Advertisment

உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாறுபடும் கேரளா,காஷ்மீர்,மேற்கு வங்கம்... யோகியின் கூற்று சரியா?

சட்டம் - ஒழுங்கு முதல் குழந்தை ஊட்டச்சத்து வரை, பெண்களின் நிலை முதல் பொருளாதார அளவீடுகள் வரை, உத்தரப் பிரதேசம் மாநிலமானது அதன் முதல்வர் ஆதித்யநாத் குறிப்பிட்ட மூன்று மாநிலங்களை விட பின்தங்கியுள்ளது.

author-image
WebDesk
New Update
உத்தரப் பிரதேசத்தில் இருந்து மாறுபடும் கேரளா,காஷ்மீர்,மேற்கு வங்கம்... யோகியின் கூற்று சரியா?

உதித் மிஸ்ரா

Advertisment

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்குவதற்கு முன்பு, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்காளர்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அதில், என் மனதில் உள்ள ஒன்றை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். இந்த ஐந்தாண்டுகளில் நிறைய சிறப்பான விஷயங்கள் நடந்துள்ளன. ஜாக்கிரதை! நீங்கள் அதை மிஸ் செய்தால், இந்த ஐந்து வருட உழைப்பு வீணாகிவிடும். உத்தரப் பிரதேசம் காஷ்மீர், கேரளா மற்றும் வங்க தேசமாக மாற அதிக நேரம் எடுக்காது என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் ட்வீட் செய்த கேரள முதல்வர் பினராயி விஜயன், " யோகி ஆதித்தியநாத் பயப்படுவது போல் உபி கேரளாவாக மாறிவிட்டால், சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை அனுபவிக்க நேரிடம். மதம் மற்றும் சாதியின் பெயரில் மக்கள் கொலை செய்யப்படமாட்டார்கள். இதுதான், உ.பி மக்கள் விரும்புகீறார்கள் என்றார்.

யோகி ஆதித்யநாத் உ.பி.யை கேரளாவுடன் ஒப்பிடுவது இது முதல் முறையல்ல. அவரது தற்போதைய பதவிக்காலத்தின் ஆரம்பமான அக்டோபர் 2017இல் உ.பி.யின் சுகாதார அமைப்பிலிருந்து கேரளா கற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்திருந்தார்.

உ.பி.,யை மூன்று மாநிலங்களுடன் எப்படி யோகி ஒப்பிடுகிறார்?

ஒருவர் நூற்றுக்கணக்கான அளவுருக்கள் மூலம் மாநிலங்களை ஒப்பிடலாம் என்றாலும், நாங்கள் பொருளாதாரம், சட்டம் & ஒழுங்கு, சுகாதாரம் போன்ற பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்பட்ட சுமார் 30 அளவுருக்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (2021), இந்திய ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக் போன்ற பொது தரவுத்தளங்களிலிருந்து தரவு பெறப்பட்டுள்ளது. அனைத்து தரவுகளும் 2020-21 ஆம் ஆண்டின் தரவுகளை காட்டுகிறது.

  1. மக்கள்தொகை

இந்த பிரிவில் உ.பி., மற்ற மூன்று மாநிலங்களுக்குப் பின்னால் இருப்பது மட்டுமல்லாமல், தேசிய சராசரிக்கும் கீழே உள்ளது. மறுபுறம், கேரளா அனைத்து அளவுருக்களிலும் நான்கில் சிறந்த இடத்தில் உள்ளது.

எடுத்துக்காட்டாக, சராசரி ஆயுட்காலத்தில் உபி மற்ற மாநிலங்களை விட 7 முதல் 10 ஆண்டுகள் வரை பின்தங்கியுள்ளது.

publive-image

அதே சமயம், மேம்பட்ட குடிநீர் ஆதாரம் கொண்ட வீடுகள் என்ற பிரிவில், உ.பி., மற்ற மாநிலங்களை காட்டிலும் சிறப்பாக உள்ளது.

  1. பொருளாதாரம்

உ.பி., மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தேசிய சராசரியை விட மிகவும் மோசமாக உள்ளது.

உதாரணமாக, உ.பி.யின் தனிநபர் உள்நாட்டு உற்பத்தி மற்றவர்களை விட மிகக் குறைவாக உள்ளது, அதே போல், வறுமை, சமத்துவமின்மையும் மிகவும் பின்தங்கியுள்ளது.

publive-image

இந்த பிரிவில் அனைத்து மாநிலங்களை காட்டிலும் கேரளா சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக, தனிநபர் வருமானம் உ.பி.யை விட மூன்று மடங்கு அதிகம்.

மின்சாரம் பொருத்துவரை, உ.பி ஜம்மு & காஷ்மீர் விட இருமடங்கு அதிகாரத்தை அனுபவிக்கிறது.

  1. சட்டம் மற்றும் ஒழுங்கு

சட்டம் மற்றும் ஒழுங்கில் உயர் தரநிலை என்பது ஆதித்யநாத் அரசாங்கத்தின் மற்றொரு முக்கிய தேர்தல் கோரிக்கையாகும். ஆனால், ஊழல் வழக்குகள், கொலைகள் அல்லது பட்டியல் சாதியினருக்கு எதிரான குற்றங்களில் மற்ற மாநிலங்களை காட்டிலும் உ.பி பின்தங்கியுள்ளது.

publive-image

நிதி ஆயோக்கின் ஆதாரங்களின் அடிப்படையில், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகியவை உ.பி.யை விட சட்டம் மற்றும் ஒழுங்கில் மிகவும் சிறப்பாக உள்ளன.

  1. பெண்களின் நிலை

பெண்கள் சார்ந்த காரணிகள் பொறுத்தவரை இந்தியா மோசமான நிலையில் உள்ளது. மாநிலத்தின் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் செயல்பாட்டில் பெண்களின் நிலைதான், மாநிலம் எவ்வளவு முற்போக்கானது மற்றும் வெற்றிகரமானது என்பதை காட்டுகிறது.

அதுதவிர, பெண் கல்வியறிவு அல்லது கணவன் மனைவி வன்முறை அல்லது தொழிலாளர் படையில் ஆண்களுக்கு பெண்களின் விகிதம் ஆகியவற்றில், மற்ற மாநிலங்களை காட்டிலும் உபி பின்தங்கியுள்ளது. இதில், தேசிய சராசரியை விட உ.பி., மோசமாக உள்ளது.

ஆனால், UP தேசிய சராசரியை விட இரண்டில் அதிகளவில் உள்ளது. முதலாவது, வீடு அல்லது நிலம் வைத்திருக்கும் பெண்களின் சதவீதம் 52% ஆகும். இது, கேரளா, மேற்கு வங்கம் ஆகியவற்றை காட்டிலும் அதிகமாகும். அதேசமயம், சொந்தமாக மொபைல் போன் வைத்திருக்கும் பெண்களின் சதவீதம் சொத்து வைத்திருக்கும் சதவீதத்தை விட குறைவாக உள்ளது.

publive-image

இரண்டாவது, நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளில் இருக்கும் பெண்களின் விகிதாச்சாரம் அதிகமாக உள்ளது. இந்த அளவுருவில், உ.பி., தேசிய சராசரியை விட சிறந்து விளங்குவது மட்டுமின்றி, கேரளாவை மிகக் குறைவான வித்தியாசத்தில் முன்னிலையிலும் உள்ளது.

உ.பி.யில் ஒரு பெண்ணுக்கான குழந்தை அல்லது மொத்த கருவுறுதல் விகிதம் ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ள மூன்று மாநிலங்களிலையும் விட அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

  1. தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம்

தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்தியா மிகவும் மோசமான இடத்தில் உள்ளது. அடுத்த தலைமுறை தொழிலாளர்களின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் முக்கியமான அளவுருக்கள் இதுவாகும்.

publive-image

அட்டவணையின்படி, உ.பி. மாநிலம் மற்ற மூன்று மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கி உள்ளது. உண்மையில் கேரளா தேசிய சராசரியை விட மிகவும் சிறப்பாக உள்ளது.

  1. குழந்தை ஊட்டச்சத்து

உலகில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ள இளம் பருவத்தினராக மாறுகிறார்கள். இத்தகை பெண்கள், தாய்மார்களாக மாறும்போது மேலும் கவலையளிக்கிறது.

publive-image

முன்பு போல, இந்த பிரிவிலும் உ.பி.,பின்தங்கியுள்ளது. கேரளா மீண்டும் முன்னிலை வகிக்கிறது.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ளவை மட்டுமே நாம் பார்க்கவேண்டிய காரணிகள் கிடையாது. மற்ற மூன்று மாநிலங்களை விட UP சிறப்பாக இருக்கும் சில காரணிகள் இருக்கலாம். உண்மை என்னவென்றால், உ.பி. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இருந்தாலும், அரசியல் எழுச்சியுடன் பொருளாதாரங்களில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக இருந்தாலும், சராசரி அளவில் உ.பி. இன்னும் பின்தங்கிய நிலையில் உள்ளது. அந்த அளவுக்கு, உ.பி.யின் எந்த முதலமைச்சரும் குறிப்பிடத்தக்க சவாலை எதிர்கொள்கிறார்கள்.

இந்த கட்டுரை தொடர்பான கருத்துக்களையும், கேள்விகளையும் udit.misra@expressindia.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kerala Uttar Pradesh Yogi Adityanath
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment