Advertisment

இந்தியாவில் ரஷ்ய ஆயுதங்களின் தேவை எவ்வளவு தெரியுமா?

இந்தியாவின் ஏவுகணைத் திட்டங்களும் கூட ரஷ்யா அல்லது சோவியத் யூனியனின் குறிப்பிடத்தக்க உதவியுடன் உருவாக்கப்பட்டது. இந்தியா விரைவில் ஏற்றுமதி செய்ய இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author-image
WebDesk
New Update
How dependent is India on Russian weapons

 Krishn Kaushik

Advertisment

How dependent is India on Russian weapons: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பால் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கும் உடனடியான தாக்கம் என்பது விரைவாக, அந்த நாட்டில் இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர வேண்டும் என்ற அழுத்தம் தான். ஆனால் நீண்ட காலத்திற்கான தாக்கங்களும் போரினால் ஏற்படும் என்பது தெளிவாகிறது.

உக்ரைன் நகரங்களில் ரஷ்யா தொடர்ந்து சண்டையிட்டு வருகின்ற நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு நெருக்கடியை சந்தித்தாலும் புதுடெல்லி, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கும், வரலாற்று ரீதியான உறவை கொண்டுள்ள ரஷ்யாவுக்கும் மத்தியில் சுமூகமான வழியில் நடக்க முயற்சிக்கிறது.

அமெரிக்கா மற்றும் இதர உலக நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதார தடை விதித்து வருகின்ற நிலையிலும், தன்னுடைய நிலைப்பாட்டை சிறிது சிறிதாக மாற்றிவருகின்ற டெல்லியின் நடவடிக்கை ரஷ்யா கவனித்து வருவதாலும் நீண்ட கால தாக்கங்கள் குறிப்பாக பல ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஆயுத வர்த்தகத்தில் பெரிய அளவில் ஏற்படும்.

Russia Ukraine Crisis Live: புதின் கண்டிப்பாக விலை கொடுத்தே தீர வேண்டும்.. அமெரிக்க அதிபர் எச்சரிக்கை!

இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான ஆயுத ஒப்பந்தங்கள் எவ்வளவு பலமானதாக இருக்கிறது?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தன்னுடைய ஆயுத தேவைகளுக்காக பெரிதும் இங்கிலாந்து மற்றும் இதர மேற்கத்திய நாடுகளையே அதிக அளவில் நம்பி இருந்தது. ஆனால், இந்த சார்பு நிலை குறைய ஆரம்பித்தது. 1970களில் இந்தியா சில ஆயுதங்களை அன்றைய சோவியத் யூனியனிடம் இருந்து இறக்குமதி செய்தது. பின்னாட்களில் இந்தியாவில், அடிப்படை மற்றும் அதிநவீன ஆயுதங்கள் உட்பட அதிக அளவில் ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக ரஷ்யா உருப்பெற்றது. உண்மையில், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிகள், டாங்கிகள், துப்பாக்கிகள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உட்பட இந்தியாவுக்கு அவ்வப்போது தேவைக்கேற்ப மிக முக்கியமான ஆயுதங்களை ரஷ்யா வழங்கியுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காததற்கு, இருநாடுகளுக்கும் இடையே, இன்றும் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் ஆயுத வர்த்தகமும் ஒரு காரணம் என்று சிலர் கூறுகின்றனர். இருப்பினும் இந்தியா - ரஷ்யா உறவை இந்த கோணத்தில் மட்டும் பார்க்கக் கூடாது.

காலம் காலமாக ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் இந்தியா ரஷ்யாவை ஓரளவு சார்ந்துள்ளது என்று கூறலாம். இந்தியா தன்னுடைய நவீன தேவைகளுக்காக ஆயுதங்களை வாங்கும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நினைத்தாலும் கூட ரஷ்யா ஆயுதங்கள் இந்தியாவில் பெரிய பங்கைக் கொண்டுள்ளது. ஒரு மதிப்பீட்டின் படி இந்திய ராணுவத்தில் உள்ள ரஷ்ய ஆயுதங்களின் பங்கு 85%க்கும் அதிகமாக உள்ளது.

2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டிம்சோன் மையத்தில் மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து சமீர் லால்வானி வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையில், ”ரஷ்ய ஆயுதங்களின் பங்கு இந்திய ராணுவத்தில் 60% தான் இருக்கிறது என்று அடிக்கடி கூறப்பட்டாலும் உண்மையில் ஆராய்ச்சி முடிவுகள் ரஷ்ய ஆயுதங்களின் பங்கானது 85% ஆக உள்ளது. இந்த மதிப்பு ஒரு “மாட்டிக்-கொண்ட” விளைவை ஏற்படுத்தும். ஆனால் இந்திய தொழில்நுட்ப அடிதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஆழமான ஆதரவு, முக்கிய மூலோபய வட்டங்களில் அதிக அளவு நம்பிக்கையையும் கடனையும் ஏற்படுத்தியுள்ளது.

நீடித்த ஆயுத வர்த்தகம் மற்றும் ரஷ்யாவுடனான அரசியல் உறவு ஆகியவை நேரடியாகவும் அல்லது மறைமுகமாகவும் இராணுவக் கோட்பாட்டை வடிவமைத்த மூலோபாய சிந்தனையின் பரவலுக்கு வழிவகுத்துள்ளன என்பதை நிரூபிக்க மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளது என்பதையும் அந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது.

அணு ஆயுதப் போர்… புதின் விடுத்த மிரட்டல் அதிபயங்கரமானதா?

How dependent is India on Russian weapons

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியுள்ள ஆயுதங்களின் மதிப்பு என்ன?

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிகமாக ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடு ரஷ்யாவாகும். 2016-2020 காலகட்டத்தில் அமெரிக்காவின் ஆயுத வர்த்தகத்தின் பங்கு 37% ஆக இருந்த நிலையில் ரஷ்யாவின் இறக்குமதி 20% -ஆக இருந்தது என்று, உலகில் உள்ளா ஆயுதங்கள் மற்றும் ராணுவத்திற்கான செலவீனத்தை ஆய்வு செய்யும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

ரஷ்யாவுக்கு இந்தியா மிகப்பெரிய இறக்குமதியாளர். இந்தியாவிற்கு ரஷ்யா ஆயுதங்களை வழங்கும் மிகப் பெரிய ஏற்றுமதி நாடு. 2000 முதல் 2020 வரையிலான 20 ஆண்டுகளில் ராணுவ ஆயுதங்களில் 66.5%-த்தை ரஷ்யா இந்தியாவுக்கு செய்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியா ஆயுத இறக்குமதிக்காக ஒதுக்கிய 53.85 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியில் 35.82 பில்லியன் அமெரிக்க டாலர் ரஷ்யாவை சென்றடைந்துள்ளது. இதே காலத்தில் அமெரிக்காவில் இருந்து 4.4 பில்லியன் டாலர்கள் மற்றும் இஸ்ரேலில் இருந்து 4.1 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை இந்தியா இறக்குமதி செய்திருக்கிறது.

மார்ச் 2021 இல் வெளியிடப்பட்ட சர்வதேச ஆயுத பரிமாற்ற போக்குகள் குறித்த SIPRI அறிக்கையின்படி, 2016 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலத்தில் ரஷ்யா 45 நாடுகளுக்கு முக்கிய ஆயுதங்களை வழங்கியது. ஆனாலும் இந்தியா ரஷ்ய ஆயுதங்களைப் பெறும் மிக முக்கியமான நாடாக இருந்தது. ரஷ்யாவின் ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 23% ஆயுதங்களை இந்தியா பெற்றிருந்தது. அதனை தொடர்ந்து சீனா அதிக அளவு ஆயுதங்களை ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது.

இந்திய ஆயுத இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு 2016 மற்றும் 2020க்கு இடையில் சுமார் 50 சதவிகிதம் வரை குறைந்திருந்தாலும் பெரிய ஒற்றை இறக்குமதியாளராகவே இந்தியா உள்ளது. “போர் விமானங்கள் உட்பட இந்தியாவுடனான பல பெரிய ரஷ்ய ஆயுத ஒப்பந்தங்கள் 2020 க்குள் முடிக்கப்பட்டாலும், 2019-20 இல் இந்தியா பல்வேறு ரஷ்ய ஆயுதங்களுக்கு புதிய ஆர்டர்களை வழங்கியது. அடுத்த ஐந்து வருடங்களில் இது ரஷ்ய ஆயுத ஏற்றுமதியை அதிகரிக்க வழிவகுக்கும்” என்று SIPRI தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

How dependent is India on Russian weapons

இந்தியாவுக்கு ரஷ்யா எத்தகைய ஆயுதங்களை வழங்கியுள்ளது?

கிட்டத்தட்ட அனைத்து வகையான ஆயுதங்களும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போர் சூழலில் தற்போது 2 பெரிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் நெருக்கடியை சந்திக்கலாம். அதிநவீன S-400 Triumf வான்-பாதுகாப்பு அமைப்பின் ஐந்து அலகுகளை வாங்குவதற்கான ஒப்பந்தம் இதில் முதலும் முக்கியமானதும் ஆகும். உலகில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட ஆயுதம் ஆகும். இந்தியா 2018ம் ஆண்டு 5 பில்லியன் டாலர்களுக்கு 5 அலகுகளை ஒப்பந்தம் செய்தது. 2021ம் ஆண்டு முதல் அலகு இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு அது பஞ்சாபில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் இணைக்கப்பட்டது. அமெரிக்கா இன்னும் முடிவு செய்யாத நிலையில், இந்த ஒப்பந்தம் அமெரிக்க பொருளாதாரத் தடைகளின் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யா மீதான புதிய பொருளாதார தடைகள் ஒப்பந்தத்தின் சாத்தியங்களை கேள்விக்குறியாக்கும்.

அதே போன்று அமேதியில் உள்ள தொழிற்சாலையில் 6 லட்சம் ஏ.கே. 203 துப்பாக்கிகளை உற்பத்தி செய்ய இந்தியாவும் ரஷ்யாவும் ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த இரண்டு ஒப்பந்தங்களைத் தவிரஇந்திய கப்பற்படைக்காக, பி75-ஐ திட்டத்தின் கீழ் 6 ஏ.ஐ.பி. நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க நான்கு நாடுகளுன் ரஷ்யாவும் முன்வந்துள்ளது. இறுதி முடிவு இன்னும் எட்டப்படவில்லை.

இந்தியா முதன்முதலான பெற்ற நீர்மூழ்கிக் கப்பலும் கூட ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்டது தான். முதல் ஃபோக்ஸ்ட்ராட் க்ளாஸ் நீர்மூழ்கிக் கப்பல் சோவியத் யூனிய்டம் இருந்து பெறப்பட்டு இந்திய சேவையில் அது ஐ.என்.எஸ். கல்வாரியாக 1967ம் ஆண்டு இணைக்கப்பட்டது. இந்திய கடற்படையில் உள்ள மொத்த 16 வழக்கமான டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்களில், எட்டு ”கிலோ கிளாஸ்” வகையைச் சேர்ந்தவை. அவை அனைத்தும் சோவியத்தில் தயாரிக்கப்பட்டவை.

உக்ரைன் எல்லையில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்… போலந்து நாட்டுக்குள் நுழைவதில் என்ன சிக்கல்?

சக்ரா 3 மற்றும் சக்ரா 4 ஆகிய இரண்டு அணுசக்தி-பாலிஸ்டிக் நீர்மூழ்கிக் கப்பல்களை குத்தகைக்கு பெறவும் இந்தியா ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, அவற்றில் முதலாவது 2025ஆம் ஆண்டுக்குள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பும், ஐ.என்.எஸ் சக்ரா 1 மற்றும் ஐ.என்.எஸ் சக்ரா 2 ஆகியவை ரஷ்ய கப்பல்களாக இருந்தன. குத்தகை காலம் முடிந்த பிறகு திருப்பி அனுப்பப்பட்டது. இந்தியாவில், உள்நாட்டிலேயே 4 அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், நிறைய தொழில்நுட்பங்கள் ரஷ்ய தளங்களை அடிப்படையாகக் கொண்டவை.

இந்தியாவில் போர் விமானங்களை தாங்கிச் செல்லும் ஒரே ஒரு நீர் மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவும் சோவியத் தயாரிப்பான கீவ் வகை கப்பலாகும். இது 2013ம் ஆண்டு முதல் இந்திய கப்பற்படையில் செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக வடிவமைக்கப்பட்ட போர் கப்பலை தாங்கும் நீர் மூழ்கி விமானம் இந்த ஆண்டு கப்பற்படையில் இணைக்கப்படுகிறது.

இந்தியாவின் ஏவுகணைத் திட்டங்களும் கூட ரஷ்யா அல்லது சோவியத் யூனியனின் குறிப்பிடத்தக்க உதவியுடன் உருவாக்கப்பட்டது. இந்தியா விரைவில் ஏற்றுமதி செய்ய இருக்கும் பிரம்மோஸ் ஏவுகணை, ரஷ்யாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நூற்றுக்கணக்கான சுகோய் மற்றும் மிக் ஜெட் விமானங்கள் உட்பட இந்தியாவிற்கு போர் விமானங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாகும்.

How dependent is India on Russian weapons

2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட ரஷ்ய ஆயுத விற்பனை, பாதுகாப்புத் துறை பற்றிய அமெரிக்க காங்கிரஸின் ஆராய்ச்சி சேவை அறிக்கையில், உலகளாவிய பாதுகாப்பு, அரசியல் ஆபத்து மற்றும் இராணுவ மோதல் சிந்தனைக் குழுவான சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனத்தின் (IISS) மிலிட்டரி பேலன்ஸ் 2021 அறிக்கையின் புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டியுள்ளது. அதில், இந்திய ராணுவ ஆயுதக் கிடங்குகளில் இருக்கும் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யாவில் உருவாக்கப்பட்டவை அல்லது ரஷ்யவால் வடிவமைக்கப்பட்டவையாக உள்ளன என்று கூறியுள்ளது.

இந்திய ராணுவத்தின் முக்கிய போர் தாங்கி படையானது ரஷ்ய T-72M1 (66 சதவீதம்) மற்றும் T-90S (30 சதவீதம்) ஆகியவற்றை அதிகம் கொண்டது.

இந்திய கப்பற்படையின் ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலும் சோவியத் காலத்தில் பயன்பாட்டில் இருந்து கப்பலை மீட்டு உருவாக்கப்பட்டதாகும். அதில் பயன்படுத்தப்பட்டுள்ள போர் விமானங்களும், இலக்கை தாக்கி அழிக்கும் விமானங்களும் ரஷ்யாவால் உருவாக்கப்பட்டது அல்லது உரிமம் பெற்று இந்தியாவில் உருவாக்கப்பட்டதாகும். கடற்படையின் 10 வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்புக் கப்பல்களில் நான்கு ரஷ்ய காஷின் வகையைச் சேர்ந்தவை, மேலும் அதன் 17 போர்க் கப்பல்களில் 6, ரஷ்ய தல்வார் வகையைச் சேர்ந்தவை.

தன்னுடைய ஆயுத தளத்தை இந்தியா விரிவுபடுத்த விரும்புகிறதா?

கடந்த சில ஆண்டுகளாக ஆயுத தள தளங்களை மற்ற நாடுகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டிலும் விரிவுபடுத்தும் முயற்சிகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2011-15 மற்றும் 2016-20 க்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 33 சதவீதம் குறைந்துள்ளதாக SIPRI கடந்த ஆண்டு தனது சர்வதேச ஆயுத பரிமாற்ற போக்குகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. “2011-15 மற்றும் 2016-20 ஆகிய இரண்டிலும் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆயுதங்கள் சப்ளை செய்யும் நாடாக ரஷ்யா இருந்தது. இருப்பினும், இரண்டு காலகட்டங்களுக்கு இடையில் ரஷ்யாவின் விநியோகம் 53 சதவீதம் குறைந்துள்ளது மற்றும் மொத்த இந்திய ஆயுத இறக்குமதியில் அதன் பங்கு 70%ல் இருந்து 49%ஆக குறைந்தது. 2011-15 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு அமெரிக்கா இரண்டாவது பெரிய ஆயுத சப்ளையராக இருந்தது, ஆனால் 2016-20 ஆம் ஆண்டில் அமெரிக்காவிடமிருந்து இந்தியாவின் ஆயுத இறக்குமதிகள் முந்தைய ஐந்தாண்டு காலத்தை விட 46 சதவீதம் குறைந்தது. 2016-20 காலகட்டத்தில் அமெரிக்கா இந்தியாவிற்கு நான்காவது பெரிய சப்ளையர் ஆனது.

2016-20 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு ஆயுதம் வழங்கியதில் பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய நாடுகளாக அங்கம் வகித்தன.

2011-15 மற்றும் 2016-20 க்கு இடையில் இந்தியாவின் ஆயுத இறக்குமதியில் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்கு காரணம் அதன் சிக்கலான, நீண்ட கொள்முதல் செயல்முறைகள் தான் என்று தெரியவருகிறது. மேலும் தன்னுடைய தொடர்புகளை விரிவுபடுத்துவதுடன் ரஷ்ய ஆயுதங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் தன்னுடைய முயற்சிகளை மேற்கொண்டதால் இந்த நிலை உருவானது என்று அந்த அறிக்கை கூறுகிறது. உள்நாட்டிலேயே ஆயுதங்களை தயாரிப்பதற்கான தன்னுடைய லட்சியத் திட்டங்கள் கணிசமாக தாமதமாகி வருவதால், பாகிஸ்தான் மற்றும் சீனாவிடமிருந்து அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை இந்தியா உணர்ந்து, ஆயுத இறக்குமதிக்கான பெரிய அளவிலான திட்டங்களைத் திட்டமிட்டு வருகிறது.

போர் விமானங்கள், வான் பாதுகாப்பு அமைப்புகள், கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் சிறந்த விநியோகத்தின் அடிப்படையில், இந்தியாவின் ஆயுத இறக்குமதிகள் வரும் ஐந்து ஆண்டுகளில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எந்த ஒரு தேசத்தையும் அதிகம் நம்பாமல் இருக்க, இந்தியா தன்னுடைய தளத்தை பன்முகப்படுத்துவது முக்கியமானது. அந்த தேசத்தால் சுரண்டப்படக்கூடிய ஒரு அந்நியச்சக்தியாக மாறுக்கூடும் அபாயம் உள்ளது.

ரஷ்யாவின் ஆயுத விநியோகம் இன்றி இந்திய ராணுவம் முழு செயல்திறனுடன் செயல்பட முடியாது என்று இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். வருகின்ற காலங்களிலும் இந்தியா ரஷ்யாவை தன்னுடைய ஆயுத தேவைக்காக நம்பியிருக்கும். இதனை கருத்தில் கொண்டு, இந்தியாவில் மாஸ்கோவின் செல்வாக்கானது, வேற எந்த நாடும் ஏற்றுமதி செய்யாத ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை வழங்குவதற்கான அதன் விருப்பத்தின் மூலம் வருகிறது. ரஷ்யாவும் மேம்பட்ட ஆயுத தளங்களை ஒப்பீட்டளவில் கவர்ச்சிகரமான விலையில் தொடர்ந்து இந்தியாவிற்கு வழங்குகிறது என்று அமெரிக்க காங்கிரஸின் அறிக்கை குறிப்பிடுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Ukraine Russia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment