Advertisment

இந்தி தினம்: இந்தியின் அந்தஸ்து குறித்த விவாத வரலாறு

இந்தி மொழி வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் பேசப்படும் மொழியாக இருப்பதால் அது நாட்டின் தேசிய மொழிவழி ஒருங்கிணைப்புக்கு பாதுகாப்பான வாய்ப்பக பார்க்கப்பட்டது. இருப்பினும், இந்தி பேசாத நாட்டின் பெரும் பகுதியினர் இந்த யோசனையில் மகிழ்ச்சியடையவில்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Hindi Diwas, Hindi Diwas news, Hindi Diwas explained, Hind official language, இந்தி தினம், இந்தி அலுவலக மொழி, இந்தியா, Hindi official language India, Constituent Assembly of India, Indian Express

இந்தியை சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றுவதற்கான வாய்ப்பு, பல்வேறு மொழிகள், எழுத்து வடிவங்கள் மற்றும் பேச்சுவழக்குகளைக் கொண்ட நாட்டில் ஒருங்கிணைக்கும் சக்தியைக் கண்டறிய வேண்டியதன் அவசியத்தில் வேரூன்றியுள்ளது.

Advertisment

ஆண்டுதோறும் இந்தி தினம் கொண்டாட்டம் செப்டம்பர் 14, 1949 அன்று, இந்திய அரசியலமைப்புச் சபை இந்தியை மத்திய அரசின் அலுவல்பூர்வமான மொழியாக்க முடிவெடுத்த நாளை நினைவுகூருகிறது. அதே நேரத்தில், அதில், ஆங்கிலம் 15 ஆண்டுகளுக்கு இணை மொழி என்ற அந்தஸ்த்தில் வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது.

முன்ஷி-அய்யங்கார் ஃபார்முலா என்று அழைக்கப்படும் இது, வரைவுக் குழு உறுப்பினர்களான கே.எம்.முன்ஷி மற்றும் என்.கோபாலசுவாமி அய்யங்கார் ஆகியோரின் பெயரால் அழைக்கப்பட்டது. இந்த குழு இந்தி ஆதரவாளர்கள் மற்றும் ஆங்கிலத்திற்கு அரசியலமைப்பு அந்தஸ்து வேண்டும் என்று விரும்பிய தென்னிந்தியாவில் இருந்து வந்த பிரதிநிதிகளின் கோரிக்கைகளை கணக்கில் எடுத்துக்கொண்டது.

இந்தியின் ஆதிக்கம் பற்றிய விவாதம் புதிதல்ல. 1800-களின் நடுப்பகுதியில் இருந்து, இந்திய துணைக்கண்டத்தின் அம்மொழி பேசப்படும் பகுதிகளில் உருதுவுடன் முரண்பட்டது. இன்று நாம் அதை ‘இந்தி பகுதி’ என்று அழைக்கிறோம்.

இந்தி - உருது பலப்பரிட்சை

வரலாற்றாசிரியர் சுமித் சர்க்கார், ‘நவீன இந்தியா: 188-1947’ (1989) என்ற தனது புகழ்பெற்ற புத்தகத்தில், “உருது வட இந்தியாவின் பெரும்பகுதியில், இஸ்லாமியர்களுக்கு கண்ணியமான கலாச்சாரத்தின் மொழியாக இருந்த அளவுக்கு இந்துக்களுக்கு இல்லை” என்று குறிப்பிட்டார். 1881-90-க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியை விட இரண்டு மடங்கு உருது புத்தகங்கள் ஐக்கிய மாகாணங்களில் வெளியிடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். பத்திரிகைகளுக்கும் இதே நிலைதான் இருந்தது. இந்தியில் வெளியான 8002 செய்தித்தாள்களுடன் ஒப்பிடுகையில் 16,256 உருது செய்தித்தாள்கள் வெளியானது.

ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்திய துணைக்கண்டத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் விஷயங்கள் மாறத் தொடங்கின. 1800 களின் நடுப்பகுதியில், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது நிலையை உறுதிப்படுத்தத் தொடங்கியபோது, ​​நாட்டின் பெரும் பகுதி முகலாய ஆட்சியின் கீழ் இருந்தன. பாரசீக மொழி அதிகாரப்பூர்வ நீதிமன்ற மொழியாக இருந்தது. 1830 களில், ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்தின் உயர் மட்டங்களில் பாரசீக மொழிக்கு பதிலாக ஆங்கில மொழியைப் பயன்படுத்தியது. உள்ளூர் வட்டார மொழிகள் கீழ் நிலைகளில் பயன்பாட்டில் இருக்கும். வட இந்தியாவின் உள்ளூர் மக்களிடையே உருது மொழியின் தற்போதைய பிரபலத்தின் அடிப்படையில், அரசாங்க சேவையின் கீழ் மட்டங்களில் அது ஒரு புதிய ஆதிக்கத்தை செலுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் வட இந்தியாவில் ஏற்பட்ட சமூக-அரசியல் மாற்றங்கள், இந்தி மற்றும் உருது ஆகிய இரு வட்டார மொழிகளின் பிளவுகளுடன் அரசாங்கக் கல்வி முறையின் விரைவான விரிவாக்கத்துடன் சேர்ந்து கொண்டது. இரண்டு மொழிகளும் குறிப்பிட்ட சமூகத்திற்கு பிரத்தியேகமானவை அல்ல என்றாலும், பிராமணர், ராஜ்புத் மற்றும் பனியா சாதிகளை சேர்ந்தவர்கள் இந்தி பள்ளிகளுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், பாரசீக மற்றும் உருது பள்ளிகள் முஸ்லீம்கள் மற்றும் காயஸ்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்ததாகவும் அக்கால ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இதன் விளைவாக, பிந்தைய சமூகங்கள் அரசாங்க சேவைகளில் பணியமர்த்துவதை எளிதாகக் கண்டறிந்தனர்.

நிர்வாகத்தில் ஒரு வேலையைப் பெறுவதற்கான ஆசை, இந்தியின் பல ஆதரவாளர்களை அதன் தகுதிகளை பேசத் தூண்டியது. அது துணைக்கண்டத்தின் பூர்வீக குடிகளின் மொழி என்பதும், முகலாய ஆட்சியின் போக்கில் அது அடக்கப்பட்டது என்பது உட்பட பேசப்பட்டது. இந்தி இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பரதேந்து ஹரிச்சந்திரா மற்றும் அகில பாரதிய இந்து பரிஷத்தை நிறுவிய பண்டிட் மதன் மோகன் மாளவியா போன்றவர்கள் இந்தியை பிரபலப்படுத்துவதற்கான இயக்கத்தின் முக்கிய நபர்களாக இருந்தனர். நகரி பிரச்சாரினி சபா பனாரஸ், அலகாபாத்தில் இந்தி சாகித்ய சம்மேளனம் மற்றும் ராஷ்ட்டிர பாஷா பிரச்சார சமிதி போன்ற அமைப்புகள் வட இந்தியாவின் பெரும் பகுதிகளில் ஹிந்தியை மேம்படுத்தும் குறிப்பிட்ட நோக்கத்துடன் வளர்ந்தன.

இறுதியாக ஒரு சமரசம் எட்டப்பட்டது, அதில் இந்தியுடன் ஆங்கிலமும் 15 ஆண்டுகளுக்கு இந்தியாவின் அலுவல் மொழியாக மாற்றப்பட்டது. காலத்தின் முடிவில், அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் ஒரே மொழியாக ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தி மாறும் என்றனர்.

மேலும், அரசியலமைப்பின் 351வது பிரிவு, இந்தி மொழியை அனைத்து தகவல்களையும் வெளிப்படுத்தும் வழிமுறையாக செயல்படும் வகையில் அதை முன்னெடுக்கவும் மேம்படுத்தவும் கேட்டுக் கொண்டது.

இந்தி எதிர்ப்பு முதல் இந்தி தினம் வரை

15 ஆண்டு காலம் முடிவடைந்தபோது, ​​இந்தி பேசாத இந்தியாவின் பெரும்பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படும் என்ற அச்சத்தில் போராட்டங்கள் வெடித்தன. 1965 ஜனவரியில் மதுரையில் தொடங்கிய கலவரம், விரைவில் சென்னைக்கும் பரவியது. போராட்டங்களின் விளைவாக, அலுவல் மொழிச் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. அதில் இந்தியுடன் ஆங்கிலம் தொடர்ந்து அதிகாரப்பூர்வ மொழியாக நிலைநிறுத்தப்படும் என்று கூறியது.

அடுத்தடுத்த ஆண்டுகளில், இந்தி மொழியை இந்தியாவின் ஒருங்கிணைக்கும் மொழியாகப் பிரச்சாரம் செய்ய அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றில் இந்தி தினம் கொண்டாட்டமும் ஒன்று.

இந்தி பேசுபவர்களின் எண்ணிக்கை

2011 மொழிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அரசியலமைப்பின் 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகள் உட்பட 121 தாய்மொழிகள் உள்ளன.

52.8 கோடி தனிநபர்கள் அல்லது 43.6% மக்கள் இந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக அறிவிக்கிறார்கள். அடுத்ததாக அதிகபட்சமாக பெங்காலியை 9.7 கோடி மக்கள் (8%) தாய்மொழியாக அறிவித்துள்ளனர் - இது இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவானது.

இந்தி தெரிந்தவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, இந்த எண்ணிக்கை நாட்டின் பாதிக்கு மேல் உள்ளது. ஏறக்குறைய 13.9 கோடி (11% க்கும் அதிகமானோர்) இந்தியை இரண்டாவது மொழியாக அறிவித்துள்ளனர். மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 55% பேருக்கு இந்தி மொழி தாய்மொழி அல்லது இரண்டாவது மொழியாக உள்ளது.

இந்தி பல பத்தாண்டுகளாக இந்தியாவின் முக்கிய தாய்மொழியாக இருந்து வருகிறது. அடுத்தடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்கள்தொகையில் அதன் பங்கு அதிகரித்து வருகிறது.

1971 இல், 37% இந்தியர்கள் இந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக அறிவித்தனர். இது அடுத்த நான்கு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 38.7%, 39.2%, 41% மற்றும் 43.6% ஆக உயர்ந்துள்ளது.

1971 மற்றும் 2011 க்கு இடையில், தங்கள் தாய்மொழியை இந்தி என்று அறிவித்த தனிநபர்களின் எண்ணிக்கை 2.6 மடங்கு அதிகரித்து 20.2 கோடியிலிருந்து 52.8 கோடியாக உயர்ந்துள்ளது. பஞ்சாபி, மைதிலி, பெங்காலி, குஜராத்தி மற்றும் கன்னடம் ஆகியவற்றில் இந்த எண்ணிக்கை இருமடங்காகவும், மராத்தியில் கிட்டத்தட்ட இரு மடங்காகவும் அதிகரித்தது.

இந்தியாவில் ஆங்கிலத்தின் நிலை

ஆங்கிலம், இந்தியுடன், மத்திய அரசின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாகும். ஆனால், அது 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் இல்லை. இது 99 திட்டமிடப்படாத மொழிகளில் ஒன்றாகும். தாய்மொழியைப் பொறுத்தவரை, 2011 இல் இந்தியாவில் ஆங்கிலம் பேசுபவர்களின் எண்ணிக்கை 2.6 லட்சம் மட்டுமே உள்ளனர்.

2011-இல் இரண்டாவது மொழியாக இந்தி மொழி பேசுவதாக 13.9 கோடி பேர் தெரிவித்தனர். அதற்கு அடுத்தபடியாக, 8.3 கோடி பேர் ஆங்கிலத்தை பேசுவதாக தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hindi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment