகள் ஏதும் கட்டப்படவில்லை. அவை run-of-the-river வகையை சேர்ந்தவை. இவ்வளவு உயரமான இடங்களில் அணைகளை கட்டுவது அத்தனை விவேகமானதல்ல. மீண்டும், இது நிலையான நிர்வாகத்தின் கேள்வி. எந்தவொரு திட்டத்திற்கும் ஒரு DPR (detailed project report) விரிவான திட்ட அறிக்கை செய்யப்படும்போது, பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச்சூழல் மதிப்பீடு, நதியின் ஓட்டம், மாசுபாடு, காடுகள் போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் பனிப்பாறை இந்த டிபிஆர்களில் இடம் பெறவில்லை. இது ஒரு பெரிய குறைபாடு என்று நான் நினைக்கிறேன். ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மதிப்பீடு நிலச்சரிவுகள் மற்றும் பனி பனிச்சரிவுகளின் அதிர்வெண், உயர்ந்த பகுதிகளில் ஏரி உருவாவதற்கான சாத்தியம், பனிப்பாறைகளில் பனி அளவு, பனிப்பாறைகள் பின்வாங்குகிறதா அல்லது முன்னேறுகிறதா, இந்த மாற்றங்கள் நிகழும் வீதம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவை அடிப்படை உள்ளீடுகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இறுதியில், ஒரு பேரழிவு ஏற்பட்டால், அது திட்டங்களை மட்டுமல்ல, மக்களையும் பாதிக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Uttarakhand
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment