Advertisment

ஆன்லைன் கேமிங்க்கு 28% ஜிஎஸ்டி விதிக்க முடிவு; காரணம் என்ன?

ஆன்லைன் கேமிங், ரேஸ் கோர்ஸ், கேசினோக்கள் ஆகியவற்றுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்க அமைச்சர்கள் குழு பரிந்துரை; இவற்றுக்கு அதிக வரி விதிக்கப்படுவது ஏன்?

author-image
WebDesk
New Update
ஆன்லைன் கேமிங்க்கு 28% ஜிஎஸ்டி விதிக்க முடிவு; காரணம் என்ன?

Aanchal Magazine

Advertisment

Explained: Why online gaming could now attract a higher GST of 28%: கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் மற்றும் ரேஸ் கோர்ஸ்கள் மீதான வரி விகிதத்தை ஆராய அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ் இந்த சேவைகளுக்கு 28 சதவீத அதிக வரி விகிதத்தை விதிக்க பரந்த ஒருமித்த கருத்துக்கு வந்துள்ளது.

அமைச்சர்கள் குழுவின் பார்வை

இதனையடுத்து, வரி விதிப்பதற்கான மதிப்பீட்டிற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் குழு உத்தரவிட்டுள்ளது என்றும், அதன் பிறகு இந்தக் குழுவின் இறுதிக் கூட்டம் மே மாதத்தின் நடுப்பகுதியில் நடைபெறும் என்றும் மேற்கு வங்க நிதி அமைச்சர் சந்திரிமா பட்டாச்சார்யா தெரிவித்தார்.

மேலும், “ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகிய இந்த மூன்றிற்கும் அதிகபட்ச வரியான 28 சதவீதம் விதிக்கப்பட வேண்டும் என்பதில் மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து உள்ளது. வரி விதிக்கப்படும் மதிப்பீடு என்ன என்பதுதான் இப்போது கேள்வி. இதற்காக நிதி அம்சம், சட்ட அம்சம் ஆகியவற்றை வரி விதிப்பு (ஃபிட்மெண்ட் கமிட்டி) குழுவின் அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, 10 நாட்களுக்குள் அறிக்கை அளிக்கும். மீண்டும் மே மாத நடுப்பகுதியில் மற்றொரு கூட்டம் அமைச்சர்கள் குழுவின் தலைவரால் அழைக்கப்படும், ”என்று அமைச்சர்கள் குழுவின் உறுப்பினரான சந்திரிமா பட்டாச்சார்யா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.

பின்னர், இந்த சேவைகளை மதிப்பிடுவதற்கான முறையை அமைச்சர்கள் குழு இறுதி செய்யும். தற்போது, ​​ஆன்லைன் கேமிங்கிற்கு (பந்தயம் இல்லாத) 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது, அதே சமயம் சூதாட்டம், ரேஸ் கிளப்புகள் ஆகியவற்றுடன் பந்தயம் கட்டுவதற்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இப்போது, ​​மேலே உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் 28 சதவீதம் அதிக வரி விதிக்க வாய்ப்புள்ளது.

கேசினோக்கள், ஆன்லைன் கேமிங் போர்டல்கள் மற்றும் ரேஸ் கோர்ஸ்கள் ஆகியவற்றின் சேவைகளை சிறப்பாக மதிப்பிடுவதற்காக, GSTயை விதிக்கும் வகையில் கடந்த ஆண்டு மே மாதம் அரசாங்கம் அமைச்சர்கள் குழுவை அமைத்தது. கமிட்டிக்கான குறிப்பு விதிமுறைகளில், கேசினோக்கள், ரேஸ் கோர்ஸ்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் போர்டல்கள் வழங்கும் சேவைகளின் மதிப்பீடு மற்றும் கேசினோவில் சில பரிவர்த்தனைகளுக்கு வரிவிதிப்பு ஆகியவை அடங்கும், இது தொடர்பான விஷயங்களில் தற்போதுள்ள சட்ட விதிகள் மற்றும் நீதிமன்றங்களின் உத்தரவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

சூதாட்ட விடுதிகள், ரேஸ் கோர்ஸ் மற்றும் ஆன்லைன் கேமிங் மற்றும் லாட்டரி போன்ற பிற ஒரே வகையிலான சேவைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான சிறந்த வழிகளை மதிப்பிடுவதற்கு சட்ட விதிகளில் ஏதேனும் மாற்றத்தின் அவசியத்தை அமைச்சர்கள் குழு பரிந்துரைக்க உள்ளது.

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சர்கள் குழு, திங்கள்கிழமை (மே 2) கூடி, இந்த மூன்று சேவைகளுக்கும் பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி விகிதம் குறித்து விவாதித்தது. இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டத்தில், இந்தக் குழுவின் அறிக்கை எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

8 பேர் கொண்ட குழுவில் உள்ள மற்ற மாநில அமைச்சர்கள் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், குஜராத் நிதி அமைச்சர் கனுபாய் படேல், கோவா பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் மவுவின் கோடின்ஹோ, தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், உத்தரபிரதேச நிதி அமைச்சர் சுரேஷ் கன்னா மற்றும் தெலுங்கானா நிதி அமைச்சர் டி. ஹரிஷ் ராவ்.

இந்த சேவைகளுக்கு 28% வரி

கேமிங் சேவைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வருவாய் ஈட்டுவதாக மாநில அரசு அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.

ஜனவரி 2019 இல் அமைக்கப்பட்ட லாட்டரி மீதான அமைச்சர்கள் குழு, அதன் அறிக்கையில், சூதாட்ட விடுதிகள், குதிரைப் பந்தயம், ஆன்லைன் கேமிங் ஆகியவற்றின் விலை மற்றும் மதிப்பீட்டை வரிவிதிப்பு மற்றும் சட்ட கமிட்டிகளுக்கு பரிந்துரைக்கலாம் என்று பரிந்துரைத்தது.

இந்த விவகாரம் ஜூன் 2019 இல் 35 வது GST கவுன்சில் கூட்டத்திலும், 2019 செப்டம்பரில் 37 வது கவுன்சில் கூட்டத்திலும் இடம்பெற்றது.

ஜூன் கூட்டத்தில், இந்த சேவைகளுக்கான வரிவிதிப்புக்கான மதிப்பை வரையறுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பேசப்பட்டது, இதில் நடைமுறை மற்றும் முகமதிப்பு மற்றும் பந்தயத் தொகையை தீர்மானிப்பதற்கான நடைமுறை மற்றும் சட்டக் குழு மற்றும் ஃபிட்மென்ட் கமிட்டிக்கு அனுப்புதல் ஆகியவையும் அடங்கும்.

இதையும் படியுங்கள்: நிலக்கரி பற்றாக்குறைக்கு மத்தியில், மின் தேவையை அதிகரித்த கோடை காலம் – எப்படி?

செப்டம்பர் 2019 கூட்டத்தில், குதிரைப் பந்தயத்தின் வரிவிதிப்பு மதிப்பில் இருந்து பரிசுத் தொகையைத் தவிர்த்து, குதிரைப் பந்தயத்தில் பந்தயம் கட்டுவதை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகக் குறைப்பதற்கான முன்மொழிவை ஃபிட்மென்ட் கமிட்டி பரிசீலித்தது. ஃபிட்மென்ட் கமிட்டி, குதிரைப் பந்தயத்தில் பந்தயம் கட்டுவதில் 115 சதவீத இழப்பீட்டு செஸுடன் 28 சதவீத ஜிஎஸ்டியை பரிந்துரைத்தது, இது முக மதிப்பின் மீதான வரிவிதிப்பு விகிதத்தை 18 சதவீதமாக மாற்றும்.

ஜிஎஸ்டி கவுன்சில் 2019 டிசம்பரில் அரசு நடத்தும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரிகள் இரண்டிற்கும் ஒரே மாதிரியான 28 சதவீத ஜிஎஸ்டியை விதித்தது. இதற்கு முன், அரசு நடத்தும் லாட்டரிகளுக்கு 12 சதவீத ஜிஎஸ்டி, அரசு அங்கீகாரம் பெற்ற லாட்டரிகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Gst Online Games Economy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment