Hepatitis C drugs for Corona Virus : கொரோனா வைரஸ் சார்ஸ்-CoV-2-ல் காணப்படும் ஓர் முக்கியமான புரத என்ஜைமை (enzyme) தடுப்பதற்குப் பல ஹெபடைடிஸ் சி மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்க எரிசக்தித் துறையின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த சோதனைகளுக்குத் தலைமை தாங்கினர். அதன் முடிவுகள் பத்திரிகையில் வெளியிடப்படுகின்றன.
ஸ்பைக் புரதத்தைப் பயன்படுத்தி மனித உயிரணுக்குள் நுழைந்தவுடன், கொரோனா வைரஸ் பிரதான புரோட்டீயேஸ் (protease) எனப்படும் என்ஜைமை பிரதிபலிக்கிறது. கொரோனா வைரஸ் சேர்மங்களின் நீண்ட சங்கிலிகளை வெளிப்படுத்துகிறது. அவை செயல்பாட்டுப் புரதங்களாக மாற முக்கிய புரதத்தால் வெட்டப்பட வேண்டும். எனவே, முக்கிய புரோட்டீயேஸின் செயல்பாட்டைத் தடுப்பது, கோவிட் -19 நோயாளிகளுக்கு வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு வழிவகுக்கும்.
இந்த புதிய ஆய்வு, மற்ற வைரஸ் நோய்களுக்கு ஏற்கெனவே உள்ள மருந்துகளை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம் கோவிட் -19-க்கான சிகிச்சையை விரைவாக உருவாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதிதான்.
சாத்தியமான மறுபயன்பாட்டு முயற்சிகளுக்கு ஆராய்ச்சியாளர்கள் பல நன்கு அறியப்பட்ட மருந்து மூலக்கூறுகளை ஆராய்ந்தனர். இவற்றில் டெலபிரேவிர், நர்லபிரேவிர் மற்றும் போஸிபிரெவிர் ஆகிய மூன்று ஹெபடைடிஸ் சி புரோட்டீயேஸ் தடுப்பான்கள் இருந்தன.
புரோட்டீயேஸுக்கும் மருந்து மூலக்கூறுகளுக்கும் இடையில் உருவாகும் வேதியியல் பிணைப்புகளின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்க, அறை வெப்பநிலை எக்ஸ்ரே அளவீடுகளைச் செய்தது மருத்துவக் குழு. சில ஹெபடைடிஸ் சி மருந்துகள் முக்கிய புரோட்டீயேஸ்களை, குறிப்பாக போஸ்பிரெவிர் மற்றும் நர்லபிரேவிர் ஆகியவற்றைப் பிணைக்கும் மற்றும் தடுக்கும் திறனில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை இந்த சோதனை முடிவுகள் அளித்தன.
இந்த ஆய்வு, வைட்ரோ என்ஜைம் இயக்கவியல் (vitro enzyme kinetics) எனப்படும் ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தியது. இது புரோட்டீயேஸுடன் தடுப்பானின் பிணைப்பு உறவை அளவிட ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. பிணைப்பு உறவு அதிகமானால், புரோட்டீயேஸின் செயல்பாட்டைத் தடுப்பதில் தடுப்பான் (inhibitor) உதவும். புரோட்டீயேஸின் பிணைப்பு தடுப்பான் மூலக்கூறின் அளவு மற்றும் கட்டமைப்பிற்கு ஏற்ப, அதன் வடிவத்தை மாற்ற அல்லது மாற்றியமைக்கும் திறனின் வித்தியாச நிகழ்வு குறித்தும் இந்த ஆய்வு கூறுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”