Advertisment

பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப்பின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
historical significance of Nankana Sahib in Pakistan? - பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப்பின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?

historical significance of Nankana Sahib in Pakistan? - பாகிஸ்தானில் உள்ள நங்கனா சாஹிப்பின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?

பாகிஸ்தானின் நங்கனா சாஹிப் பகுதியில், இஸ்லாமியர் ஒருவர், சீக்கிய பெண் ஜக்கித் கௌர் என்பவரை கடத்திச் சென்று, இஸ்லாமியராக மாற்ற முயற்சி செய்து, திருமணம் செய்ய முற்பட்டது தொடர்பாக, ஸ்ரீ ஜனம் அஸ்தான் குருத்வாராவில் வன்முறை நிகழ்ந்தது.

Advertisment

இத்தாக்குதலில் சீக்கிய மதத்தை சேர்ந்த ரவீந்தர் சிங் என்பவர் கொல்லப்பட்டார். இதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தது.

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல்; உயிர் சேதம் ஏதும் இல்லை என ஈராக் இராணுவம் அறிவிப்பு

மேலும் பாகிஸ்தான் அரசிடம், ஒரு சார்பு தன்மையுடன் செயல்பட வேண்டாம் என்றும், இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து கடுமையான தண்டனைகள் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. மேலும் தங்கள் நாட்டில் இருக்கும் சிறுபான்மையினரை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மாறாக மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

நங்கனா சாஹிப்பின் வரலாற்று முக்கியத்துவம் என்ன?

நங்கனா சாஹிப் என்பது பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 80,000 பேர் வசிக்கும் ஒரு நகரமாகும், அங்கு தான் குருத்வாரா ஜனம் அஸ்தான் (நங்கனா சாஹிப் குருத்வாரா என்றும் அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது. சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் 1469 இல் பிறந்ததாக நம்பப்பட்ட அவ்விடத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது. இது லாகூருக்கு மேற்கே 75 கி.மீ தொலைவில் உள்ளது. நங்கனா சாஹிப் மாவட்டத்தின் தலைநகரம் இதுவேயாகும்.

இந்த நகரம் முன்னதாக 'தல்வாண்டி' என்று அழைக்கப்பட்டது. ராய் போய்(Rai Bhoi) என்ற செல்வந்த நில உரிமையாளரால் இது நிறுவப்பட்டது. ராய் போயின் பேரன், ராய் புலார் பட்டி, குருவின் நினைவாக நகரத்திற்கு ‘நங்கனா சாஹிப்’ என்று பெயர் மாற்றினார். ‘சாஹிப்’ என்பது அரபு வம்சாவளியைச் சேர்ந்த மரியாதை சொற்றொடராகும்.

குருத்வாரா ஜனம் அஸ்தன் தவிர, நங்கனா சாஹிப்பில் குருத்வாரா பட்டி சாஹிப், குருத்வாரா பால் லீலா, குருத்வாரா மல் ஜி சாஹிப், குருத்வாரா கியாரா சாஹிப், குருத்வாரா தம்பு சாஹிப் உள்ளிட்ட பல முக்கியமான ஆலயங்கள் உள்ளன - இவை அனைத்தும் முதல் குருவின் வாழ்க்கை கட்டங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டவை. குரு அர்ஜன் (5 வது குரு) மற்றும் குரு ஹர்கோபிந்த் (6 வது குரு) ஆகியோரின் நினைவாக ஒரு குருத்வாராவும் உள்ளது. குரு ஹர்கோபிந்த் 1621-22ல் நகரத்திற்கு மரியாதை செலுத்தியதாக நம்பப்படுகிறது.

முல்தான் போரில் இருந்து திரும்பும் போது 1818-19ல் நங்கனா சாஹிப்பைப் பார்வையிட்ட பின்னர், மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் ஜனம் அஸ்தான் ஆலயம் கட்டப்பட்டது.

சிங்கப்பூர் விமானத்தில் தமிழில் அறிவிப்புகள்! தாய்மொழிக்கு பெருமை சேர்த்த விமானி!

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​1921ம் ஆண்டில் குருத்வாரா ஜனம் அஸ்தான் ஒரு வன்முறை நிகழ்வின் தளமாக இருந்தது. 130க்கும் மேற்பட்ட அகாலி சீக்கியர்கள் சன்னதியின் Mahantகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குருத்வாரா சீர்திருத்த இயக்கத்தின் முக்கிய மைல்கற்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது 1925 ஆம் ஆண்டில் சீக்கிய குருத்வாரா சட்டத்தை நிறைவேற்ற வழிவகுத்தது. மேலும், குருத்வாராக்களின் மகாந்த் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்தது.

சுதந்திரம் வரை, நங்கனா சாஹிப்பின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சமமான முஸ்லிம்கள், சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் இருந்தனர். பிரிவினைக்கு பிறகே அங்கு முஸ்லீம்களின் தொகை கூடியது.

Pakistan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment