Advertisment

மனிதருக்கு பரவிய H10N3 பறவைக் காய்ச்சல்; ஏற்பட இருக்கும் விளைவுகள் என்ன?

பிப்ரவரியில் ரஷ்யாவில் முதன்முறையாக H5N8 பறவைக்காய்ச்சல் வைரஸ் மனிதரிடம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கடைசி குளிர்காலத்தில் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் கிழக்காசிய பண்ணைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
H10N3 bird flu detected in human

H10N3 bird flu detected in human : சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் 41 வயது நபருக்கு பறவைக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரிதாக அறியப்படும் பறவைக்காய்ச்சலின் ஸ்ட்ரெய்ன் H10N3 அவர் உடலில் கண்டறியப்பட்டதாக பெய்ஜிங்கில் தேசிய சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisment

ஜென்ஜியாங்க் பகுதியில் வசித்து வந்த அவர் ஏப்ரல் 28ம் தேதி அன்று நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அவருக்கு H10N3 தொற்று ஏற்பட்டிருப்பதை செவ்வாய்க்கிழமை சீன சுகாதார ஆணையம் உறுதி செய்தது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும் ஆணையம் உறுதி அளித்துள்ளது.

இவருக்கு எவ்வாறு இந்நோய் தொற்று ஏற்பட்டது என்பதை குறிப்பிடவில்லை இருப்பினும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு நோய் தொற்று ஏதும் ஏற்படவில்லை என்றும், மனிதர்களில் இந்த தொற்று பரவும் விதம் குறைவாக உள்ளது என்றும் அரசு கூறியுள்ளது.

H10N3 bird flu குறித்து நமக்கு என்ன தெரியும்?

இந்த வைரஸ் குறித்து நமக்கு குறைவாகவே தெரியும் இது பறவைகளை மிகவும் அரிதாக தாக்கும் ஒரு நோயாகும் என்று எஃப்.ஏ.ஓ அறிவித்துள்ளது. மேலும் இது ஒரு மோசமான தொற்று பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம், இந்நோயால் அவர் எப்படி பாதிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. இருப்பினும் புதிய வழக்குகள் ஏதும் அவர் வாழும் பகுதியில் கண்டறியப்படவில்லை. மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வகையில் தொற்று ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பறவைகளுக்கு காய்ச்சலை ஏற்படுத்தும் அவியன் வைரஸ் மனிதர்களிடம் தொற்றினை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது. H7N9 வைரஸ் சீனாவில் 2016-17 குளிர்காலங்களில்300க்கும் மேற்பட்டவர்களை கொன்றது. இந்த வைரஸூம் மிகவும் அரிதாகவே ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது.

ஆபத்துகள் என்ன?

தொற்று பரவும் விதம் குறைவாகவே இருக்கும் என்றும், இது ஒரு இடைக்கால பரவல் என்றும் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிக அளவில் பண்ணைகளிலும் இயற்கையாகவும் பறவைகளை வைத்திருக்கும் சீனாவில் இது போன்று அரிதாக நோய் தொற்று ஏற்படுகிறது.

மனித மக்கள் தொகையில் அவியன் பறவைக்காய்ச்சல் குறித்து கண்காணிப்பு அதிகரித்து வருவதால், பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றுகள் அதிகமாக பதிவு செய்யப்படுகிறது.

பிப்ரவரியில் ரஷ்யாவில் முதன்முறையாக H5N8 பறவைக்காய்ச்சல் வைரஸ் மனிதரிடம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கடைசி குளிர்காலத்தில் ஐரோப்பா, ரஷ்யா மற்றும் கிழக்காசிய பண்ணைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் அறிகுறியற்றவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

H10N3 தொற்றால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது வல்லுநர்கள் எச்சரிக்கை செய்வார்கள். ஒரே ஒரு வழக்கு மட்டுமே பதிவாகியிருப்பதால் கவலை இல்லை.

பறவைகளில் அவியன் வைரஸ் சுழற்சி இருக்கும் வரை மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் ஏற்படுவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. இது ஒரு இன்ஃப்ளூயன்ஸா தொற்றுநோயின் அச்சுறுத்தல் தொடர்ந்து உள்ளது என்பதற்கான தெளிவான நினைவூட்டலாகும்" என்று WHO ராய்ட்டர்ஸிடம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த திரிபு மிகவும் பொதுவான வைரஸ் இல்லை. 2018 வரையிலான 40 வருடங்களில் 160 தனிப்படுத்தப்பட்ட வைரஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று ஃபிலிப் க்ளீஸ் அறிவித்துள்ளது. நாடுகடந்த விலங்கு நோய்களுக்கான அவசர மையத்தின் பிராந்திய ஆய்வக ஒருங்கிணைப்பாளர் ஆவார்.

இருப்பினும், காய்ச்சல் வைரஸ்கள் விரைவாக உருமாறி, பண்ணைகளில் அல்லது புலம் பெயர்ந்த பறவைகளிடையே “மறுசீரமைப்பு” என அழைக்கப்படும் பிற விகாரங்களுடன் கலக்கக்கூடும், அதாவது அவை மனிதர்களுக்கு பரவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

மேலும் படிக்க : கொரோனா வைரஸ் உண்மையிலேயே எங்கிருந்து பரவியது?

நமக்கு இன்னும் தெரிய வேண்டியது என்ன?

பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் நடத்தப்பட்ட மரபணு வரிசை ஆராய்ச்சி முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. அது இருந்தால் மட்டுமே முழுமையான ஆபத்து குறித்து மதிப்பீடு செய்ய இயலும்.

இந்த திரிபு எவ்வாறு மனிதர்களின் செல்களில் தாக்குதல் நடத்துகிறது என்பதை அறிய ஆராய்ச்சியாளர்கள் விரும்புவார்கள்.

H5N1 என்ற வைரஸ் 1997ம் ஆண்டு மனிதர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியது. உலக அளவில் 455 மக்கள் இந்த வைரஸிற்கு பலியானார்கள்.

சில mutation-களில் ஒரு நபரிடம் இருந்து மற்றொரு நபருக்கு வைரஸ் பரவும் திறனை H5N1 பெற்றது என்று ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் பொதுசுகாதார பிரிவில் பேராசிரியராக இருக்கும் பென் கவ்லிங் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

China
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment